திருப்புகழ் 1119 பட்டு ஆடைக்கே  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1119 pattuAdaikkE  (common)
Thiruppugazh - 1119 pattuAdaikkE - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

பட்டா டைக்கே பச்சோ லைக்கா
     துக்கே பத்தித் ...... தனமாகும்

பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே
     பட்டா சைப்பட் ...... டுறவாடி

ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
     சுற்றே முற்றத் ...... தடுமாறும்

ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
     முற்றாள் கிட்டத் ...... தகுமோதான்

கட்டா விப்போ துட்டா விப்பூ
     கக்கா விற்புக் ...... களிபாடுங்

கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
     கத்தா சத்தித் ...... தகவோடே

முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
     முற்றா மற்கொட் ...... குமரேசா

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பட்டு ஆடைக்கே பச்சை ஓலைக் காதுக்கே ... பட்டுப்
புடைவைக்கும், பசும்பொன்னிலான தோட்டினை அணிந்துள்ள
காதுக்கும்,

பத்தித் தன மா கும்பக்கே நிட்டூரப் பார்வைக்கே பட்டு ...
ஒழுங்காக உள்ள அழகிய கும்பங்களைப் போன்ற மார்பகங்களுக்கும்,
கொடுமையைக் காட்டும் பார்வைக்கும் அகப்பட்டு,

ஆசைப்பட்டு உறவாடி ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு
உற்றே
... (விலைமாதரிடம்) ஆசைப்பட்டு உறவு பூண்டு கலந்து
களித்து, ஆகாதவர்கள், நண்பர்கள் முதலிய அனைத்து வட்டாரங்களிலும்
பழிப்புக்கு ஆளாகி,

முற்றத் தடுமாறும் ஒட்டாரப் பாவிக்கே ... அடியோடு
தடுமாறுகின்ற, பிடிவாதம் நிறைந்த பாவியாகிய எனக்கு,

மிக்காம் உன் தாள் கிட்டத் தகுமோதான் ... மேலானதாகிய
உனது திருவடி கிடைக்கும்படியான தகுதி உண்டோ?

கள் தாவிப் போது உள் தாவிப் பூகக் காவிற் புக்கு
அளிபாடும்
... மதுவை நாடி அலைந்து மலர்களின் உள்ளே பாய்ந்து,
கமுக மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற

கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய் கத்தா ... சிறந்த
முறைமை வாய்ந்த நன்மைகள் நிறைந்த அந்தச் சீகாழித் தலத்தை
அடைந்து வீற்றிருக்கும் கர்த்தனே,

சத்தித் தகவோடே முட்டாகக் கூரிட்டு ... இச்சா சக்தியின்
அம்சம் பொருந்தியுள்ள வள்ளியின் முன்னே எதிர்ப்பட வேண்டும்
என்ற எண்ணம் மிகுதியாகி

ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா ... தினைப்புனத்தில்
உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பேயே அந்த வள்ளியைக்
கவர்ந்து கொண்ட குமரேசனே,

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே,
முக்தி அளிக்கும் பெருமாளே.


* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

     யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.
     தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
     காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

... திருமுருகாற்றுப்படை.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     341 - கொத்தார் பற் கால், 
     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     768 - கட்காமக்ரோத, 
     1116 - உற்பாதம் பூ, 
     1117 - எற்றா வற்றா, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1120 - பத்து ஏழு எட்டு, 
     1121 - பொற்கோ வைக்கே, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.274  pg 3.275  pg 3.276  pg 3.277 
 WIKI_urai Song number: 1122 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1119 - pattu AdaikkE (common)

pattA daikkE pacchO laikkA
     thukkE paththith ...... thanamAkum

pakkE nittU rappAr vaikkE
     pattA saippat ...... tuRavAdi

ottAr nattAr vattA raththE
     sutRE mutRath ...... thadumARum

ottA rappA vikkE mikkA
     mutRAL kittath ...... thakumOthAn

kattA vippO thuttA vippU
     kakkA viRpuk ...... kaLipAdung

kaRpUr naRcA rakkA zhiththOy
     kaththA saththith ...... thakavOdE

muttA kakkU rittE natRAL
     mutRA maRkot ...... kumarEsA

muththA muththee yaththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

pattu AdaikkE pacchai Olaik kAthukkE paththith thana mA kumpakkE nittUrap pArvaikkE pattu: Falling for the silk saree, the ear that wears the greenish golden stud, the symmetrical and beautiful pot-like bosom and the eyes showing ferocity,

Asaippattu uRavAdi ottAr nattAr vattAraththu Esu utRE: I was madly in love (with those whores), carrying on my relationship with them; I became a subject of scandalous gossip in all circles of friends and foes alike;

mutRath thadumARum ottArap pAvikkE mikkAm un thAL kittath thakumOthAn: I was totally wobbly; does such a stubborn sinner like me deserve to attain Your hallowed feet?

kaL thAvip pOthu uL thAvip pUkak kAviR pukku aLipAdum: In the grove of betelnut trees (around this place), beetles enter humming and dive into the flowers in search of honey;

kaRpu Ur naRcAr ak kAzhith thOy kaththA: this town SeegAzhi has many virtues; and You have Your abode there, Oh Protector!

saththith thakavOdE muttAkak kUrittu: With a predetermined view to appearing before VaLLi, who is symbolic of the Power of Desire,

Enal thAL mutRAmal koL kumarEsA: You abducted her even before the crops of millet were fully grown, Oh Lord KumarA!

muththA muththee yaththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires*! You are impeccably pure!

muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One!


* Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai:

     YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs;
     DakshinAgni - Fire for offering sacrifices to the celestials;
     Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0341 - koththAr paR kAl, 
     0595 - meych chArvu atRE, 
     0768 - katkAmakrOtha, 
     1116 - uRtpAtham pU, 
     1117 - etRA vatRA, 
     1118 - settAgath thEnai, 
     1120 - paththu Ezhu ettu, 
     1121 - poRtkO vaikkE, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1119 pattu AdaikkE - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]