திருப்புகழ் 630 மைக்கணிக்கன்  (பொதியமலை)
Thiruppugazh 630 maikkaNikkan  (podhiyamalai)
Thiruppugazh - 630 maikkaNikkan - podhiyamalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தத்த தான தான தத்த தத்த தான தான
     தத்த தத்த தான தான ...... தனதான

......... பாடல் .........

மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
     மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி

மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு
     வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே

இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை
     யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி

எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி
     யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ

துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
     தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச்

சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
     சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே

திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்
     திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா

செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
     செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மைக் கண் இக்கன் வாளி போல உள் க(ள்)ளத்தை மாறி
நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி
... மை பூசிய கண்
கரும்பு வில்லை உடைய மன்மதனுடைய பாணங்கள் போல வேலை
செய்ய, உள்ளே இருக்கும் கள்ளக் குணத்தை வேறாக மறைத்து
வைத்து விருப்பம் காட்டி, வாசனை உள்ள மாலையை செவ்வையாக
தலை முடியில் அணிந்து,

மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பின் ஊடு
வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே இக்கு வைக்கும்
ஆடை வீழ வெட்கி
... யானையின் மத்தகத்தில் நீண்டதாக இருக்கும்
தந்தங்கள் வைத்ததை ஒத்து அழகிய மார்பில் வட்ட வடிவாய் கச்சு
அணிந்த மார்பகத்தின் மேல் தடையாக இருக்கும் ஆடை விழ
வெட்கப்பட்டு,

இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயின் இசை பேசி
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சை உற்று என் ஆகம் ஆவி
எய்த்து நித்த(ம்) மான ஈனம் உறலாமோ
... தம் குறிப்பின் வழி
நடக்கும் ஆட்களை வஞ்சகித்து, (தங்களுக்கு இசைந்தவர்களை)
முத்தமிடுகின்ற வாயால் உடன் படுதலைப் பேசி அணுகும் துஷ்ட
குணம் உள்ள விலைமாதர்களின் படுக்கையில் ஆசைப்பட்டு
என்னுடைய உடலும், உயிரும் களைத்துப் போய் நாள் தோறும்
அவமானம் அடையலாமோ?

துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க
திக்க தோத தீத என ஓதச் சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த
நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறு உ(த்)தார(ம்)
மொழிவோனே
... துர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த திரிசூலத்தை
ஏந்திய காளியின் செங்கையில் உள்ள தாளத்தின் ஓசை தொக்க திக்க
தோத தீத இவ்வாறு சப்திக்க, சுழன்று வெற்றியுடன் பாதங்கள்
(சுத்தமான சொக்கம் என்னும்) நடனத்தை ஆடுகின்ற முதல்வராகிய
சிவபெருமானுடைய (நீ உபதேசிப்பாயாக என்று சொன்ன) சொல்லுக்கு
இணங்கும் மறு மொழியை மொழிந்தவனே,

திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க
முட்டி ஆடு தீர வடிவேலா
... எல்லா திக்குகளிலும், பெரிய
வானத்திலும் சென்ற கர்வம் மிகுந்த சூரர்கள் பல வழியாகச் சிதற,
அவர்களைத் தாக்கிப் போர் புரிந்த தீரனே, கூரிய வேலாயுதனே,

செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு
செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே.
... வெட்சி, பிச்சிப்பூ
இவைகளால் ஆகிய மாலையை அணிந்த மார்பனே, அறிவுள்ள
கொச்சையான சொல் கொஞ்சிப் பேசும் மாதாகிய வள்ளியுடன்
பொதிய மலையில்*, சிவந்த முருகனாக விளங்கும் பெருமாளே.


* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1025  pg 1.1026  pg 1.1027  pg 1.1028 
 WIKI_urai Song number: 412 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 630 - maikkaNikkan (podhiyamalai)

maikka Nikkan vALi pOla vutka Laththai mARi nAdi
     mattu mutRa kOthai pOtha ...... mudicUdi

maththa kaththi needu kOdu vaiththa thoththin mArpi nUdu
     vatta mitta vAru lAvu ...... mulaimeethE

ikku vaikku mAdai veezha vetki yakka mAna pErai
     yeththi muththa mAdum vAyi ...... nisaipEsi

ettu thutta mAthar pAya licchai yutRe nAka mAvi
     yeyththu niththa mAna veena ...... muRalAmO

thurkkai pakka cUla kALi sekkai pukka thALa vOsai
     thokka thikka thOtha theetha ...... venavOthac

chutRi vetRi yOdu thALkaL suththa nirththa mAdu mAthi
     soRku niRku mARu thAra ...... mozhivOnE

thikku mikka vAni nUdu pukka vikka mUdu cUrar
     thikka mutti yAdu theera ...... vadivElA

secchai picchi mAlai mArpa vicchai kocchai mAthi nOdu
     seppu veRpil sEya thAna ...... perumALE.

......... Meaning .........

maik kaN ikkan vALi pOla uL ka(L)Laththai mARi nAdi matti mutRa kOthai pOtha mudi cUdi: Their eyes, painted with black pigment, work like the flowery arrows wielded by Manmathan (God of Love) holding a bow of sugarcane; concealing the inner treachery, they put an act of showing interest and elegantly adorn their hair with a fragrant garland;

maththakaththil needu kOdu vaiththathu oththu in mArpin Udu vattam itta vAr ulAvu mulai meethE ikku vaikkum Adai veezha vetki: after deliberately dropping the cloth over their tight blouse covering the round breasts on their beautiful chest looking like the long tusks on the forehead of the elephant, they feign bashfulness;

iyakkamAna pErai eththi muththam Adum vAyin isai pEsi ettu thutta mAthar pAyal icchai utRu en Akam Avi eyththu niththa(m) mAna eenam uRalAmO: by deceiving those men who run their errands, they selectively approach some other people (whom they like) to speak with their kissing mouth about their willingness to go along with them; why am I yearning to go to bed with such treacherous whores and subject myself to insult, my body and soul being exhausted every day?

thurkkai pakka cUli kALi sekkai pukka thALa Osai thokka thikka thOtha theetha ena Othac chutRi vetRiyOdu thALkaL suththa nirththam Adum Athi soRku niRkum mARu u(th)thAra(m) mozhivOnE: She is Goddess DurgA; as the trident, that branches out into three forks and is held in the reddish hand of KALi makes the sound according to the meter "thokka thikka thOtha theetha", He spins His feet triumphantly and dances the pure (Chokka) dance; He is the Primeval Lord SivA; upon His request (imploring You to preach to Him), You replied to His word appropriately in the affirmative, Oh Lord!

thikku mikka vAnin Udu pukka vikkam mUdu cUrar thikka mutti Adu theera vadivElA: When the arrogant demons went in all directions and to the vast sky, You attacked them in the battle, scattering them all over, Oh Valorous One! You hold the sharp spear, Oh Lord!

secchai picchi mAlai mArpa vicchai kocchai mAthinOdu seppu veRpil sEy athAna perumALE.: Your chest is adorned with the garlands of vetchi and pichchi (jasmine) flowers! She speaks sweetly and softly like an intelligent prattler; along with that VaLLi as consort, You reside in Mount Pothigai* taking Your seat as the reddish Lord, Oh Great One!


* Mount Pothigai is near PApanAsam, in ThirunelvEli District.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 630 maikkaNikkan - podhiyamalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]