ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 அறிமுகம்
Introduction
 
Poems Songs for Lord MuruganSri Se. Guru. Pattabiraman    ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி.
    கும்பகோணம், தமிழ் நாடு

   Sri Se. Guru. Pattabiraman
   Kumbakonam, Tamil Nadu



previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

அருள்மிகு முருகன் பாடல்கள்

இயற்றியவர்: "ஸங்கீதஜோதி" ஸ்ரீ சே. குரு. பட்டாபிராமன் பி.ஏ.பி.டி.
51/22 காமாக்ஷி ஜோஸ்யர் தெரு,கும்பகோணம். 612001, தமிழ்நாடு.
முதல் பதிப்பு இணையத்தில் 2009


பாடல் ஆசிரியர் அறிமுகம்

இந்நூலின் ஆசிரியர் திரு சே குரு பட்டாபிராமன் அவர்கள் திருவையாற்றில் பிறந்து குடந்தையில் நேடிவ் பள்ளியிலும் பின்னர் அரசினர் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். பள்ளி நாட்களிலே தனது தாயாரிடம் முறைப்படி கர்நாடக இசை கற்று மேடையேறி கச்சேரிகளும் செய்தவர். தமிழில் ஆர்வம் காரணமாக இள வயதிலே பாடல்கள் புனையும் திறன் பெற்று பல தெய்வப்பாடல்களைப் பாடிப் பரிசுகள் பெற்றிருக்கிறார். ரிஷிகேஷில் ஸ்வாமி சிவானந்தரின் முன்னிலையில் திறம்படப் பாடி " ஸங்கீத ஜோதி " என்ற பட்டத்தினை 1958 ம் ஆண்டிலே பெற்றார்.

தமிழ்நாடு அரசுப்பணியில் பள்ளி ஆய்வாளராகவும் பின்னர் பல்வேறு அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும் பணி புரியும்போது எந்த ஊரில் பணி புரிந்தாலும் அந்த ஊரின் முக்கிய கடவுளர்களின் மீது பக்திப்பாடல்கள் பல பாடியிருக்கிருக்கின்றார். அவற்றில் முருகன் மீது அவர் இயற்றி மேடைகளில் பாடிய சில பாடல்களை தமிழன்பர்களுக்காக இச் சிறிய புத்தகமாகத் தொகுத்துள்ளேன். ஓய்வு பெற்ற பின்னர் குடந்தையில் வசித்துவரும் எனது தந்தையார் திரு பட்டாபிராமன் அவர்களின் பாடல்கள் பாட எளிதாகவும் தக்க தாள அமைப்புடன் வனப்பு மிகுந்ததாக இருக்கின்றன என்பது இசை அறிஞர்களின் கருத்தாக அமைந்துள்ளதால் இப்பாடல்களைத் தொகுத்து இணையத்தின் மூலம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.

தொகுப்பாசிரியர் சே ப சந்திரசேகரன்

இத்தொகுப்பைப்பற்றி. ...

எனது தந்தையார் எழுதிய தமிழ்ப்பாடல்களை இணையத்தின் வாயிலாக தமிழிசையன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி பிள்ளையார் பாடல்களோடு துவங்கியது. சில நாட்கள் முன்பு "அருள்மிகு விநாயகர் பாடல்கள்" என்ற தலைப்பில் சிறு மின் புத்தகம் ஆனைமுகன் புகழைப்பாடி வந்தது. ஆனைமுகனுக்குப்பின் ஆறுமுகன் புகழ் பாட இத்தொகுப்பு வெளிவருகிறது. இத்தொகுப்பில் மொத்தம் 9 பாடல்கள். பழனி, திருத்தணி, திருச்செந்தூர் என்று அறுபடை வீடுகளையும் பாடி பக்தர்கள் த்ருப்தியடையலாம். நட்டக்கல் (கோத்தகிரியிலிருந்து சுமார் 5 கிமீ) சக்தி பாலமுருகனைக்கூட தரிசிக்கலாம். "வடிவேல் முருகா" என்று துவங்கி "அழகுத்தெய்வம்" என்ற காவடிச்சிந்தோடு நிறைவடைகின்ற தொகுப்பில் எல்லாப்பாடல்களும் முருகன் அருளைப் பாடினாலும் "அழகுத் தெய்வம்" பல்வேறு ஊர்களில் முருக பக்தர்களால் இன்றும் பாடப்படுகின்ற செய்தியை நான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கலியுகத் தெய்வம் கந்தனைப் பாடி நிற்கும் மலர்கள் நிறைந்த வனத்தில் இம்மலர் அவனையே நினைந்து இத்தருணம் கை கூப்புகின்றது.

தொகுப்பாசிரியர் சே ப சந்திரசேகரன், புணே, ஆகஸ்ட் 30, 2009.

குறிப்பு: இம்மின் புத்தகம் தங்கள் சொந்த உபயோகத்திற்கு மட்டும். வணிகநோக்கினில் அச்சிடவோ வினியோகிக்கவோ பாடலாசிரியரை எழுத்து மூலம் அணுகவும். நன்றி.

In case of problems download fonts from www.azhagi.com sailindira fontinstaller can be downloaded free. Or contact@azhagi.com for help.


English transliteration to come
go to top
இப்பாடகரின் ஒலிப்பதிவுகள்

recordings by this singer



 Introduction 

Green  அறிமுகம் 
 Thiruththani Green  தலம் - திருத்தணி, இராகம் - ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி 
 Thiruchchendhur Green  தலம் - திருச்செந்தூர், இராகம் - கானடா, தாளம் - ஜம்ப 
 Pazhani Green  தலம் - பழனி, இராகம் - குந்தல வராளி, தாளம் - ஆதி 
 Swamimalai Green  தலம் - ஸ்வாமிமலை, இராகம் - ஆரபி, தாளம் - ஆதி 
 Nattakkal Green  தலம் - நட்டக்கல், இராகம் - ராகமாலிகை, தாளம் - ஆதி 
 Sikkal Green  தலம் - சிக்கல் சிங்காரவேலன், இராகம் - காம்போதி, தாளம் - ரூபகம் 
 aRupadai veedu Green  தலம் - அறுபடை வீடு, இராகம் - நீலமணி, தாளம் - ஆதி 
 Pazhani Green  தலம் - பழனி, இராகம் - பாகேஸ்ரீ, தாளம் - ஜம்ப 
 Azhaguth Dheivam Green  அழகுத்தெய்வம் முருகன் இராகம் - காவடி சிந்து, தாளம் - ரூபகம் 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

introduction
Poems by Se. Gu. Pattabiraman, Kumbakonam, Tamil Nadu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]