திருப்புகழ் 1120 பத்து ஏழு எட்டு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1120 paththuEzhuettu  (common)
Thiruppugazh - 1120 paththuEzhuettu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
     வைத்தே பத்திப் ...... படவேயும்

பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
     சற்கா ரத்துக் ...... கிரைதேடி

எத்தே சத்தோ டித்தே சத்தோ
     டொத்தேய் சப்தத் ...... திலுமோடி

எய்த்தே நத்தா பற்றா மற்றா
     திற்றே முக்கக் ...... கடவேனோ

சத்தே முற்றா யத்தா னைச்சூர்
     கற்சா டிக்கற் ...... பணிதேசா

சட்சோ திப்பூ திப்பா லத்தா
     அக்கோ டற்செச் ...... சையமார்பா

முத்தா பத்தா ரெட்டா வைப்பா
     வித்தா முத்தர்க் ...... கிறையோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் ரட்டால் ... பத்து, ஏழெட்டு =
ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் ரட்டால் = பதினான்கு, ஆக
(10+56+16+14=96) தொண்ணூற்றாறு தத்துவங்களால்*

வைத்தே பத்திப் பட வேயும் ... அமைக்கப்பட்டே ஒழுங்குபடப்
பொருந்தி உள்ள,

பைப் பீறல் கூரை பாசத் தா ... தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு
சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால்

சற்காரத்துக்கு இரை தேடி ... (அதே உடலைப்) பேண உணவுக்கு
வேண்டிய வழியைத் தேடி,

எத் தேசத்து ஓடித் தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி ...
எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு
இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று,

எய்த்தே நத்தா பற்றா ... இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி
நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு,

மல் தாது இற்றே முக்கக் கடவேனோ ... வளப்பமான நாடித்
தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் என் தலையில்
எழுதியுள்ளதோ?

சத்தே முற்றாய் அத்தானைச் சூர் கல் சாடிக் கற்பு அணி
தேசா
... உண்மைப் பொருளே, என்றும் இளமையானவனே, அத்தனைச்
சேனைகளோடு கூடி வந்த சூரனையும், கிரெளஞ்ச மலையையும் அழிவு
செய்து நீதி நெறியை நிலை நாட்டிய ஒளி பொருந்தியவனே,

சோதிப் பூதி சட் பாலத்தா ... ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த
ஆறு திரு நெற்றிகளை உடையவனே,

அக் கோடல் செச்சைய மார்பா ... அந்தக் காந்தள் மாலையையும்
வெட்சி மாலையையும் அணிந்த மார்பனே,

முத் தாபத்தார் எட்டா வைப்பா ... (மண், பெண், பொன் என்ற)
மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப் பொருளே,

வித்தா முத்தர்க்கு இறையோனே ... அறிவிற் சிறந்தவனே,
இப்பிறவியிலேயே ஞானம் பெற்றவர்களுக்குத் தலைவனே,

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி
அளிக்கும் பெருமாளே.


* 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.


** மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

     யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.
     தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
     காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

... திருமுருகாற்றுப்படை.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     341 - கொத்தார் பற் கால், 
     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     768 - கட்காமக்ரோத, 
     1116 - உற்பாதம் பூ, 
     1117 - எற்றா வற்றா, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1119 - பட்டு ஆடைக்கே, 
     1121 - பொற்கோ வைக்கே, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.276  pg 3.277  pg 3.278  pg 3.279 
 WIKI_urai Song number: 1123 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1120 - paththu Ezhu ettu (common)

paththE zhettee rettEzh rattAl
     vaiththE paththip ...... padavEyum

paippee RaRkU raippA saththA
     saRkA raththuk ...... kiraithEdi

eththE saththO diththE saththO
     doththEy sapthath ...... thilumOdi

eyththE naththA patRA matRA
     thitRE mukkak ...... kadavEnO

saththE mutRA yaththA naiccUr
     kaRchA dikkaR ...... paNithEsA

satcO thippU thippA laththA
     akkO daRcsec ...... chaiyamArpA

muththA paththA rettA vaippA
     viththA muththark ...... kiRaiyOnE

muththA muththee yaththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

paththu Ezhu ettu eerettu Ezh rattAl: Ten, seven times eight (56), two times eight (16) and seven times two (14), totalling ninety-six (10+56+16+14 = 96) tenets*

vaiththE paththip pada vEyum: have been assembled in an orderly way to make

paip peeRal kUrai pAsath thA: this bag of skin, a little cottage subject to wear and tear, namely this body; it is propelled by attachments

saRkAraththukku irai thEdi: to seek ways and means of nourishing (that very body);

eth thEsaththu Odith thEsaththOdu oththu Ey sapthaththilum Odi: it runs to many countries and adapts very well to the conditions in those countries; it even travels up to the farthest seven islands,

eyththE naththA patRA: becomes weak, hangs on to those places with relish and desire

mal thAthu itRE mukkak kadavEnO: and eventually loses the strength in the vital blood cells; am I destined to go through this motion of miseries?

saththE mutRAy aththAnaic cUr kal sAdik kaRpu aNi thEsA: You are the true principle and an ever youthful One! By destroying the demon SUran, along with his entire army, and the Mount Krouncha, You established justice, Oh Bright One!

sOthip pUthi sat pAlaththA: You have six hallowed foreheads wearing the shining holy ash (VibUthi)!

ak kOdal cecchaiya mArpA: On Your broad chest You wear those garlands of kAnthaL and vetchi flowers!

muth thApaththAr ettA vaippA: You are the cherished treasure that is beyond the reach of people with the three kinds of desires (namely, property, women and gold)!

viththA muththarkku iRaiyOnE: Oh Wizard of Knowledge! You are the leader of all those who have attained realisation in this birth!

muththA muththee aththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires**! You are impeccably pure!

muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One!


* The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).


** Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai:

     YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs;
     DakshinAgni - Fire for offering sacrifices to the celestials;
     Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0341 - koththAr paR kAl, 
     0595 - meych chArvu atRE, 
     0768 - katkAmakrOtha, 
     1116 - uRtpAtham pU, 
     1117 - etRA vatRA, 
     1118 - settAgath thEnai, 
     1119 - pattu AdaikkE, 
     1121 - poRtkO vaikkE, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1120 paththu Ezhu ettu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]