திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1123 மெய்க்கூணைத் தேடி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1123 meykkUNaiththEdi (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான ......... பாடல் ......... மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே வித்தா ரத்திற் ...... பலகாலும் வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே வித்தா சைச்சொற் ...... களையோதிக் கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா ரைப்போ லக்கற் ...... பழியாதுன் கற்பூ டுற்றே நற்றா ளைப்பா டற்கே நற்சொற் ...... றருவாயே பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய் முற்பால் வெற்பிற் ...... புனமானைப் பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே முக்கோ ணத்தா னத்தா ளைப்பால் வைத்தார் முத்தச் ...... சிறியோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மெய்க்கு ஊணைத் தேடிப் பூமிக்கே வித்தாரத்தில் பல காலும் வெட்காமல் சேரிச் சோரர்க்கே வித்து ஆசைச் சொற்களை ஓதி ... இந்த உடல்பசிக்கு உணவை நாடி பூமியில் அதிகமாகப் பல முறையும் நாணம் என்பதே இல்லாமல் பரத்தையர் சேரியில் உள்ள கள்ள மனம் உடைய வேசியரைத் தேடி, ஆசையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுக்களைப் பேசி, கைக்காணிக் கோணல் போதத்தாரை போலக் கற்பு அழியாது ... அந்தப் பரத்தையர்களுக்குக் காணிக்கையாகப் பொருள் கொடுக்கும் கோணல் வழியில் செல்லும் அறிவீனரைப் போல நான் ஒழுக்கத்தைக் கைவிடாமல், உன் கற்பு ஊடுற்றே நல் தாளைப் பாடற்கே நல் சொல் தருவாயே ... உன்னுடைய பெருங் குணங்களைக் கற்கும் நெறியில் நின்று, உன் சிறந்த திருவடிகளைப் பாடுவதற்காக செஞ்சொற்களைத் தந்தருளுக. பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய் ... (வேடன், வேங்கை, செட்டி, கிழவன் ஆகிய) பொய்யான வேஷங்களைக் கொள்ளுதலை விரும்பி, ஆழ்ந்து நாணத்தால் உடலும் கூனலுற்றுச் சென்று, முற்பால் வெற்பில் புன மானைப் பொன் தோளில் சேர்க்கைக்காகப் பாதத் தாள் பற்றிப் புகல்வோனே ... பழம்பெரும் பொருளாகிய வள்ளி மலையில் தினைப்புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியின் அழகிய தோள்களில் சேரும் பொருட்டு, அவள் பாதமாகிய திருவடியைப் பிடித்து வணங்கி ஆசை மொழிகளைச் சொன்னவனே, முக்கோண தானத்தாளைப் பால் வைத்தார் முத்தச் சிறியோனே ... மூன்று மூலைக் கோண வடிவமான மந்திர சக்கரத்தில் அமைந்து விளங்கும் பார்வதியை தமது இடது பாகத்தில் வைத்த சிவபெருமான் முத்தமிடும் குழந்தையே, முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. |
* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு: யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது. தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது. காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது. ... திருமுருகாற்றுப்படை. |
இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு: 341 - கொத்தார் பற் கால், 595 - மெய்ச் சார்வு அற்றே, 768 - கட்காமக்ரோத, 1116 - உற்பாதம் பூ, 1117 - எற்றா வற்றா, 1118 - செட்டாகத் தேனை, 1119 - பட்டு ஆடைக்கே, 1120 - பத்து ஏழு எட்டு, 1121 - பொற்கோ வைக்கே, 1122 - பொற் பூவை, ... என்று தொடங்கும் பாடல்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.284 pg 3.285 pg 3.286 pg 3.287 pg 3.288 pg 3.289 WIKI_urai Song number: 1126 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1123 - meikkUNai thEdi (common) meykkU NaiththE dippU mikkE viththA raththiR ...... palakAlum vetkA maRchE ricchO rarkkE viththA saicchoR ...... kaLaiyOthik kaikkA NikkO NaRpO thaththA raippO lakkaR ...... pazhiyAthun kaRpU dutRE natRA LaippA daRkE naRchoR ...... RaruvAyE poykkO NaththAzh meykkO NippOy muRpAl veRpiR ...... punamAnaip potRO LiRchEr kaikkA kappA thaththAL patRip ...... pukalvOnE mukkO NaththA naththA LaippAl vaiththAr muththac ...... chiRiyOnE muththA muththee yaththA suththA muththA muththip ...... perumALE. ......... Meaning ......... meykku UNaith thEdip pUmikkE viththAraththil pala kAlum vedkAmal sEris sOrarkkE viththu Asais soRkaLai Othi: To satisfy the hunger of the body, people in this world, many times and without shame, excessively seek the company of whores residing in their hamlet and indulge in talks with them purely based on passion; kaikkANik kONal pOthaththArai pOlak kaRpu azhiyAthu: they shower money and other offerings on the whores following a crooked path; I do not wish to give up the moral path forsaken by those foolish people; un kaRpu UdutRE nal thALaip pAdaRkE nal sol tharuvAyE: kindly bless me showing the righteous path of learning about Your glorious attributes and grant me the choicest words to sing about Your hallowed feet! poyk kOL naththu Azh meyk kONip pOy: Assuming several false disguises (such as a hunter, neem tree, bangle-seller and an old man), You went with a deep sense of shyness and a crooked body with a hunch-back muRpAl veRpil puna mAnaip pon thOLil sErkkaikkAkap pAthath thAL patRip pukalvOnE: to the ancient place, Mount VaLLimalai, in order to hug the beautiful shoulders of VaLLi, the deer-like damsel living in the millet field; You caught hold of her hallowed feet, prostrating at them, and spoke loving words to her, Oh Lord! mukkONa thAnaththALaip pAl vaiththAr muththac chiRiyOnE: She is seated in the middle of a triangular chakra of ManthrA; She is PArvathi, concorporate on the left side of Lord SivA; and You are the lovely child kissed by that SivA, Oh Lord! muththA muththee aththA suththA muththA muththi perumALE.: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires*! You are impeccably pure! You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One! |
* Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai: YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs; DakshinAgni - Fire for offering sacrifices to the celestials; Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth. |
The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this: 0341 - koththAr paR kAl, 0595 - meych chArvu atRE, 0768 - katkAmakrOtha, 1116 - uRtpAtham pU, 1117 - etRA vatRA, 1118 - settAgath thEnai, 1119 - pattu AdaikkE, 1120 - paththu Ezhu ettu, 1121 - poRtkO vaikkE, and 1122 - poRt pUvai |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |