![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
|---|
| ஆடுங்கடீ Aadungkadee |
![]() | ![]() | ரேவதி சங்கரன் சென்னை, தமிழ் நாடு Revathy Sankaran Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா! ஆடுங்கடீ பெண்கள் பாடுங்கடீ ஆறுமுகன் அவன் கோயிலிலே வெள்ளிச் சிலம்பெடுத் தாடுங்கடீ வேலவன் வெள்ளித்தேர் ஓடையிலே! கூவுதுபார் மயில் கூவுதுபார் கோட்டைமதில் ஏறி கூவுதுபார் வேட்டைக்குப்போன சுப்பிரமணியர் கோட்டைக்கு வரவே கூவுதுபார்! சின்னக்கிணத்திலே கல்லுக்கட்டி சிங்காரவேட்டி துவைத்துடுத்தி வட்டமாகப்பொட்டு வச்சுக்கிட்டு வார சிங்காரத்தைப் பாருங்கடீ! கைகளில் விபூதிப்பையும் கொண்டு கழுத்தினில் உத்திராட்ச மாலைகொண்டு வருகின்ற வேடங்கள் அத்தனையும் வாழ்த்திக் கோலாட்டத்தைத் தட்டுங்கடீ! வள்ளி தெய்வானை இடதுபுறம் காவடி சப்பரம் தோளின் மேலே சேவல் கொடியுடன் சுப்பிரமணியர் தோகைமயில் மீதிருப்பதைப்பார்! நாலு புறமும் கோபுரமாம் நடுவே லிங்க மாளிகையாம் கால்கள் ஆயிரம் கொண்ட மண்டபம் கட்டி இருப்பதைப் பாருங்கடீ! வெள்ளைக் குதிரைக்குச் சீனிகட்டி வெள்ளாளன் சீமைக்கு வாரையிலே வெள்ளைக் குதிரை திரும்பாமே வேலன் வேடுவப்பெண்ணை மணந்தாரடீ! ஆடுங்கடீ பெண்கள் பாடுங்கடீ ஆறுமுகன் அவன் கோயிலிலே வெள்ளிச் சிலம்பெடுத் தாடுங்கடீ வேலவன் வெள்ளித்தேர் ஓடையிலே! வேலவன் வெள்ளித்தேர் ஓடையிலே! |
![]() |
'சென்னை' ரேவதி சங்கரன் 'Chennai' Mrs Revathy Sankaran |
vetRivEl Muruganukku arOharA! Aadungkadee peNgkaL pAdungkadee AaRumugan avan kOyililE veLLich chilambeduth thAdungkadee vElavan veLLiththEr OdaiyilE! kUvudhupAr mayil kUvudhupAr kOttaimadhil ERi kUvudhupAr vEttaikkuppOna suppiramaNiyar kOttaikku varavE kUvudhupAr! sinnakkiNaththilE kallukkatti singkAra vEtti thuvaiththuduththi vattamAgappottu vachchukkittu vAra singkAraththaip pArungkadee! kaigaLil vibUdhippaiyum koNdu kazhuththinil uththirAksha mAlaikoNdu varukindra vEdangkaL aththanaiyum vAzhththik kOlAttaththaith thattungkadee! vaLLi dheivAnai idadhupuRam kAvadi sapparam thOLil mElE sEval kodiyudan suppiramaNiyar thOgaimayil meedhiruppadhaippAr! nAlu puRamum gOburamAm naduvE lingka mALigaiyAm kAlgaL Aayiram koNda maNdabam katti iruppadhaip pArungkadee! veLLaik kudhiraikkuch cheenikatti veLLALan seemaikku vAraiyilE veLLaik kudhirai thirumbAmE vElan vEduvappeNNai maNandhAradee! Aadungkadee peNgkaL pAdungkadee AaRumugan avan kOyililE veLLich chilambeduth thAdungkadee vElavan veLLiththEr OdaiyilE! vElavan veLLiththEr OdaiyilE! |
| பட்டியல் List |
| ... https://kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே home contents top |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |