![]() | ![]() முருகனுக்கான Poems for | ![]() |
---|
கந்தரலங்காரம் அழகுக்கு ஆராதனை azhagukku AarAdhanai |
![]() | கருத்தாக்கம் செ. ப. ராமமூர்த்தி சென்னை 600092, தமிழ்நாடு S.P. Ramamoorthy Chennai, Tamil Nadu | English ![]() ![]() | பட்டியல் தேடல் list search |
பாதாதி கேசம் முதல் பக்தனிவன் உன் அழகை ஓதுவது ஓர் சிறப்பாய் உவந்திங்கென் உளங்கலந்து வேத முதலானவனே வேலவனே அடி பணிந்தேன்! எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(1) அழகு திருவதனமதில் அருளொளி விளங்கிடவும்; அகன்ற நன் நெற்றிதனில் அணி செய்யும் திருநீறும்; இலங்கு சந்தனத் திலகம் இட்ட பொட்டழகு சொல எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(2) மதியுந்தன் முகமாக மலருமிரு விழியதுவும்; அதிலிரண்டு சூரியராய் அட என்ன விந்தையிது; பதும மலர் அழகன் புகழ்ப் பைந்தமிழில் பாடவந்தேன்! எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(3) அலைபாயும் கருமுடியும் அழகு திண் தோள் தவழ; அணிந்த பொற்கிரீடமதால் அமரருலகொளி பெறவும்; கலையாத கல்வி தரும் கந்தனவன் நாமம் சொல; எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(4) அருளொளி தவழுமெங்கள் அறுமுகனின் திரு வதனம்; அகத்தினில் இருத்திடவே; ஆஹா ஈதென்ன சுகம் ஒரு திருப் புகழேனும் உளமுவந்து தினம் பாட எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(5) பன்னிரு விழியழகும்; பரந்த திண் தோளழகும்; முன்னின்று எனை நடத்தும் முருகனின் வடிவழகும்; என்னன்பின் இளையன் புகழ் இசைந்தெந்த நாளும் சொல்ல எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(6) தாமரை மலரன்ன, நின் தாள் பணிந்தெழும் அடியார் தலைவிதி மாற்றுமொரு தகைமையால் நாளுமிங்கு கோல மயிலேறி வரும் குமரா இங்குனைப் பாட எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(7) அம்புறாத் தூணியன்ன அழகு முழந்தாளழகும், இன்புறவே உலகாளும் இளையனின் தொடையழகும், ஆலிலை போல் வயிறும் அகன்ற நன் மார்பும் கண்டேன்! எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(8) நன்னீரால் நீராட்டி, நறுமணப்புகையூட்டி பொன்மாலைதனைப் பூட்டி, போற்றுமவன் திருவடியை சென்னிமேல் சுமந்து நித்தம் சிறப்பினைப் பாட வந்தேன்! எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(9) கூன் குருடு முடமென்று குறையில்லா வாழ்வதனை குமரனவன் அருளினான்; எம் குலம் காக்கும் அவன் புகழை தேனன்ன தமிழில் இங்கு தினந்தோறும் பாட வந்தேன்! எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(10) நல்ல தமிழ் நானறியேன்; நாயகனின் புகழ்பாட வல்லவனோ அறியேனே; (பிறர்) வணங்கும் நன் நிலையளித்தான்! சொல்லுவதும் அவன் நாமம்; சுகமென்றும் எனக்கருள எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(11) இது முதல் முயற்சியென்பேன்; இளையனின் புகழ் பாட என் அறிவு அறிந்த வரை இசைத்தமிழில் பாட வந்தேன்! புதுக் கருத்து இனி வரும் (அவன்) பொலிவினைப் பாடுதற்கு எழில் கந்த கோட்டமுறை இளையனே மனமுவந்து எனைக் காக்க எழுந்தருளவே! ... ...(12) முருகனின் அழகு முகம் கண்டபின் வேறெதும் கண் காண விரும்பாததால், கற்பனை ஓடவில்லை. முயற்சி தொடரும். ... செ. ப. ரா. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
![]() If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2017-2030 [xhtml] 1404.2022[css]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact us if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by us (the owners and webmasters of www.kaumaram.com), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., we are NOT responsible for any damage caused by downloading any item from this website. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |