பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1029

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 413. ஐக்கிய நிலைபெற தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தந்ததான ‘வெடித்த வார்குழல் விரித்து bேல்விழி விழித்து மேகலை பதித்து வார்தொடு மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ருங்கினாடை மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி மிரட்டி யாரையு மழைத்து ம்ால்கொடு தந்தவாய் நீர்; குடித்து நாயென முடக்கு மேல்iபிணி யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர் குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் மங்குவேனைக் குறித்து நீயருகழைத்து மாதவர் கணத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமு Sமொருத்த னாமென சிந்தைகூராய்: வெடித்த - நறுமணங் கமழ்கின்ற t பிணி அடுத்த உபாதிகள் படுத்த எனப் பிரிக்க # வேல் மயில் கொடுத்தல்: வேல் பொறி, மயில்பொறி அளித்தல் - முருகன் அடியான் எனக் காட்டத் தோளில் வேல் மயில்_இவைகளின் குறிகளைப் பொறித்தல் (அடையாளங்களைப் பதித்தல்). இக்குறிகளைக் கண்டால் யமன் அணுகான் 'பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண்டேல் இருங்கூற்றகல மின்னாரு மூவிலைச் சூல மென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுள் துங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே இடபம் பொறித்தென்னை ஏன்று கொள்ளாய்" - அப்பர் - IV 109 -1, 3 எனப்பாடிச் சூலக்குறி, இடபக்குறி வேண்டுமென அப்பர் பெருமான் வேண்டினதுபோல, அருணகிரியாரும் வேற்பொறி, மயில் பொறியை (அடுத்த பக்கம் பார்க்க)