ARumugam with VaLLi DeivanaiKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

முருகனுக்கான
கவிதைகள்

Poems for
Lord Murugan

Sri Kaumara Chellam
 நித்தமும் ஒரு பாடல்
niththamum oru pAdal
 
Poems Songs for Lord Murugan    கருத்தாக்கம்
    செ. ப. ராமமூர்த்தி
    சென்னை 600092, தமிழ்நாடு

   S.P. Ramamoorthy
   Chennai, Tamil Nadu
 English 


previous page next page
 பட்டியல் 
 தேடல் 

 list 
 search 

நித்தமும் ஒரு பாடல் முருகா
உன் நினைப்பெனக்கு ஊட்டுமெனில்,
சித்தம் விழைந்தேன்; செப்பினேன்!!
வித்தகா எனை ஆளும் வேலவா;
அப்பனும் நீயே; எனைக்காக்கும் அம்மையும் நீயே;
என் குறை தீர்த்து,
ஒப்பிலாப் பெரு வாழ்வை
உவந்தெனுக்கு அளித்திடுவாய் மகிழ்ந்து!!

--- ஐம்புலனும் நற்செயல் புரிய
ஆண்டவனே அருளவென்றேன்!! --

முருகா உன்னடிமை நான்!
மனமுருகி ஒரு விண்ணப்பம்!!
அருள்வாய் நீயென்றேன்; மனமுவந்து
அடியேன் என் குறையறிந்து!!
வருவாய் என் வழித்துணையாய்; செல்லும்
வழியதுவும் நீயே என்றேன்!!
பெருகும் அன்பின் கந்தவேளும் (எனைப்)
பேசச் சொல்லி தானும் கேட்டான்!!

-- கண் காண்பது --

கண்ணால் நான் காண்பதுவும் பிறர் மனம்
களிப்படைய உதவிடவே!
திண்ணமாய் அது நடக்க இறைவன்
திருவருளும் வேண்டுமென்றேன்!!
எண்ணமெல்லாம் ஈதொன்றேயாக மனம்
இசைந்ததோர் விருப்பமாயின்;
கண்ணுதலான் மகன் எனக்கோர்
கருணை செய விழைந்தேன் என்றான்!!

-- செவி கேட்பது --

செவி வழியாய் நான் கேட்கும்
செய்தியெல்லாம் நலம் பயக்க
புவிமிசை வாழும் நாளும் நற்செயல்
புரிந்திடவே அருள்வாய் என்றேன்!!
கவியதனில் கேட்டதனால்
களிப்படைந்தான் கந்தனவன்; மனமுருகி,
செவிமடுத்தான் அருள் செயவே;
சிந்தை மிக விழைந்தேன் என்றான்!!

-- நாவு பேசுவது --

பேசுவதும் பெருமை தரப் பிறர் மனம்
பெரிதும் உவந்திடவே!
ஈசன் மகன் எனக்கருள
இதுவரம் வேண்டுமென்றேன்!!
மாசில்லா மனத்துடையாய்
மாண்பதுவும் பெருமை தரும்;
பேசிடுவாய்! அருள் புரிவேன்!! உந்தன்
பேச்செல்லாம் எனதே என்றான்!!

-- மூக்கு முகர்வது --

முகர்ந்திடும் எம்மணமும்
மூவுலகும் மகிழ்ந்திடவே; நூலோர்
பகர்ந்தபடி நறுமணமாய்ப்
பயன் தரவே அருளுமென்றேன்!!
நிகரில்லாப் பெருங்கருணை
நெஞ்சத்து உடையவனும்,
மிக மகிழ்ந்தேன் என உரைத்தான்
மெச்சினேன்; அளித்தேன் என்றான்!!

-- உணர்வு உணர்தல் --

உணர்வதும் ஒரு சிறப்பே; பிறர்
உளம் உணர்ந்து செயல்படவே!
உலகாளும் உன் துணையே
உவந்திங்கே வேண்டுமென்றேன்!!
உலகுக்கு நலம் தரவே
வாய்ப்பு ஒரு முறைதான் வருமென்றான்!!
உணர்ந்திடுவாய் உன் மனதில்
உறைபவனும் நானே என்றான்!

மன்பதையில் பிறர்க்கு நலம்
மகிழ்ந்திங்கே விழையுமெனை
அன்பனே என அழைத்து
ஆண்டவனும் ஓர் உரை பகன்றான்!!
என்பதுவும் பிறர்க்கென்று
இசைந்திட்ட வேளைதன்னில்
நண்பர்களைக் கண்டு கொள்வாய் நாடும்
நலமனைத்தும் நினதே என்றான்!!


English transliteration to come
go to top
இவரின் கவிதைப் பட்டியல்

poems by this author



 niththamum oru pAdal 

Green  நித்தமும் ஒரு பாடல் 
 njAnam Green  ஞானம் 
 azhagukku AarAdhanai Green  கந்தரலங்காரம்  அழகுக்கு ஆராதனை 
 idhu sugamE Green  இது சுகமே 
 nALadhum thirunALandRO! Green  நாளதும் திருநாளன்றோ! 
 nAdi varum vaLam Green  நாடி வரும் வளம் 
 KandhanendRu sollu Green  கந்தனென்று சொல்லு 
 thEmadhurath Thamizhil Green  தேமதுரத் தமிழில் 

top
 பட்டியல் 
 List 

Poems for Lord Murugan

niththamum oru pAdal
S.P. Ramamoorthy

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 1404.2022[css]