பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1031

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென திகுத்த தீதிகு திகுர்த்த தாவென உடுக்கை பேரிகை தவிற்குழா முமி ரங்குபோரில். உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ரும்பராரை; அடைத்த மாசிறை விடுத்த வானுல களிக்கு 'மாயிர திருக்க ணானர சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ழுங்குமாரா. அளித்த தாதையு மிகுத்த மாமனும் அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ் அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய தம்பிரானே (2) கழுகுமலை (இது திருநெல்வேலிக்கு வடக்கு 28 மைல். கோயில் பட்டியிலிருந்து 12-மைல். கோயில் மலையடிவாரத்தில் இருக்கின்றது. மலைவலம் 1 மைல் இருக்கும்.) 414. பெண்கள்மேல் மயக்கு அற தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தாணன தனன தனதனா தனத்த தானன தனதான குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல் கொடிது கொடிததால் வருத்த மாயுறு துயராலே. மதலை மறுகிவா லிபத்தி லேவெகு பதகர் கொடியவாளிடத்தி லேமிக - வறுமை புகல்வதே யெனக்குமோ இனி முடியாதே; - --- -- கெளதம முநிவரின் சாபத்தால் (பாட்டு 376 கீழ்க் குறிப்பு) ஆயிரம் குறிபெற்ற இந்திரனுடைய பிழையைப் பொறுக்கும்படி பிரமனாதிய (அடுத்த பக்கம் பார்க்க)