திருப்புகழ் 632 குதலை மொழியினார்  (கழுகுமலை)
Thiruppugazh 632 kudhalaimozhiyinAr  (kazhugumalai)
Thiruppugazh - 632 kudhalaimozhiyinAr - kazhugumalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதனா தனத்த தானன
     தனன தனதனா தனத்த தானன
          தனன தனதனா தனத்த தானன ...... தனதான

......... பாடல் .........

குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
     முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
          கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே

மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
     பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
          வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே

முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
     மடிய அயிலையே விடுத்த வாகரு
          முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே

கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
     யிசையை முரலமா வறத்தில் மீறிய
          கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குதலை மொழியினார் நிதிக் கொள்வார் அணி முலையை
விலை செய்வார்
... மழலைச் சொல் போலப் பேசுபவர்கள், பிறரது
பொருளைப் பறிப்பவர்கள், அழகிய மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள்
(ஆகிய விலைமாதர்கள்)

தமக்கு மா மயல் கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு
துயராலே
... மீது உள்ள பெரிய மயக்கம் மிகவும் பொல்லாதது. அந்த
மயக்கத்தால் ஏற்படும் வருத்தம் தரும் துன்பத்தால்

மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள்
இடத்திலே
... சிறு பிள்ளையாகிய நான் கலக்கம் உற்று, இளமையில்
மிக பாபிகளாகிய கொடியவர்களிடம் சென்று,

மிக வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே ...
என்னுடைய தரித்திர நிலையைக் கூறி நிற்பது என்னால் இனி முடியாது.

முதல வரி வி(ல்)லோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே
விடுத்தவா
... முதல்வனே, கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய
உடல் அழிய வேலைச் செலுத்தியவனே.

கரு முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே ...
கரிய மேகத்தை ஒத்த நிறம் உடைய திருமாலின் திரு மருகனே,

கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல ... வாழை,
கமுகு இவைகள் சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்ப,

மா அறத்தில் மீறிய கழுகு மலை மகா நகர்க்குள் மேவிய
பெருமாளே.
... பெரிய தருமச் செயல்களில் மேம்பட்டு விளங்கும் கழுகு
மலை* என்ற சிறந்த நகரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமாளே.


* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1031  pg 1.1032  pg 1.1033  pg 1.1034 
 WIKI_urai Song number: 414 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 632 - kuthalaimozhi (kazhugumalai)

kuthalai mozhiyinAr nithikkoL vAraNi
     mulaiyai vilaiseyvAr thamakku mAmayal
          kodithu kodithathAl varuththa mAyuRu ...... thuyarAlE

mathalai maRukivA lipaththi lEveku
     pathakar kodiyavA Lidaththi lEmika
          vaRumai pukalvathE yenakku mOini ...... mudiyAthE

muthala varivilO dethirththa cUrudal
     madiya ayilaiyE viduththa vAkaru
          mukilai yanaiyathA niRaththa mAlthiru ...... marukOnE

kathali kamukusUzh vayaRku LEyaLi
     yisaiyai muralamA vaRaththil meeRiya
          kazhuku malaimakA nakarkkuL mEviya ...... perumALE.

......... Meaning .........

kuthalai mozhiyinAr nithik koLvAr aNi mulaiyai vilai seyvAr: They prattle a lot and grab hold of the belongings of others; these whores sell their pretty bosom for a price;

thamakku mA mayal kodithu kodithu athAl varuththamAy uRu thuyarAlE: the big delusory enchantment for them is the most dangerous thing; because of the misery caused by that kind of attraction,

mathalai maRuki vAlipaththilE veku pathakar kodiyavAL idaththilE: I, as an immature lad, became distressed and sought the company of very wicked people in my youth;

mika vaRumai pukalvathE enakkumO ini mudiyAthE: I can no longer bear to stand there narrating my destitution.

muthala vari vi(l)lOdu ethirththa cUr udal madiya ayilaiyE viduththavA: Oh Primordial One, when the demon SUran opposed You holding a well-bound bow in his hand, You wielded the spear to pierce his body!

karu mukilai anaiyathA niRaththa mAl thiru marukOnE: You are the handsome nephew of Lord VishNu who has the complexion of dark cloud!

kathali kamuku sUzh vayaRkuLE aLi isaiyai murala: In this place, beetles make a lot of music in the fields surrounded by plantains and betelnut trees;

mA aRaththil meeRiya kazhuku malai makA nakarkkuL mEviya perumALE.: and this famous town Kazhukumalai* is renowned for all charitable activities where You are seated with relish, Oh Great One!


* Kazhugumalai is near KOvilpatti on the route to SrivillipuththUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 632 kudhalai mozhiyinAr - kazhugumalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]