திருப்புகழ் 768 கட்காமக்ரோத  (சீகாழி)
Thiruppugazh 768 katkAmakrOtha  (seegAzhi)
Thiruppugazh - 768 katkAmakrOtha - seegAzhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கட்கா மக்ரோ தத்தே கட்சீ
     மிழ்த்தோர் கட்குக் ...... கவிபாடிக்

கச்சா பிச்சா கத்தா வித்தா
     ரத்தே யக்கொட் ...... களைநீளக்

கொட்கா லக்கோ லக்ஆகா ணத்தே
     யிட்டா சைப்பட் ...... டிடவேவை

கொட்டா னக்கூ னுக்கா எய்த்தே
     னித்தீ தத்தைக் ...... களைவாயே

வெட்கா மற்பாய் சுற்றூ மர்ச்சேர்
     விக்கா னத்தைத் ...... தரிமாறன்

வெப்பா றப்பா டிக்கா ழிக்கே
     புக்காய் வெற்பிற் ...... குறமானை

முட்கா னிற்கால் வைத்தோ டிப்போய்
     முற்சார் செச்சைப் ...... புயவீரா

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்குக் கவி பாடி ...
கள் குடிப்பதிலும், காம வசப்படுதலிலும், கோபப்படுவதிலும்,
இவைகளின் கண் வசப்பட்டவர்கள் மீது பாடல்களைப் பாடி,

கச்சா பிச்சாகத் தாவித்து ஆரத்தே அக் கொட்களை நீளக்
கொள்கால்
... தெளிவில்லாத முறையில் பாடப் பட்டோர் பெருமையை
பாமாலையில் நிலை நிறுத்தி, அப்படிப் பாடியதால் கொண்ட
பொருள்களை நெடுநாளாகச் சேகரிக்கும் போது,

அக்கோலக் கோணத்தே இட்டு ஆசைப் பட்டிடவே வை
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இத்தீது அத்தைக்
களைவாயே
... அந்த அழகிய முக்கோணம் போன்ற பெண்குறிக்கே
கொடுத்து ஆசைப்பட்டிடவே வைத்து (இங்ஙனம்) ஏற்கும்
தானத்துக்காகவும், இந்த உடலுக்காகவும் தேடி இளைத்தேன். இந்தத்
தீய குணத்தை நீக்கி அருள்வாயாக.

வெட்காமல் பாய் சுற்று ஊமர்ச் சேர் விக்கானத்தைத் தரி
மாறன் வெப்பு ஆறப் பாடிக் காழிக்கே புக்காய்
...
வெட்கப்படாமல் ஆடையாக அரையில் பாயைச் சுற்றிக் கொள்ளும்
அறிவிலிகளாகிய சமணர்களைச் சேர்ந்த தீதைக் கொண்டிருந்த
பாண்டியனின் சுரம் தணியும்படி ('மந்திரமாவது நீறு' என்று தொடங்கும்
பதிகத்தைப்) பாடி, சீகாழி* என்னும் ஊரில் புகுந்து இருந்த திருஞான
சம்பந்தனே,

வெற்பில் குறமானை முள் கானில் கால் வைத்து ஓடிப் போய்
முற்சார் செச்சைப் புய வீரா
... வள்ளி மலையில் குறப் பெண்
வள்ளியை, முள் தைக்கும் காட்டில் காலை வைத்து ஓடிப்போய் முன்பு
தினைப்புனத்திலே சென்று தழுவிய, வெட்சி மாலை அணிந்த
தோள்களை உடைய வீரனே,

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி
அளிக்கும் பெருமாளே.


* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

     யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.
     தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
     காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

... திருமுருகாற்றுப்படை.


சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.


சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி - காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் - பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் - கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
                  பூஜித்த தலம்,

தோணிபுரம் - பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால்
                  இப் பெயர் வந்தது,

பூந்தராய் - பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் - அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு
                  கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் - புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக்
                  கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை - சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை - பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்
                  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு - பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் - ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் - ,

புகலி -
            ... என்பன.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     341 - கொத்தார் பற் கால், 
     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     1116 - உற்பாதம் பூ, 
     1117 - எற்றா வற்றா, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1119 - பட்டு ஆடைக்கே, 
     1120 - பத்து ஏழு எட்டு, 
     1121 - பொற்கோ வைக்கே, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.855  pg 2.856  pg 2.857  pg 2.858 
 WIKI_urai Song number: 772 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 768 - katkAmakrOtha (seegAzhi)

katkA makrO thaththE katchee
     mizhththOaf katkuk ...... kavipAdik

kacchA picchA kaththA viththA
     raththE yakkot ...... kaLaineeLak

kotkA lakkO lakkO NaththE
     yittA saippat ...... tidavEvai

kottA nakkU nukkA eyththE
     niththee thaththaik ...... kaLaivAyE

vetkA maRpAy sutRU marcchEr
     vikkA naththaith ...... tharimARan

veppA RappA dikkA zhikkE
     pukkAy veRpiR ...... kuRamAnai

mutkA niRkAl vaiththO dippOy
     muRchAr secchaip ...... puyaveerA

muththA muththee yaththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

kaL kAma krOthaththE kaN seemizhththOrkatkuk kavi pAdi: I have been singing songs praising those who are drunkards, amorous and given to fits of temper;

kacchA picchAkath thAviththu AraththE ak kotkaLai neeLak koLkAl: my incoherent songs establishing the greatness of the people on whom the songs were sung yielded plenty of riches which I have been gathering for a long time;

akkOlak kONaththE ittu Asaip pattidavE vai koL thAnakku UnukkA eyththEn iththeethu aththaik kaLaivAyE: all that money was frittered away because of my obsession with the female genital shaped like a beautiful triangle; I grew weaker seeking that kind of money and spending it for the sake of my body; kindly bless me by getting rid of this evil in me!

vetkAmal pAy sutRu Umars sEr vikkAnaththaith thari mARan veppu ARap pAdik kAzhikkE pukkAy: Those samaNAs shamelessly wrapped around their body the mat made of grass; because of his evil association with those stupid samaNAs, King PANdiyan developed a fever; to remit that fever, You sang the hymn (ManthiramAvathu neeru), coming as ThirugnAna Sambandhar of SeekAzhi*, Oh Lord!

veRpil kuRamAnai muL kAnil kAl vaiththu Odip pOy muRsAr secchaip puya veerA: In VaLLimalai, You ran treading the path full of thorns pricking Your feet to see VaLLi, the damsel of the KuRavAs, and hugged her in the field of millet, Oh Valorous One wearing the garland of vetchi flowers!

muththA muththee aththA suththA muththA muththi perumALE.: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires!** You are impeccably pure! You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One!


* Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai:

     YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs;
     DakshinAgni - Fire for offering sacrifices to the celestials;
     Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.


SeegAzhi is 11 miles south of Chidhambaram.
It is the place of birth of one of the Saivite Quartets, ThirugnAna SambandhAr.


The various names of SeekAzhi are as follows:

1. VENupuram: The shrine where Indra named VENu worshipped to overcome his fear of a demon, GajamugA.
2. Thiruppukali: It is the place of refuge for the celestials who were terrified by the demon SUran.
3. Venguru: It is the shrine where Brahaspathi (Jupiter) worshipped.
4. PUntharAy: It is the shrine where Earth and ThArai worshipped.
5. Sirapuram: When the nectar was distributed by Lord VishNu to the celestials, Rahu and KEthu stealthily came as
     DEvAs and were beheaded by VishNu; at this shrine, they worshipped and got their heads back.
6. PuRavam: At this shrine a sage PrajApathi came in the disguise of a pigeon and offered his flesh as a sacrifice
     to save the king.
7. SaNpai: Sage DurvAsA, known as Sanpaimuni, worshipped at this shrine.
8. SeekAzhi: A serpent named KALi worshipped at this shrine.
9. Kochchai: Sage ParAsara was cursed by other sages and developed a stench all over his body which was removed
     after his worship at this shrine.
10. Kazhumalam: This is a shrine where all the sins of souls are washed away.
11. Piramapuram: This is a shrine where Lord Brahma offered worship.
12. ThONipuram: This shrine had the distinction of floating like a boat during the devastating flood at the end
     of the aeons.


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0341 - koththAr paR kAl, 
     0595 - meych chArvu atRE, 
     1116 - uRtpAtham pU, 
     1117 - etRA vatRA, 
     1118 - settAgath thEnai, 
     1119 - pattu AdaikkE, 
     1120 - paththu Ezhu ettu, 
     1121 - poRtkO vaikkE, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 768 katkAmakrOtha - seegAzhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]