ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Bala Murugan
Poems Songs for Lord Murugan Poems Songs for Lord Murugan - A. Parameswari Thanjappan, Sitiawan, MalaysiaA. Parameswari Thanjappan    
    அ. பரமேஸ்வரி தஞ்சப்பன்
    (சித்தியவான், மலேசியா)
   
   A. Parameswari Thanjappan
   (Sitiawan, Malaysia)

 English 
  in PDF format  
  PDF வடிவத்தில்  


 பட்டியல் 
 தேடல் 

 list 
search
previous page next page
 
அறுபடை வீடு
aRupadai veedu
 

அறுபடை வீடு அருகில் இல்லை
     அடிக்கடி செல்ல வசதியில்லை
அப்படி இப்படி பார்த்தேனடா - அட
     அழகன் வீடு என்னகத்திலடா

ஆறுவகை பண்பு உன் அறுபடை வீடு
     அதில் மணக்கோலம் உன் முதற்படையாகும்
நன்றியோடு வாழும் நரர்களுக்கு - முருகன்
     நாளும் தருவான் வாழ்வில் உயர்வையே

அலைகள் மோதுவது இரண்டாம்படை வீடு
     ஆங்கு, கடமை என்பது அடிப்படை ஏடு
இதை அறிந்து நாளும் ஒழுகுவோருக்கு - செந்தில்நாதன்
     அருளுவான் இகபர சௌபாக்கியமே

படிகள் அதிகம் மூன்றாம்படை வீடு - ஞான
     பண்டிதன் உறையும் பழநிமலையாம்
தர்மம் வழி என்றும் நிற்போருக்கு - ஆண்டியவன்
     தழைத்திட செய்வான் அவர்தம் வாழ்வையே

தந்தைக்கு பாடம் சொன்னது நான்காம்படை வீடு - அதில்
     தனிக்குருவாய் திகழும் சுவாமிமலையாம்
தன்னடக்கம் பேணும் பக்தருக்கு - குகன்
     தன்னில் காப்பான் சந்ததியே

செல்வியர் இருவருடன் நின்றது ஐந்தாம்படை வீடு
     செருத்தணி எனும் திருத்தணிகையாம்
செருக்கை துறந்து திருத்தாள் பணிவோருக்கு - சேனாதிபதி
     தருவான் வற்றா அருட் செல்வத்தையே

அவ்வைக்கு சுட்டப்பழம் ஈந்தது ஆறாம்படை வீடு
     அருள் பொங்கும் அழகு பழமுதிர்ச்சோலையாம்
ஆடிபாடி அன்பை பொழியும் உண்மை அன்பருக்கு - அவ்வழகன்
     ஆயுள்வரை அருள்வது அருள்ஞானத்தையே

நாளும் நாளும் என் உளறல் - நாதா
     நீயும் கேட்க வேண்டும்
பிஞ்சு மொழியால் உனை கொஞ்சிடவே
     பேதை இவளுக்கு வரம்தர வேண்டும்.

     அரோகரா!

(2016)

English transliteration

aRupadai veedu arugil illai
     adikkadi sella vasadhiyillal
appadi ippadi pArththEnadA - ada
     azhagan veedu ennagaththiladA

aRuvagai paNbu un aRupadai veedu
     adhil maNakkOlam un muthaRpadaiyAgum
nandriyOdu vAzhum narargaLukku - murugan
     nALum tharuvAn vAzhvil uyarvaiyE

alaigaL mOdhuvadhu iraNdAmpadai veedu
     Aangku, kadamai enbadhu adippadai Edu
idhai aRindhu nALum ozhuguvOrukku - sendhilnAdhan
     aruLuvAn igapara sowbAkkiyam

padigaL adhigam mUndrAmpadai veedu - njAna
     paNdidhan uRaiyum pazhanimalaiyAm
dharmam vazhi endrum niRppOrukku - AanDiyavan
     thazhaiththida seivAn avartham vAzhvaiyE

thandhaikku pAdam sonnadhu nAngkAmpadai veedu - adhil
     thanikguruvAi thigazhum suvAmimalayAm
thannadakkam pENum baktharukku - guhan
     thannil kAppAn sandhadhiyE

selviyar iruvarudan nindradhu aindhAmpadai veedu
     seruththaNi enum thiruththaNigaiyAm
serukkai thuRandhu thiruththAL paNivOrukku - sEnadhipadhi
     tharuvAn vatrA arut selvaththaiyE

avvaikku suttapazham eendhadhu AaRAmpadai veedu
     aruL pongkum azhagu pazhamudhirchchOlaiyAm
AadipAdi anbai pozhiyum uNmai anbarukku - avvazhagan
     Aayulvarai aruLvadhu aruLnjAnaththaiyE

nALum nALum en uLaRal - nAdhA
     neeyum kEtka vENdum
pinju mozhiyAl unai konjidavE
     pEdhai ivaLukku varamthara vENdum.

     arOharA!

இவரின் கவிதைப் பட்டியல்

poems by this author

 kandhA kandhA vA vA with mp3 audio 

cat Green  கந்தா கந்தா வா வா 
 azhagumugam cat Green  அழகுமுகம் 
 maRakaruNaiyil cat Green  மறகருணையில் 
 aiyanE murugaiyanE cat Green  ஐயனே முருகையனே 
 anbin uruvE cat Green  அன்பின் உருவே 
 saravaNabavan cat Green  சரவணபவன் 
 aRupadai veedu cat Green  அறுபடை வீடு 
 kummiyadi peNNE cat Green  கும்மியடி பெண்ணே 
 vELai vandhadhu cat Green  வேளை வந்தது 
 aRupadai azhagA cat Green  அறுபடை அழகா 
 vElum mayilum ninaikkaiyil cat Green  வேலும் மயிலும் நினைக்கையில் 
 thUya uRavu vENdum cat Green  தூய உறவு வேண்டும் 
 vazhiththuNai neeyE cat Green  வழித்துணை நீயே 
 aLLith tharum vaLLal cat Green  அள்ளித் தரும் வள்ளல் 
 mukthi vazhikAttu murugA cat Green  முக்தி வழிகாட்டு முருகா 

go to top
 பட்டியல்   PDF வடிவத்தில்  
 List   in PDF format  
previous page next page

Poems by Devotees of Lord Murugan - aRupadai veedu by A. Parameswari Thanjappan, Sitiawan, Malaysia


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top