முருகனுக்கான Poems for |
---|
தண்ணீர் மலையான் தாள் பணிவோம் ThaNNeer MalaiyAn ThAL paNivOm |
பி. எல். சிங்காரம் B.L. Singaram | English | பட்டியல் தேடல் list search |
தண்ணீர்மலையானைத் தாள்பணிந்து தெண்டனிட்டால் தாளாத நோய்தீரும் தரணியிலே புகழ்சேரும் கண்ணீர் பெருக்கியவன் கழல்போற்றித் தெண்டனிட்டால் காணாத காட்சிதந்து காலமெல்லாம் காத்திடுவான். (தண்ணீர்மலையானை ...) மனதார நினைப்பவர்க்கு மனக்குறைகள் அகன்றோடும் வாயாரப் பாடிவிடில் வற்றாத செல்வந் தரும் நெஞ்சாரப் புகழ்வோர்க்கு நெற்றியிலே ஒளிதோன்றும் நினைப்பாக உருகிவரில் நிலையான இன்பமுண்டாம். (தண்ணீர்மலையானை ...) பிரச்சனைகள் புரிவோரை, பிரித்தாள நினைப்போரை பெரும்பிணிக்கே ஆளாக்கிப் பித்துமனம் தான்திருத்த மாறா மனத்துயரில் மதிமயக்கி மனங்கலங்கி மதிக்கும் நிலையுணர்த்தி மனத்தில் தெளிவுயர்த்தும். (தண்ணீர்மலையானை ...) திருத்தித் தெளிவூட்டித் திரும்பவும் அவனடியைச் சேர்வதற்கு வழிவகுக்கும் தெண்டா யுனதடியை இருத்தி மனத்தகத்தே இன்புறுவர் வாழ்வினிலே ஏற்றம் தனையருள்வான் எழில் தண்ணீர்மலையானே. (தண்ணீர்மலையானை ...). |
English transliteration to come |
பட்டியல் List |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] .[css] |