திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 631 வெடித்த வார்குழல் (பொதியமலை) Thiruppugazh 631 vediththavArkuzhal (podhiyamalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான ......... பாடல் ......... வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி விழித்து மேகலை பதித்து வார்தொடு மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர் குடித்து நாயென முடக்கு மேல்பிணி யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர் குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக் குறித்து நீயரு கழைத்து மாதவர் கணத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய் உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென திகுத்த தீதிகு திகுர்த்த தாவென உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில் உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை அடைத்த மாசிறை விடுத்து வானுல களிக்கு மாயிர திருக்க ணானர சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா அளித்த தாதையு மிகுத்த மாமனும் அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ் அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கின் ஆடை மினுக்கி ... நறுமணம் கமழும் நீண்ட கூந்தலை விரித்து, வேல் போன்ற கண்களை விழித்து, இடுப்பிலே ஒட்டியாணத்தை அணிந்து, கச்சு அணிந்த மிகப் பெரிய மார்பகத்தை அசைத்து, நூல் போல் மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே வி(ள்)ள நகைத்து கீழ் விழி மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர் குடித்து ... காதோலைகளைப் போலி ஒளியாகக் காட்டியும், கை வளைகளை ஆட்டி ஒலிக்கச் செய்தும், வெளிப்படையாய்ச் சிரித்தும், கீழ்க் கண்ணால் மிரட்டி யாரையும் வா என அழைத்தும், மோகத்துடன் கொடுத்த வாயிதழ் ஊறலைப் பருகியும், நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர் குலத்தவர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை ... (இவ்வேசைகள் எனக்கு) நாய் போல முடக்கத்தை விளைவிக்கும் நோய்கள் தந்துவிட, வேதனைகள் உண்டாக, தாயும், சுற்றத்தார்களும், குலத்தைச் சேர்ந்தவர் எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்ற என்னை, குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில் கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய் ... கவனித்து நீ உன் அருகில் வரச் செய்து பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல், மயில் ஆகிய அடையாளங்களைப் பொறித்து, வேதங்களும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி மனம் கூர்ந்து அருள்வாயாக. உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என திகுத்த தீதிகு திகுர்த்த தா என உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில் ... உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என்றும், திகுத்த தீதிகு திகுர்த்த தா என்றும் இவ்வாறான ஒலிகளை உடுக்கை, பேரிகை, தவில் இவைகளின் கூட்டங்கள் ஒலிக்கும் போர்க்களத்தில், உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை உடைத்து நீதிகள் பரப்பியே ... உலோபிகளும், கீழோரும் ஆகிய அசுரர்கள் பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க, நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்ச மலையையும் உடைத்துப் பொடியாக்கி, நீதியை நிலை நிறுத்தி எங்கும் பரப்பி, அவர் உம்பராரை அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு க(ண்)ணான் அரசு அளித்து நாளும் என் உள்ளத்திலே மகிழும் குமாரா ... அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, (தேவர்களுக்குத்) தேவ லோகத்தை அளித்தவனே, ஆயிரம் அழகிய கண்களை உடைய இந்திரனுக்கு அரசாட்சியை அளித்து, நாள் தோறும் என் உள்ளத்தில் இருந்து மகிழும் குமரனே, அளித்த தாதையு(ம்) மிகுத்த மாமனும் அனைத்து உ(ள்)ளோர்களும் மதிக்கவே மகிழ் அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே. ... ஈன்ற தந்தையாகிய சிவபெருமானும், பேர்பெற்ற மாமனாகிய திருமாலும் மற்றும் எல்லோரும் மதிக்கும்படி, மகிழ்ச்சியுடன் அகத்திய முனிவரின் மலையாகிய பொதிய மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே. |
* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1029 pg 1.1030 pg 1.1031 pg 1.1032 WIKI_urai Song number: 413 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 631 - vediththa vArkuzhal (podhiyamalai) vediththa vArkuzhal viriththu mElvizhi vizhiththu mEkalai pathiththu vArthodu mikuththa mAmulai yasaiththu nUlinma ......runginAdai minukki yOlaikaL pilukki yEvaLai thulakki yEviLa nakaiththu keezhvizhi miratti yAraiyu mazhaiththu mAlkodu ...... thanthavAyneer kudiththu nAyena mudakku mElpiNi yaduththu pAthikaL paduththa thAythamar kulaththar yAvaru nakaikka vEyudal ...... manguvEnaik kuRiththu neeyaru kazhaiththu mAthavar kaNaththin mEvena aLiththu vElmayil koduththu vEthamu moruththa nAmena ...... sinthaikUrAy uduttu dUdudu dudutto dOvena thikuththa theethiku thikurththa thAvena udukkai pErikai thaviRku zhAmumi ...... rangupOril uluththa neesarkaL pathaippa mAkari thudippa neeLkada leriththu cUrmalai yudaiththu neethikaL parappi yEyava ...... rumparArai adaiththa mAsiRai viduththu vAnula kaLikku mAyira thirukka NAnara saLiththu nALume nuLaththi lEmaki ...... zhumkumArA aLiththa thAthaiyu mikuththa mAmanum anaiththu LOrkaLu mathikka vEmakizh akathya mAmuni poruppin mEviya ...... thambirAnE. ......... Meaning ......... vediththa vAr kuzhal viriththu vEl vizhi vizhiththu mEkalai pathiththu vAr thodu mikuththa mA mulai asaiththu nUlin marungin Adai minukki: Spreading out their fragrant hair, leering with their spear-like eyes, donning a golden waist-band around their waist, shaking their bosom tightly covered by the blouse, flaunting the see-through fabric wrapped around their thread-like slender waist, OlaikaL pilukkiyE vaLai thulakkiyE vi(L)La nakaiththu keezh vizhi miratti yAraiyum azhaiththu mAl kodu thantha vAy neer kudiththu: exhibiting their ear-studs with an artificial lustre, shaking loudly the bangles in their arms, giggling explicitly in public, beckoning everyone with their intimidating and slanted downward look and imbibing the saliva proffered to them passionately, nAy ena mudakkum El piNi aduththa upAthikaL paduththa thAy thamar kulaththavar yAvarum nakaikkavE udal manguvEnai: these whores were responsible for my contacting several diseases that debilitate me like a dog and make me feel miserable; my mother, relatives and all the people of my lineage, jeer at me, and I feel physically worn out; kuRiththu nee aruku azhaiththu mAthavar kaNaththin mEvu ena aLiththu vEl mayil koduththu vEthamum oruththanAm ena sinthai kUrAy: kindly attend to me by taking me by Your side with a blessing command that I should join the elite group of great people who have performed religious penance; please also etch the seal of the spear and the peacock on my body so that the VEdAs would acclaim me as a matchless person, Oh Lord! uduttu dUdudu dudutto dO ena thikuththa theethiku thikurththa thA ena udukkai pErikai thavil kuzhAmum irangu pOril: The hand-drums, big drums and other percussion instruments collectively made a roaring sound like "uduttu dUdudu dudutto dO" and thikuththa theethiku thikurththa thA" in the battlefield; uluththa neesarkaL pathaippa mA kari thudippa neeL kadal eriththu cUr malai udaiththu neethikaL parappiyE: the miserly and debased demons trembled with fear; large elephants quivered; the long sea was set on fire; the demon SUran and his Mount Krouncha were shattered to pieces; justice was restored and spread everywhere; avar umparArai adaiththa mA siRai viduththa vAn ulaku aLikkum Ayiram thiru ka(N)NAn arasu aLiththu nALum en uLLaththilE makizhum kumArA: the celestials who were shackled in the prison by the demons were liberated; the celestial land was given back to the DEvAs; and the sovereign power was granted by You again to Indra, the celestial leader endowed with a thousand beautiful eyes; and You reside everyday in my heart with relish, Oh KumarA! aLiththa thAthaiyu(m) mikuththa mAmanum anaiththu u(L)LOrkaLum mathikkavE makizh akathya mA muni poruppin mEviya thambirAnE.: Lord SivA, the Father who delivered You, and the famous Lord VishNu, Your uncle, along with all others, laud You as You chose Pothigaimalai*, the mount belonging to Sage Agasthiyar, as Your abode, Oh Great One! |
* Mount Pothigai is near PApanAsam, in TirunelvEli District. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |