முருகனுக்கான Poems for |
---|
காவடிப் பாடல்கள் - முன்னுரை Kavadi Songs – Introduction |
ரேவதி சங்கரன் சென்னை, தமிழ் நாடு Revathy Sankaran Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! காவடி - முருகன் வழிபாட்டில் முதலிடம் வகிப்பது காவடி. 'கா' என்றால் மரம். 'காவடி' என்னும் சொல் 'காவு தடி' என்பது மருவி உருவாயிருக்கிறது. சுமப்பவர்கள் இலகுவாக எடுத்துச் செல்வதற்காக ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு, அந்தத் தடியின் நடுப்பகுதி தோளிலிருக்குமாறு சுமந்துச் செல்வர். ஆகையினால் இது 'காவு தடி' என்பது 'காவடி' என மருவியது. இதை எடுத்துக்கொண்டு செல்பவர்கள் காலால் அடி எடுத்து, ஆட்டமாக ஆடிச் செல்வதனால் இது 'காவடி ஆட்டம்' என்றும் சொல்லப்பட்டது. இதைப்பற்றி ஒரு சிறு கதை உண்டு: அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு அமைய, சூரபத்மனின் நண்பனும் முருக பக்தனுமான இடும்பன், சக்திகிரி, சிவகிரி - இரண்டு மலைகளை தன்னுடைய காவுதடியில் சுமந்துகொண்டு பொதிகைமலை எடுத்துச் சென்றானாம். பழனியில் சுமையை இரக்கி வைத்துவிட்டு இளைப்பாறியபின் மீண்டும் தூக்க முயற்சித்தபொழுது அதை எடுக்கமுடியவில்லையாம். அப்பொழுது சிறு உருவத்தோடு முருகப்பெருமான் மலைமேல் இருந்துகொண்டு, இடும்பனைக் கண்டு நகைத்தானாம். சிறுவனைக் கண்டு பாய்ந்த இடும்பன் தவறி மலையிலிருந்து உருண்டு விழுந்தானாம். அவன் எழுந்த பிறகு பார்த்தபொழுது, முருகன் தன்னுடைய முழு உருவையும் காட்டி அவனை ஆட்கொண்டதால், இன்றும் முருகனுடைய அருள் பெருவதற்காக காவுதடி - காவடி - எடுத்து வரும் பக்தர்கள் குறை தீருகின்றது என்று நம்பப்படுகிறது. முருக வழிபாட்டில் காவடி எடுத்தல் ஒரு அம்சமாகவே உள்ளது. இந்தக் காவடியைக் 'கோவிலில் இடும்பன் சன்னிதியில் வைத்தபின்னரே எடுப்பது' என்று ஒரு வழக்கமும் இருக்கிறது. காவடி எடுத்து முருகன் கோவிலுக்குச் செல்லுவோர், தான் போகின்ற சிரமம் - நடைச் சிரமம் - தெரியாபடி, பாட்டுப்பாடியபடிச் செல்வர். அந்தப் பாடல்கள், பாரம்பரியமாக, வழிவழியாக, தாத்தா பேரனுக்கும், பேரன் அவனுடைய பேரனுக்கும் சொல்லித் தந்து, முருகனுடைய பக்தியானது தொன்றுதொட்டு வந்திருக்கின்றது. அந்தக் காவடிப் பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். |
ENG INTRODUCTION |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |