(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 342 கோவைச் சுத்த  (காஞ்சீபுரம்)
Thiruppugazh 342 kOvaichchuththa  (kAnjeepuram)
Thiruppugazh - 342 kOvaichchuththa - kAnjeepuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான

......... பாடல் .........

கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங்

கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப்

பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே

பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும்

மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா

மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே

சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கோவைச் சுத்தத் துப்பு அதரத்துக் கொடியார் தம் ... கொவ்வைப்
பழம் போலவும், சுத்தமான பவளம் போலவும் சிவந்த வாயிதழ்களை
உடைய கொடி போன்ற விலைமாதர்களின்

கோலக் கச்சுக் கட்டிய முத்தத் தனம் மேவி ... அழகிய கச்சு
அணிந்துள்ளதும், முத்து மாலை அணிந்துள்ளதுமான மார்பகங்களை
விரும்பி,

பாவத்துக்குத் தக்கவை பற்றித் திரியாதே ... பாவ
காரியங்களுக்குத் தக்கவையான செயல்களையே பற்றிக்கொண்டுச்
செய்து திரியாமல்,

பாடப் பத்திச் சித்தம் எனக்கு தரவேணும் ... உன்னைப்
பாடிப் புகழப் பக்தி நிறைந்த உள்ளத்தை எனக்குத் தந்தருள
வேண்டும்.

மாவைக் குத்திக் கைத்து அற எற்றிப் பொரும் வேலா ...
மாமரமாக வந்த சூரனைக் குத்தி, அவனை வெறுத்து அடியோடு
கொன்று சண்டை செய்த வேலை ஏந்தியவனே,

மாணிக்கச் சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே ...
மாணிக்கம் முதலிய ரத்தினங்கள் நிறைந்த விண்ணுலகத்தில்
இருந்த ஒப்பற்ற கிளியாகிய தேவயானைக்கு இனியவனே,

சேவல் பொன் கைக் கொற்றவ கச்சிப் பதியோனே ...
சேவற் கொடியை அழகிய கையில் கொண்ட வீரனே, காஞ்சீபுரத்தில்
வாழ்பவனே,

தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப் பெருமாளே. ... தேவர்கள்
வாழும் விண்ணுலகத்துக்குச் சக்கரவர்த்தியாகிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.101  pg 2.102  pg 2.103  pg 2.104 
 WIKI_urai Song number: 484 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 342 - kOvaich chuththa (kAnjeepuram)

kOvaic chuththath thuppatha raththuk ...... kodiyArthang

kOlak kacchuk kattiya muththath ...... thanamEvip

pAvath thukkuth thakkavai patRith ...... thiriyAthE

pAdap paththic chiththa menakkuth ...... tharavENum

mAvaik kuththik kaiththaRa etRip ...... porumvElA

mANik kacchork kaththoru thaththaik ...... kiniyOnE

sEvaR poRkaik kotRava kacchip ...... pathiyOnE

thEvac chorkkac chakkira varththip ...... perumALE.

......... Meaning .........

kOvaic chuththath thuppu atharaththuk kodiyAr tham: These creeper-like whores have reddish lips like the kovvai fruit and pure coral;

kOlak kacchuk kattiya muththath thanam mEvi: hankering after their bosom covered by beautiful blouse and pearl strings,

pAvaththukkuth thakkavai patRith thiriyAthE: I do not want to roam about bent on engaging in sinful activities;

pAdap paththic chiththam enakku tharavENum: for that, kindly grant me a mind full of devotion that will enable me to sing Your glory!

mAvaik kuththik kaiththu aRa etRip porum vElA: When the demon SUran came in the disguise of a mango tree, Your battling spear pierced through it, condemning and destroying him altogether, Oh Lord!

mANikkac chorkkaththu oru thaththaikku iniyOnE: You are the beloved consort of DEvayAnai, the matchless, parrot-like damsel of the celestial land full of rubies and other gems!

sEval pon kaik kotRava kacchip pathiyOnE: You hold in Your elegant hand the staff with the Rooster! You have Your abode in KAnchipuram!

thEvac chorkkac chakkiravarththip perumALE.: You are the emperor of the Divine Land of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 342 kOvaich chuththa - kAnjeepuram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top