பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1030

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - பொதியமலை திருப்புகழ் உரை 557 413 நறுமணங் கமழுகின்ற நீண்ட கூந்தலை விரித்து, வேல் போலும் விழியை விழித்து, மேகலை (இடைய்ணியை) அணிந்து, ரவிக்கை அணிந்த் மிகப் பெரிய கொங்கை அசைத்து. நூல்ப்ோல மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், (காதில்) ஒலையைப் பிலுக்கியும் போலிப் பிரகாசம் காட்டவைத்தும்), வளையலை ஒளிபெறச் செய்தும், (விள்ள) வெளிப்படையாகச் சிரித்து, கீழ்க்கண்ணால் மிரட்டி யாரையும் (வாரும்) என அழைத்து, மோகத்துடன் கொடுத்த வாய் நீரை (இதழ் ஊறலைக் குடித்து நாய்போல, முடக்கும் ஏல் பிணி.முடக்கத்தைச் சம்பவிக்கச் செய்யும் - தடைகளைத் தரும் பிணிகள் (அல்லது வாதம் என்னும் நோயும் மேலும் (பிற) பிணிகளும்) வந்துகூட அவை தம்மால் வேதனைகள் உண்டாகத், தாயும், சுற்றத்தினரும், குலத்தவர் யாவரும் சிரிக்கவே உடல் வாட்டம் உறுகின்ற என்னைக் கவனித்து நீ (உன்) சமீபத்தில் அழைத்து, மகா தவசி. களின் கூட்ட்த்தில் சேர்வாயாக என எனக்கு அருள் புரிந்து, வேல் பொறி (வேல் அடையாளம்) மயில் பொறி 燃 அடையாளம் பொறித்து) தந்து, வேதமும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி திருமனது கூர்ந்தருளுவாயாக. (முன் பக்கத் தொடர்ச்சி) இடும்படி வேண்டுகிறார். எட்டிகுடித் திருப்புகழிலும் தற்பொறி வைத் தருள் பாராய் தாராய்" (838) என வேண்டினர். இவ்வேண்டுகோளின் படி அருணகிரியார்க்கு வேல் மயில் பொறி கிடைத்தது என்பது அடைக்கலப் பொருளாமென நாயெனை அழைத்து வேல் மயில் அருள்வோனே" (850) எனவரும் திருத்துருத்தித் திருப்புகழால் அறிகின்றோம். இதன் விவரத்தை யான் எழுதிய அருணகிரிநாதர் நூலாராய்ச்சி" என்னும் நூலில் (பக்கம் 41, 108) பார்க்கலாம். - "இயல் வேலுடன்மா அருள்வாயே" திருப்புகழ் "சிவமாது"563 S ஒருத்தனாம் என சிந்தை கூராய் - பாடல் 173 அடி3 உரைக் குறிப்பைப் பார்க்க