திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1118 செட்டாகத் தேனை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1118 settAgaththEnai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தத் ...... தனதான ......... பாடல் ......... செட்டா கத்தே னைப்போ லச்சீ ரைத்தே டித்திட் ...... பமதாகத் திக்கா மற்பா டுற்றா ரிற்சீ ருற்றா ருக்குச் ...... சிலபாடல் பெட்டா கக்கூ றிப்போ தத்தா ரைப்போல் வப்புற் ...... றுழலாதே பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள் சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ எட்டா நெட்டா கத்தோ கைக்கே புக்கோ லத்திட் ...... டிமையோர்வா னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் ...... களைவோனே முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... செட்டாகத் தேனைப் போலச் சீரைத் தேடித் திட்பம் அதாக ... பொறுக்கி எடுத்தாற் போல் சிக்கனமாக, தேன்போல் இனிக்கும் சிறப்புள்ள சொற்களையும், கருத்தையும் நாடி, திண்மையான வாக்கினால் திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்குச் சில பாடல் ... தங்கு தடை இல்லாமல் பாடுதலைக் கொண்டவர்கள் போல, நானும் செல்வம் படைத்தவர்களிடம் சென்று சில பாடல்களை பெட்டாகக் கூறிப் போதத்தாரைப் போல் வப்புற்று உழலாதே ... மயக்கம் வல்ல பொய்யான மொழியில் பாடி, ஞான அறிவு கொண்டவர்களைப் போல பாவனை செய்து வீணாகக் காலத்தைப் போக்கித் திரியாமல், பெற்றாரில் சார்வுற்றாய் நல் தாள் சற்று ஓதப் பெற்றிடுவேனோ ... என்னைப் பெற்ற தாய் தந்தையரைப் போல அன்பு காட்டித் துணை நிற்பவனே, உனது நல்ல திருவடிளைச் சிறிதளவாவது போற்றும் பாக்கியத்தைப் பெறுவேனோ? எட்டா(து) நெட்டாகத் தோகைக்கே புக்கு ஓலத்திட்டு இமையோர் ... நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது பாய்ந்து ஏறி, எங்களைக் காத்தருள்க, அபயம் என்று கூச்சலிட்டு, தேவர்கள் வானில் பாரில் சூழச் சூரைத் தான் எட்டா வெட்டிப் பொரும் வேலா ... விண்ணிலும், பூமியிலும் உன்னைச் சூழ்ந்து நிற்க, சூரனை அணுகி அவனை வெட்டிச் சண்டை செய்யும் வேலனே, முட்டாமல் தாளைச் சேவிப்பார் முன் பாவத்தைக் களைவோனே ... தங்கள் வழிபாட்டில் தடை இன்றி உனது திருவடியைச் சேவிப்பவர்களின் முந்தைய தீவினையை நீக்கி அருள்பவனே, முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. |
* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு: யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது. தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது. காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது. ... திருமுருகாற்றுப்படை. |
இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு: 341 - கொத்தார் பற் கால், 595 - மெய்ச் சார்வு அற்றே, 768 - கட்காமக்ரோத, 1116 - உற்பாதம் பூ, 1117 - எற்றா வற்றா, 1119 - பட்டு ஆடைக்கே, 1120 - பத்து ஏழு எட்டு, 1121 - பொற்கோ வைக்கே, 1122 - பொற் பூவை, 1123 - மெய்க்கூணைத் தேடி ... என்று தொடங்கும் பாடல்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.272 pg 3.273 pg 3.274 pg 3.275 WIKI_urai Song number: 1121 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1118 - settAgath thEnai (common) chettA kaththE naippO lacchee raiththE diththit ...... pamathAkath thikkA maRpA dutRA riRcee rutRA rukkuc ...... cilapAdal pettA kakkU RippO thaththA raippOl vapput ...... RuzhalAthE petRA riRcAr vutRAy natRAL satRO thappet ...... RiduvEnO ettA nettA kaththO kaikkE pukkO laththit ...... timaiyOrvA niRpA riRchU zhacchU raiththA nettA vettip ...... porumvElA muttA matRA LaicchE vippAr muRpA vaththaik ...... kaLaivOnE muththA muththee yaththA suththA muththA muththip ...... perumALE. ......... Meaning ......... chettAkath thEnaip pOlac ceeraith thEdith thitpam athAka: With carefully chosen select words that are sweet as honey and potent with meaning, thikkAmal pAdu utRAril ceer utRArukkuc cila pAdal: I fluently sang a few songs like glib poets praising some rich people in flattering and untrue language; pettAkakkUrip pOthaththAraip pOl vapputRu uzhalAthE: I roamed about in vain falsely portraying myself as an intellectual scholar; petRAril sArvutRAy nal thAL satRu Othap petRiduvEnO: You take care of me like my comforting parents, showering Your love on me; will I be privileged to prostrate at Your hallowed feet and praise them at least to a little extent? ettA(thu) nettAkath thOkaikkE pukku Olaththiddu imaiyOr: The celestials pleaded to You loudly saying "Please mount the illustrious peacock swiftly and protect us; we seek Your refuge!" vAnil pAril chUzhac chUraith thAn ettA vettip porum vElA: While they encircled You in the sky and on the earth, You confronted the demon, SUran, and fought, maiming him with Your spear, Oh Lord! muttAmal thALaic chEvippAr mun pAvaththaik kaLaivOnE: You eradicate the past deeds of, and bless, the devotees who worship Your feet unswervingly! muththA muththee aththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires*! You are impeccably pure! muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One! |
* Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai: YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs; DakshinAgni - Fire for offering sacrifices to the celestials; Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth. |
The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this: 0341 - koththAr paR kAl, 0595 - meych chArvu atRE, 0768 - katkAmakrOtha, 1116 - uRtpAtham pU, 1117 - etRA vatRA, 1119 - pattu AdaikkE, 1120 - paththu Ezhu ettu, 1121 - poRtkO vaikkE, 1122 - poRt pUvai and 1123 - meikkUNai thEdi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |