முருகனுக்கான Poems for |
---|
தலம் - நட்டக்கல், இராகம் - ராகமாலிகை, தாளம் - ஆதி Nattakkal |
ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி. கும்பகோணம், தமிழ் நாடு Sri Se. Guru. Pattabiraman Kumbakonam, Tamil Nadu | பட்டியல் தேடல் list search |
5. அருள்மிகு நட்டக்கல் (கோத்தகிரி) முருகன் ராகமாலிகை தாளம் ஆதி பல்லவி ராகம் : வலஜி (கைவிடமாட்டான்..மெட்டில்) பாலமுருகன் கழல் பணிந்திடுவோம் - இன்பக் கோலக்குமரன் கழல் நினைந்திடுவோம் சக்தி (பால) அனுபல்லவி காலமெல்லாம் அவன் கனிவுடன் பார்த்திடுவான் ஞாலம் புகழ் மயில் வேலுடன் காத்திடுவான் (பால) சரணம் 1 சாந்தம் தவழ்ந்திட ச்சிரித்திடும் சீலன் காந்தம் கொள் பார்வையுடன் களித்திடும் பாலன் காந்தமென நம்மைக்கூட்டிடும் வேலன் தீந்தமிழை த்தன்னுள் காட்டும் தயாளன் (பால) சரணம் 2 ராகம் சாமா பால் வடியும் முகம் பால் பொழியச் சிரிக்கும் வேல் பிடிக்கும் கரம் வெற்றியைக்கொடுக்கும் மால் மருகன் மேனி மணம் கமழக்களிக்கும் வால் அறிவன் நட்டக்கல்லில் உறையும் சக்தி (பால) சரணம் 3 ராகம் காபி கலிதன்னில் கிலிதனை நீக்கிடும் நேயன் நலிவுறும் மனந்தனை ஊக்கிடும் சேயன் களி மிகு மணவாழ்வைக்கூட்டிடும் மாயன் ஒலித்திடும் ப்ரணவத்தை ஓதும் ராமன் சகாயன் (பால) |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |