முருகனுக்கான Poems for |
---|
தேமதுரத் தமிழில் thEmadhurath Thamizhil |
கருத்தாக்கம் செ. ப. ராமமூர்த்தி சென்னை 600092, தமிழ்நாடு S.P. Ramamoorthy Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
மெட்டு: தேமதுரத் தமிழில் தேமதுரத் தமிழில் இங்கு தென்பழனிக் குமரன் நாமம் ... ... (2) பாமரனும் விழைந்து பாட, பாட்டாக எழுதி வைத்தேன்! நாமது நாளும் சொல்ல, நலமதுவும் நமக்குறுதி ... ... (2) ஏமாப்புடைத்ததென்பீர் ; இசைந்து சொல்வீர் இறைவன் புகழ்!! ... ... ... தேமதுரத் காமனை எரித்த எங்கள் கண்ணுதலான் நெற்றிக்கண்ணின் கண்டதொரு ஆறு பொறி கந்தனென்று ஆனதன்று மாலவன் சோதரியின் மகவென்று ஆனதுவும் மகிழ்ந்து சொல்ல நித்தம் மனம் விரும்பும் வாழ்வும் வரும்! ... ... ... தேமதுரத் ஆறுபடை வீடமர்ந்தான் அழகனவன் நாமம் சொல்ல ... ... (2) வேறுபட்டு நிற்பவரும் விரும்பியே உனைப் பணிந்தெழுவர்! பேறு பதினாறும் தரும்; பெம்மான் அவன் திருவடியின் நீறும் ஒரு மருந்தாகும்: நிர்மலன் தன் புகழ் சொல்லவே!! ... ... ... தேமதுரத் மெட்டு: பிபரே ராமரசம் இறைவா நின் திருப்புகழை நாளும், நாடி, இசைத்திடும் மனமதனை இறைவா நீ எனக்கருள! ... ... ... இறைவா குறைவில்லா வாழ்வதனைக் குவலயத்தெமக்களித்தாய்: ... ... (2) நிறைவான மனத்துடன், நித்தமும் உன் புகழ் பாட ! ... ... ... இறைவா அகமும் புறமும் உன்னை அனுதினமும் நினைக்கும் ... ... (2) அடியவர் திருக்கூட்டம் (என்னை) ஆதரிக்கவும் வேண்டும்! இகபர சுகமருளும், இறைவா நின் கருணைதனை ... ... (2) ஏழையேன் நானறிய, இது தருணம் வருவாய்!! ... ... ... இறைவா |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |