திருப்புகழ் 341 கொத்தார் பற் கால்  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 341 koththArpaRkAl  (kAnjeepuram)
Thiruppugazh - 341 koththArpaRkAl - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தா ...... தனதான

......... பாடல் .........

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
     குப்பா யத்திற் ...... செயல்மாறிக்

கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
     கொட்டா விக்குப் ...... புறவாசித்

தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
     அஆ உஉ...... எனவேகேள்

செற்றே சுட்டே விட்டே றிப்போ
     மப்பே துத்துக் ...... கமறாதோ

நித்தா வித்தா ரத்தோ கைக்கே
     நிற்பாய் கச்சிக் ...... குமரேசா

நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
     நெட்டோ தத்திற் ...... பொருதோனே

முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
     முட்டா திட்டத் ...... தணிவோனே

முற்றா நித்தா அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கொத்தார் பற் கால் அற்று ஏகப் பாழ் குப்பாயத்திற்
செயல்மாறி
... வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று
விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின்
செயல்கள் தடுமாறி,

கொக்காகிக் கூனிக் கோல் தொட்டே ... மயிரெல்லாம்
கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து,
ஊன்றுகோல் பிடித்து,

கொட்டாவிக் குப்புற வாசித் தித்தா நிற்றார் செத்தார்
கெட்டேன்
... கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து,
இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர்
இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி,

அஆ உஉ எனவேகேள் செற்றே சுட்டே விட்டு ஏறிப்போம் ...
அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச்
சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி
வருகின்ற

அப்பேதுத் துக்கம் அறாதோ ... அந்தப் பேதைமை வாய்ந்த
துக்கம் நீங்காதோ?

நித்தா வித்தாரத் தோகைக்கே நிற்பாய் கச்சிக் குமரேசா ...
என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது
விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே,

நிட்டூரச் சூர் கெட்டோடப் போர் நெட்டு ஓதத்திற்
பொருதோனே
... கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து
கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே,

முத்தாரத் தோளிற் கோடற்பூ முட்டாது இட்டத்து
அணிவோனே
... முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள்
மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே,

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே,
என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே,
முக்தியைத் தரும் பெருமாளே.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     768 - கட்காமக்ரோத, 
     1116 - உற்பாதம் பூ, 
     1117 - எற்றா வற்றா, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1119 - பட்டு ஆடைக்கே, 
     1120 - பத்து ஏழு எட்டு, 
     1121 - பொற்கோ வைக்கே, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.99  pg 2.100  pg 2.101  pg 2.102 
 WIKI_urai Song number: 483 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 341 - koththAr paR kAl (kAnjeepuram)

koththAr paRkA latRE kappAzh
     kuppA yaththiR ...... seyalmARik

kokkA kikkU nikkOl thottE
     kottA vikkup ...... puRavAsith

thiththA nitRAr seththAr kettEn
     aA u u ...... enavEkEL

setRE suttE vittE RippO
     mappE thuththuk ...... kamaRAthO

niththA viththA raththO kaikkE
     niRpAy kacchik ...... kumarEsA

nittU raccUr kettO dappOr
     nettO thaththiR ...... poruthOnE

muththA raththO LiRkO daRpU
     muttA thittath ...... thaNivOnE

mutRA niththA aththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

koththAr paR kAl atRu Ekap pAzh kuppAyaththiR seyalmARi: "The neat rows of teeth were uprooted and fell; the activities of the degenerated cloak of his body became tottered;

kokkAkik kUnik kOl thottE: the hair became white like the crane; the body developed a hunch-back and leaned on a walking stick;

kottAvik kuppuRa vAsith thiththA niRRAr seththAr kettEn: the head stooped down after a series of yawns; suffering such a metamorphosis he stood and then he died; "alas, I have lost him" - so scream many a relative;

aA u u enavEkEL setRE suttE vittu ERippOm: sobbing with the sounds of "a A u u" these relatives walk up to the cremation ground, burn down the corpse, (take a dip in water) and leave that place;

appEthuth thukkam aRAthO: will such a silly grief never end?

niththA viththArath thOkaikkE niRpAy kacchik kumarEsA: Oh Immortal One, You mount the peacock with a beautiful and broad plume, Oh KumarA belonging to KAnchipuram!

nittUrac cUr kettOdap pOr nettu OthaththiR poruthOnE: As the evil demon SUran ran in defeat and hid in the sea, You charged up to the wide sea and fought with him!

muththArath thOLiR kOdaRpU muttAthu ittaththu aNivOnE: On Your shoulders, adorned with the pearl necklace, You happily wear the garland of white kAnthaL flowers without fail.

mutRA niththA aththA suththA muththA muththip perumALE.: You never age! You are eternally young! Oh my father! You are impeccably pure! You are totally detached! You are the one that can grant us liberation, Oh Great One!


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0595 - meych chArvu atRE, 
     0768 - katkAmakrOtha, 
     1116 - uRtpAtham pU, 
     1117 - etRA vatRA, 
     1118 - settAgath thEnai, 
     1119 - pattu AdaikkE, 
     1120 - paththu Ezhu ettu, 
     1121 - poRtkO vaikkE, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 341 koththAr paR kAl - kAnjeepuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]