திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1122 பொற் பூவை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1122 poRtpUvai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான ......... பாடல் ......... பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ தப்பே சிப்பொற் ...... கனிவாயின் பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் கற்பா லெக்கா வுட்கோ லிக்கா சுக்கே கைக்குத் ...... திடுமாதர் கட்கே பட்டே நெட்டா சைப்பா டுற்றே கட்டப் ...... படுவேனோ சொற்கோ லத்தே நற்கா லைச்சே விப்பார் சித்தத் ...... துறைவோனே தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர் விக்கா முக்கத் ...... தொடும்வேலா முற்கா லத்தே வெற்பேய் வுற்றார் முத்தாள் முத்தச் ...... சிறியோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பொன் பூவைச் சீரைப் போலப் போதப் பேசிப் பொன் கனி வாயின் ... அழகிய நாகண வாய்ப்புள்ளின் சீரான குரலைப் போன்ற குரலுடன், பொருந்தும்படி அழகிய கொவ்வைக் கனி போன்ற வாயினால் செவ்வையாகப் பேசி, பொய்க் காமத்தே மெய்க்கு ஆம் அப் பூணைப் பூண் வெற்பில் துகில் சாய ... நிலையில்லாத சிற்றின்பத்தின் பொருட்டு, (தங்கள்) உடலுக்குத் தக்கதான அந்த ஆபரணங்களை அணிந்துள்ள, மலை போன்ற மார்பகங்ககள் மீது ஆடை சாய்ந்து நெகிழ, கற்பால் எக்கா உட்கோலிக் காசுக்கே கை குத்து இடு(ம்) மாதர் ... ஆணையிட்டுத் தாக்கி, மனத்தில் உள்ள எண்ணங்களை வைத்து கொண்டு, பொருள் வேண்டியே கை கலந்து குத்துச் சண்டை செய்யும் விலைமாதர்களின் கட்கே பட்டே நெட்டு ஆசைப் பாடு உற்றே கட்டப் படுவேனோ ... கண்களுக்கே வசப்பட்டு, பெரும் ஆசை வினைகளில் ஈடுபட்டு நான் துன்பப்படுவேனோ? சொல் கோலத்தே நல் காலைச் சேவிப்பார் சித்தத்து உறைவோனே ... சொல் அலங்காரத்துடன், உனது சிறப்புற்ற திருவடிகளைத் தொழுபவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே, தொக்கே கொக்காகிச் சூழ அச் சூர் விக்கா முக்கத் தொடும் வேலா ... தனது உடலை மாமரமாக்கிச் சூழ்ச்சி செய்த அந்தச் சூரன் திண்டாட்டத்தால் வேதனைப்படும்படியாக வேலயுதத்தைச் செலுத்தியவனே, முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்தச் சிறியோனே ... ஆதி காலம் முதல் கயிலைமலையில் அமர்பவரான சிவபெருமானும், முத்தாம்பிகை எனப்படும் தேவியும் முத்தமிட்டு மகிழும் குழந்தையே, முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே. |
* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு: யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது. தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது. காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது. ... திருமுருகாற்றுப்படை. |
இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு: 341 - கொத்தார் பற் கால், 595 - மெய்ச் சார்வு அற்றே, 768 - கட்காமக்ரோத, 1116 - உற்பாதம் பூ, 1117 - எற்றா வற்றா, 1118 - செட்டாகத் தேனை, 1119 - பட்டு ஆடைக்கே, 1120 - பத்து ஏழு எட்டு, 1121 - பொற்கோ வைக்கே, 1123 - மெய்க்கூணைத் தேடி ... என்று தொடங்கும் பாடல்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.282 pg 3.283 pg 3.284 pg 3.285 WIKI_urai Song number: 1125 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1122 - poRt pUvai (common) poRpU vaicchee raippO lappO thappE sippoR ...... kanivAyin poykkA maththE meykkA mappU NaippUN veRpit ...... RukilsAyak kaRpA lekkA vutkO likkA sukkE kaikkuth ...... thidumAthar katkE pattE nettA saippA dutRE kattap ...... paduvEnO soRkO laththE naRkA laicchE vippAr siththath ...... thuRaivOnE thokkE kokkA kiccU zhaccUr vikkA mukkath ...... thodumvElA muRkA laththE veRpEy vutRAr muththAL muththac ...... chiRiyOnE muththA muththee yaththA suththA muththA muththip ...... perumALE. ......... Meaning ......... pon pUvaic cheeraip pOlap pOthap pEsip pon kani vAyin: With a sweet voice like that of the beautiful bird (nAkaNavAy), their speech emanates nicely from their cute reddish lips that are like the kovvai fruit; poyk kAmaththE meykku Am ap pUNaip pUN veRpil thukil sAya: for the sake of fleeting carnal pleasure, they let loose their attire covering their mountain-like bosom decorated with ornaments befitting their beautiful body; kaRpAl ekkA utkOlik kAsukkE kai kuththu idu(m) mAthar: they swear with blasphemous words and attack; with ulterior motive, these whores even resort to fist-fights for the sake of money; katkE pattE nettu Asaip pAdu utRE kattap paduvEnO: being enticed by their eyes, am I to indulge in lustful acts and suffer miserably? sol kOlaththE nal kAlaic chEvippAr siththaththu uRaivOnE: You reside in the hearts of those devotees who prostrate at Your hallowed feet praising You with the choicest words, Oh Lord! thokkE kokkAkich chsUzhUzha ac cUr vikkA mukkath thodum vElA: He deceitfully took the disguise of a mango tree; You struck that demon SUran with grief by wielding Your powerful weapon, the spear, Oh Lord! muRkAlaththE veRpu EyvutRAr muththAL muththac chiRiyOnE: You are the little child cuddled and kissed ecstatically by SivA, the primordial Lord seated in Mount KailAsh, and His Consort, MuththAmbikai (PArvathi)! muththA muththee yaththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires*! You are impeccably pure! muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One! |
* Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai: YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs; DakshinAgni - Fire for offering sacrifices to the celestials; Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth. |
The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this: 0341 - koththAr paR kAl, 0595 - meych chArvu atRE, 0768 - katkAmakrOtha, 1116 - uRtpAtham pU, 1117 - etRA vatRA, 1118 - settAgath thEnai, 1119 - pattu AdaikkE, 1120 - paththu Ezhu ettu, 1121 - poRtkO vaikkE, and 1123 - meikkUNai thEdi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |