திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 629 நாமேவு குயிலாலும் (குன்றக்குடி) Thiruppugazh 629 nAmEvukuyilAlum (kundRakkudi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானான தனதான தானான தனதான தானான தனதான ...... தனதான ......... பாடல் ......... நாமேவு குயிலாலு மாமார னயிலாலு நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும் நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு நாடாசை தருமோக ...... வலையூடே ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி லேவாரும் விழிமாதர் ...... துயரூடே ஏகாம லழியாத மேலான பதமீதி லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய் தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு தானேறி விளையாடு ...... மொருபோதில் தாயாக வருசோதை காணாது களவாடு தாமோத ரன்முராரி ...... மருகோனே மாமாது வனமாது கார்மேவு சிலைமாது மாலாகி விளையாடு ...... புயவீரா வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ மாயூர கிரிமேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நா மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு(ம்) ... நாவால் கூவி இசைக்கும் குயிலின் பாட்டாலும், சிறந்த மன்மதனுடைய கூரிய பாணங்களாலும், நாள் தோறும் மதி காயும் வெயிலாலும் ... நாள் தோறும் வெய்யில் போல் காய்கின்ற நிலவின் ஒளியாலும், நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் ... அன்பும் அக்கரையும் உள்ள மாதர்கள் பேசும் வசை மொழியாலும், புல்லாங்குழல் ஊதும் இசையாலும், நாடு ஆசை தரு மோக வலை ஊடே ... விரும்புகிற ஆசையால் வரும் மோகம் என்கின்ற வலைக்குள், ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே ... ஏமாற்றம் அடைந்து நாள் முழுதும் காம இச்சையால் வீணாகவே வாரும் விழி மாதர் துயர் ஊடே ஏகாமல் ... நீண்ட கண்களை உடைய மாதர்களால் ஏற்படும் ஏச்சுத் துயரத்துக்குள் வீழாமல், அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உ(ன்)னுடன் மேவ அருள்தாராய் ... அழிவில்லாததும், மேலானதுமான நிலையை அடைந்து உன்னுடன் நான் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக. தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில் ... தாம் ஆசையுடன் கறந்த பாலைத் தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில், தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே ... தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்) பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே, மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது ... சிறந்த லக்ஷ்மி போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி) மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி மாலாகி விளையாடும் புய வீரா ... ஆசை பூண்டு விளையாடுகின்ற புயங்களை உடைய வீரனே, வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் ... விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும் மாயூர கிரி மேவும் பெருமாளே. ... மாயூர கிரி எனப்படும் குன்றக் குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே. |
* தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான். |
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. குயிலின் இசை, நிலவு, மன்மதன், அவனது அம்புகள், வசை பேசும் மாதர், புல்லாங்குழலின் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1023 pg 1.1024 pg 1.1025 pg 1.1026 WIKI_urai Song number: 411 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 629 - nAmEvu kuyilAlum (kundRakkudi) nAmEvu kuyilAlu mAmAra nayilAlu nAdORu mathikAyum ...... veyilAlum nArmAthar vasaiyAlum vEyUthu misaiyAlu nAdAsai tharumOka ...... valaiyUdE EmARi muzhunALu mAlAki viruthAvi lEvArum vizhimAthar ...... thuyarUdE EkAma lazhiyAtha mElAna pathameethi lEkeeyu nudanmEva ...... aruLthArAy thAmOka mudanURu pAlthEdi yuralUdu thAnERi viLaiyAdu ...... morupOthil thAyAka varusOthai kANAthu kaLavAdu dhAmOtha ranmurAri ...... marukOnE mAmAthu vanamAthu kArmEvu silaimAthu mAlAki viLaiyAdu ...... puyaveerA vAnAdu pukazhnAdu thEnARu pudaisUzha mAyUra kirimEvu ...... perumALE. ......... Meaning ......... nA mEvu kuyilAlum mA mAran ayilAlu(m): Because of the cuckoo that coos in a shrill voice, because of the sharp arrows shot by the great God of Love (Manmathan), nAL thORum mathi kAyum veyilAlum: because of the scorching rays of the moon that intensifies its heat day after day, nAr mAthar vasaiyAlum vEy Uthum isaiyAlum: because of the scandal spread by the well-meaning and dear womenfolk, and because of the haunting music emanating from the flute, nAdu Asai tharu mOka valai UdE: should I be snared in the web of lust caused by my love towards You? EmARi muzhunALum mAlAki viruthAvilE: I do not want to be disappointed by stretching the whole day and withering away in passionate thoughts vArum vizhi mAthar thuyar UdE EkAmal: falling victim to the misery-causing derision by women with large eyes; azhiyAtha mElAna patham meethil Ekee u(n)nudan mEva aruLthArAy: for that, kindly grant me the union with You, the imperishable bliss of which is the highest position that I could achieve! thAm mOkamudan URu pAl thEdi uralOdu thAn ERi viLaiyAdum oru pOthil: He went out, with passion, seeking fresh milk by playfully climbing on the stone-barrel; once, during such pursuit, thAyAka varu (ya)sOthai kANAthu kaLavAdu dhAmOtharan murAri marukOnE: He stole that milk so cleverly that His mother YasOdhai who came looking for the milk could not find it; He is DhAmOdharan*, Lord VishNu, and You are His nephew! mA mAthu vana mAthu kAr mEvum silai mAthu: She is VaLLi, the great damsel like Lakshmi, belonging to the forest of VaLLimalai, on the crest of which mountain clouds hover; mAlAki viLaiyAdum puya veerA: You have valorous shoulders coveted and played upon by that VaLLi! vAn nAdu pukazh nAdu thEn ARu pudai sUzhum: This region is hailed by the celestials as a famous one, adjacent to the river ThEnARu, mAyUra kiri mEvum perumALE.: known as MayUragiri (KundRakkudi)**, which is Your abode, Oh Great One! |
* DhAmam = rope, utharam = belly; as KrishnA was tied with a rope by YasOdha around his belly, He was known as DhAmOtharan. |
** KundRakkudi is in RAmanAthapuram District, 7 miles west of KAraikkudi. |
This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's role, expresses the pang of separation from the hero, Murugan. The cuckoo's song, the moonlight, the God of Love Manmathan, His arrows, scandal-mongering women and the music from the flute are a few of the things that aggravate the agony of separation. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |