முருகனுக்கான Poems for |
---|
ஞானம் njAnam |
கருத்தாக்கம் செ. ப. ராமமூர்த்தி சென்னை 600092, தமிழ்நாடு S.P. Ramamoorthy Chennai, Tamil Nadu | English | பட்டியல் தேடல் list search |
(மெட்டு: 'நாத விந்துக் கலாதி நமோநம' போலப் பாடவும்) நாதன் திருப்புகழை நாளும் உவந்திடும் வேத மந்திரம் ஈதென்றுரைத்திடும்; ஓதும் அடியவர் உள்ளம் களித்திட, உமையவள் திருமகனே!! அருள்வாய்! சீதக்களப செந்தூர் வயல் உறை, வேதியர் துதி வேலன் திருவடி, காதலால் மனம் கசிந்துருகி நினைக்க; வேதனையேன் மனமே!! நினைந்து பாதம் பற்றியவர் பண்ணும் புண்ணியங்கள், நாதனவன் திருநாமம் உரைத்ததனால், ஏதமில் பிறவி ஈதென்றுரைத்திட, இளையனைத் துதி மனமே! இசைந்து மறையதன் பொருளொடு (அதன்) மகத்துவம் உரைத்திடும் மறையவன் மலர்ப்பதம் மனமுவந்து பணிய; இறையவன் தன்னோடு இணைந்திடும் வழியது, ஈதென உரை மனமே!! உணர்ந்து அறுமுகன் புகழொடு அவன் தன் திருவடி, அனுதினமும் பணியும் அடியவர் புகழ் சொல்ல; பெருவது சிறப்பென பேசிட விழைந்திடு; பேறது இதுவெனவே!! மனமே! ஞானம் எந்தனுக்கு நாளும் வழங்கிடும்; நம்பும் அடியவர் நலம் பெற அருள் செயும்; வம்பக் களிற்றிளையோன் வடிவேல் அழகனை, இன்புரத் துதி மனமே! இசைந்து வந்த பிறவியொடு வரு பல பிறவியும், சந்ததமும் நினைச் சரணடைந்த அடியார், எந்தக் குறையும் இன்றி இகபர சுகம் பெற, இேளையனே நீ அருள, வேண்டும்!! |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |