திருப்புகழ் 1121 பொற்கோ வைக்கே  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1121 poRtkOvaikkE  (common)
Thiruppugazh - 1121 poRtkOvaikkE - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
     பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம்

பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
     கித்தே கைக்குப் ...... பொருள்தேடித்

தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
     திக்கோ டிப்பச் ...... சிமமான

திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
     வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ

தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
     ரைச்சா ரத்தற் ...... பரமானாய்

தப்பா முப்பா லைத்தே டித்தே
     சத்தோர் நிற்கத் ...... தகையோடே

முற்கா னப்பே தைக்கா கப்போய்
     முற்பால் வெற்பிற் ...... கணியானாய்

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பொன் கோவைக்கே பல் கோவைக்கே ... பொன் காசு
வரிசைகளுக்காகவும், வேறு பல விதமான வரிசைகளுக்காகவும்,

பொய்ப் போகத்தைப் பகர்வார் தம் ... நிலையற்ற சிற்றின்ப
சுகத்தை விலை பேசுபவர்களுடைய

பொய்க்கே மெய்க்கே பித்தாகி ... பொய் மொழிகளுக்கும், உடல்
அழகுக்கும் காம வெறிகொண்டு,

போகித்து ஏகைக்கு பொருள் தேடி ... காம இன்பத்தை
அநுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடுவதற்காக,

தெற்கு ஓடி காசிக்கு ஓடி ... தென் திசையிலுள்ள ஊர்களுக்கு
ஓடியும், (வடக்கிலுள்ள) காசி முதலிய ஊர்களுக்கு ஓடியும்,

கீழ் திக்கு ஓடி பச்சிமமான திக்கு ஓடி ... கிழக்கு, மேற்கு ஆகிய
திசைகளில் உள்ள ஊர்களுக்கு ஓடியும்,

பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடிக் கெட்டிடலாமோ ... (கப்பலேறித்)
திரை கடலோடியும், அக்கடலிலுள்ள பல தீவுகளுக்கு ஓடியும் நான்
வீணே அழிந்து போகலாமோ?

தற்கோலி பாவிப்பார் நல் சீரைச் சார ... உன்னைத் தியானித்து
(தமது) சிந்தையில் வைப்பவர்கள் மேலான நற் கதியை அடைவதற்கு,

தற்பரம் ஆனாய் ... அவர்கள் வழிபடும் பரம் பொருள் ஆனவனே,

தப்பா முப்பாலைத் தேடி ... தவறாமல் நாள்தோறும், அறம்,
பொருள், இன்பம் என்னும் மூன்று வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தேடி
வருகின்ற

தேசத்தோர் நிற்கத் தகையோடே ... மக்கள் ஒருபக்கத்தில் நிற்க*,
அருளுடனே

முன் கானப் பேதைக்காகப் போய் ... முன்பு காட்டிலிருந்த பெண்
வள்ளியின்பொருட்டு நீயே வலியச் சென்று,

முன் பால் வெற்பில் கணி ஆனாய் ... அவளின் முன்னே வள்ளி
மலையில் வேங்கை மரமாக நின்றவனே,

முத்தா முத்தீ அத்தா சுத்தா ... முத்துப்போன்ற அருமையானவனே,
மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே,

முத்தா முத்திப் பெருமாளே. ... பற்றற்றவனே, முக்தியைத் தரவல்ல
பெருமாளே.


* அறம், பொருள், இன்பம் எனப்படும் முப்பாலைத் தேடுவர் பலர். அவர்களைப்
புறக்கணித்து, நான்காவதாகிய முக்தி வீட்டைத் தேடிய வள்ளியைத் தாமே வலியத்
தேடிவந்து, முருகன் திருமணத்துக்கும் முயற்சித்தார்.


** மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

     யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.
     தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
     காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

... திருமுருகாற்றுப்படை.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     341 - கொத்தார் பற் கால், 
     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     768 - கட்காமக்ரோத, 
     1116 - உற்பாதம் பூ, 
     1117 - எற்றா வற்றா, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1119 - பட்டு ஆடைக்கே, 
     1120 - பத்து ஏழு எட்டு, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.278  pg 3.279  pg 3.280  pg 3.281 
 WIKI_urai Song number: 1124 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1121 - poRtkO vaikkE (common)

poRkO vaikkE paRkO vaikkE
     poyppO kaththaip ...... pakarvArtham

poykkE meykkE piththA kippO
     kiththE kaikkup ...... poruLthEdith

theRkO dikkA sikkO dikkeezh
     thikkO dippac ...... cimamAna

thikkO dippA NikkO diththee
     vukkO dikket ...... tidalAmO

thaRkO lippA vippAr naRcee
     raiccA raththaR ...... paramAnAy

thappA muppA laiththE diththE
     saththOr niRkath ...... thakaiyOdE

muRkA nappE thaikkA kappOy
     muRpAl veRpiR ...... kaNiyAnAy

muththA muththee yaththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

pon kOvaikkE pal kOvaikkE: For the collection of gold coins and several other material things,

poyp pOkaththaip pakarvAr tham: these whores bargain against their offer of short-lived carnal pleasure.

poykkE meykkE piththAki: Craving for their false words and beautiful bodies,

pOkiththu Ekaikkup poruL thEdi: and to pay for experiencing that pleasure, I went about in search of money,

theRku Odi kAsikku Odi: running to many towns in the south, to many other towns like KAsi (VAraNAsi) in the north,

keezh thikku Odi paccimamAna thikku Odi: dashing to all places in the east and scurrying to many centres in the west,

pANikku Odi theevukku Odik kettidalAmO: sailing by ships going overseas, and running to many far-off islands in several oceans. Why am I ruining myself in this way?

thaRkOli pAvippAr nal ceeraic cAra: Meditating upon You, many devotees hold You in their mind, enabling them to seek safer haven,

thaRparam AnAy: because You are the Supreme One worshipped by them.

thappA muppAlai thEdi thEsaththAr niRka: While people at large seek steadfastly every day, the three purushArthas of DharmA, Artha and KAmA (meaning, righteousness, material wealth and enjoyment) and stop short of seeking Mukthi (liberation, the fourth purushArtha),*

thakaiyOdE mun kAnap pEthaikkAkap pOy: You once proceeded voluntarily to reach the forest to graciously meet VaLLi, the damsel of the hunters,

mun pAl veRpil kaNi AnAy: and stood right in front of her in the disguise of a neem tree in the valley of Mount VaLLimalai .

muththA muththee aththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires!** You are impeccably pure!

muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One!


* Ignoring the majority who seek only three objectives in life, namely, righteousness, material wealth and enjoyment, Murugan went on His own to see VaLLi, who was the seeker of liberation (mukthi-mOksha), the fourth objective, and proceeded further to marry her giving her eternal bliss.


** Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai:

     YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs;
     DakshinAgni - Fire for offering sacrifices to the celestials;
     Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0341 - koththAr paR kAl, 
     0595 - meych chArvu atRE, 
     0768 - katkAmakrOtha, 
     1116 - uRtpAtham pU, 
     1117 - etRA vatRA, 
     1118 - settAgath thEnai, 
     1119 - pattu AdaikkE, 
     1120 - paththu Ezhu ettu, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1121 poRtkO vaikkE - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]