முருகனுக்கான Poems for |
---|
தண்ணீர் மலையாண்டி ThaNNeermalaiyAndy |
கவிஞர் திலகம் கண்ணதாசன் Poet Kannadhasan | English | பட்டியல் தேடல் list search |
வாஞ்சையுடன் மீனாட்சி மதுரையிலே தேடுகிறாள் மகன்முகத்தைக் காணவில்லை வண்ணமயில் விசாலாட்சி காசியிலே வாடுகிறாள் மைந்தனிடம் கருணையில்லை காஞ்சிநகர்க் காமாட்சி மகன்முகத்தைக் காண்பதற்குக் கவலுகிறாள், கிட்டவில்லை காடுநட மாடுசிவன் கன்னிஇளந் தென்னகத்தில் கண்கலங்கல் தீரவில்லை தீஞ்சுவைத்தேன் பூமலரும் தெளிவான பினாங்குநகர் தேடியவன் வந்துவிட்டான் திருக்கோவில் கொண்டாடி மலையடியில் சிலையானான் தென்னாடன் தண்டபாணி தண்முகில்கள் குடைபோட்டுத் தாலாட்டுப் பொங்கருவி தளிர்நடையில் ஆடியசையும் தலைநிமிர்ந்த குன்றத்தில் நிலையுயர்ந்த பன்மரங்கள் தளபதிக ளாகஉலவும் தண்ணீர்ம லையடியில் வெண்ணீறு புசியவன் தண்டங்கை ஏந்திநின்றான் தமிழ்நாட்டு மக்களுக்கு மலைநாட்டுக் காவலெனத் தனியாக ஆளுகின்றான் வெண்ணீறு பூசுங்கள், வேந்தன் முகம் பாருங்கள் விளக்கேற்றிப் பூசியுங்கள் விடிவுவரும், வேதனைக்கு முடிவுவரும், எப்போதும் வினைதீர்ப்பான் தண்டபாணி. |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |