திருப்புகழ் 1149 கதறிய கலைகொடு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1149 kadhaRiyakalaikodu  (common)
Thiruppugazh - 1149 kadhaRiyakalaikodu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தத்தாத் தானன
     தனதன தனதன தத்தாத் தானன
          தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான

......... பாடல் .........

கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
     பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி
          கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங்

கருகிய வினைமன துட்டாக் காதது
     சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது
          கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே

விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
     ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்
          வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டரீக

ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
     நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக
          விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ

பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
     சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக
          பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும்

பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு
     படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை
          படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ்

சததள அமளியை விட்டாற் றேறிய
     சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு
          தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே

தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
     மழகிய கலவிதெ விட்டாக் காதலி
          தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

கதறிய கலை கொடு சுட்டாத் தீர் பொருள் ... கதறிக் கதறிப்
படிக்கின்ற சாத்திரங்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முடியாத ஒரு
தீர்மானமான பொருள்.

பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி ... பதைபதைத்துப் பேசும்
சமய வாதிகளால் எட்ட முடியாத ஒரு பெரிய ஜோதிப் பொருள்.

கரு அற இரு வினை கெட்டாற்(கு) காண் வரும் என்ற ஏகம் ...
பிறப்பு நீங்கும்படி நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் ஒழிந்த
பெரியோர்களால் மட்டும் காணக்கூடும் என்று சொல்லப்படும் ஒப்பற்ற
தனிப் பொருள்.

கருகிய வினை மனதுள் தாக்காதது ... இருண்ட (அஞ்ஞான) தீச்
செயல் எண்ணங்களைக் கொண்ட மனதைத் தீண்டாத பொருள்.

சுருதிகள் உருகி ஒர் வட்டாய்த் தோய்வது ... வேதங்கள்
ஒன்றுபட்டு ஒரு திரண்ட உருவாக விளங்கும் பொருள்.

கசடு அற முழுதையும் விட்டால் சேர்வ(து) உணர்ந்திடாதே ...
பிழை இல்லாமல் எல்லாவற்றையும் விட்டொழித்தால் வந்து கூடுகின்ற
அரிய பொருளை நான் உணராமல்,

வித மதுகர(ம்) முரல் மொட்டால் சாடிய ரதி பதி என வரு(ம்)
துட்ட ஆத்மாவுடன்
... பலவிதமான வண்டுகள் ஒலிக்கும் மலர்
அரும்புகளால் தாக்குகின்ற, ரதியின் கணவனான மன்மதன் என்ற
பெயர் கொண்ட, துஷ்டனோடு

வினை புரிபவர் இடும் முற்றாச் சால் இரு புண்டரீக ம்ருகமத
முகுளித மொட்டால்
... தொழில் புரிகின்றவர்களாகிய வேசியர்
தருகின்ற, இளமை நிரம்பிய, இரு தாமரைகளான, கஸ்தூரி அணிந்த,
குவிந்த மொட்டுப் போன்ற மார்பகங்களாலும்,

கார் முக(ம்) நுதல் எழுதிய சிறு பொட்டால் ... வில்லைப் போன்ற
நெற்றியில் தீட்டப்பட்டுள்ள சிறிய பொட்டினாலும்,

சாயக(ம்) விரகு உடை விழி வலை பட்டால் தாது
நலங்கலாமோ
... அம்பைப் போல கூரியதாய், தந்திரம் நிறைந்த, கண்
வலையினாலும் நான் பாதிக்கப்படுவதால், என் உடலில் உள்ள இரத்தம்,
எலும்பு, தசை, தோல் முதலிய எல்லா தாதுக்களும் வருந்தலாமோ?

பத மலர் மிசை கழல் கட்டாப் பாலக ... மலர் போன்ற திருவடிகளில்
கழலைக் கட்டுவதற்குக் கூட அவசியம் இல்லாத குழந்தையே,

சுருதிகள் அடி தொழ எட்டாத் தேசிக ... வேதங்கள் உன்
அடிகளைத் தொழுவதற்கு, அவைகள் எட்ட முடியாத குரு மூர்த்தியே.

பருகு என வன முலை கிட்டாத் தாரகை தந்து நாளும்
பரிவுற
... உண்பாயாக என்று அழகிய மார்பகங்களை ஈந்து கார்த்திகைப்
பெண்கள் அறுவரும் நாள்தோறும் பால் தந்து அன்பு கொள்ள,

வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை ... பல
முகங்களைக் கொண்ட பெரிய ஆறாகிய கங்கைநதியின் இடையே
இருந்த ஒப்பற்ற நீர்நிலையாகிய (சரவணப்) பொய்கையில்

புழு எட்டாப் பாசடை படர்வன பரிமள முள் தாள் தாமரை
தங்கி வாழும்
... புழு முதலிய பிராணிகள் அணுக முடியாத பசுமையான
இலைகள் படர்ந்துள்ளதும், நறு மணம் கொண்ட முள்ளும், தண்டும்
உடைய தாமரை மலர் மீது தங்கி நீ வாழ்கின்ற

சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய ... நூறு இதழ்களால்
அமைந்த படுக்கையை விட்டு எழுந்து, கங்கை ஆற்றிலிருந்து நீங்கி
புறப்பட்டு,

சல நிதி குறுகிட ஒட்டாச் சூரொடு தமனிய குலகிரி
பொட்டாய்த் தூள் எழ வென்ற கோவே
... கடல் நீர் வற்றிக்
குறுகவும், வணங்காமுடியாகிய சூரனும், பொன்மயமான சிறந்த கிரவுஞ்ச
மலையும் தொளைபட்டுப் பொடிப் பொடியாகும்படி வென்ற தலைவனே,

தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி
தெவிட்டாக் காதலி தலை மக
... நீ கொடுத்த (கரும்புத்) தழையால்
மனம் குழைந்த பட்டுப் போன்றவளும், மிகவும் அழகான சேர்க்கை
இன்பத்தில் தெவிட்டாத ஆசை தந்த தலைவியுமாகிய வள்ளியின்
தலைவனே,

நிலம் அடி தட்டாத் தேவர்கள் தம்பிரானே. ... கால்கள் பூமியில்
தோயாத தேவர்களின் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.362  pg 3.363  pg 3.364  pg 3.365  pg 3.366  pg 3.367  pg 3.368 
 WIKI_urai Song number: 1152 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1149 - kadhaRiya kalaikodu (common)

kathaRiya kalaikodu suttAth theerporuL
     pathaRiya samayika LettAp pEroLi
          karuvaRa iruvinai kettAR kANvaru ...... menRaEkang

karukiya vinaimana thuttAk kAthathu
     suruthika Lurukiyor vattAith thOyvathu
          kasadaRa muzhuthaiyum vittAR sErvathu ...... NarnthidAthE

vithamathu karamural mottAR cAdiya
     rathipathi yenavaru thuttAth mAvudan
          vinaipuri pavaridu mutRAc cAliru ...... puNdareeka

mrukamatha mukuLitha mottAR kArmuka
     nuthalezhu thiyasiRu pottAR cAyaka
          virakudai vizhivalai pattAt RAthuna ...... langalAmO

pathamalar misaikazhal kattAp pAlaka
     suruthika Ladithozha ettAth thEsika
          parukena vanamulai kittAth thArakai ...... thanthunALum

parivuRa vekumuka nettAt RUdoru
     padukaiyi nidaipuzhu vettAp pAsadai
          padarvana parimaLa muttAt tAmarai ...... thangivAzhunj

sathathaLa amaLiyai vittAt RERiya
     salanithi kuRukida vottAc cUrodu
          thamaniya kulakiri pottAyth thULezha ...... venRakOvE

thazhaitharu kuzhaitharu pattAt cAlavu
     mazhakiya kalavithe vittAk kAthali
          thalaimaka nilamadi thattAth thEvrkaL ...... thambirAnE.

......... Meaning .........

kathaRiya kalai kodu suttAth theer poruL: It is such an unambiguous principle that cannot be pinpointed by zealots who have studied textbooks voraciously.

pathaRiya samayikaL ettAp pEroLi: It is such a large effulgence that can never be attained by religious fanatics who argue agitatedly.

karu aRa iru vinai kettAR(ku) kAN varum enRa Ekam: It is such a unique principle that can be discerned only by those great people who have destroyed their deeds (both good and bad) and thereby put an end to rebirth.

karukiya vinai manathuL thAkkAthathu: It is one that would never touch a heart that is filled with dark and vicious thoughts.

suruthikaL uruki or vattAith thOyvathu: It is formed into a massive shape due to the amalgamation of all scriptures.

kasadu aRa muzhuthaiyum vittAl sErva(thu) uNarnthidAthE: It is the rare principle derived by renouncing everything in a flawless manner. I have not been able to realise such a great thing.

vitha mathukara(m) mural mottAl sAdiya rathi pathi ena varu(m) thutta AthmAvudan: He is known as Manmathan, the consort of Rathi, who shoots the flowery arrows, around which a variety of beetles hum; with the help of that wicked soul (Manmathan)

vinai puripavar idum mutRAc cAl iru puNdareeka mrukamatha mukuLitha mottAl: these whores carry on with their profession; their youthful, lotus-like bosom, of the shape of buds, smeared with musk,

kAr muka(m) nuthal ezhuthiya siRu pottAl: the vermilion displayed on their bow-like forehead,

sAyaka(m) viraku udai vizhi valai pattAl thAthu nalangalAmO: and their arrow-like sharp eyes, spreading out the deceitful web, - all these affect me so much that my blood, bones, muscles and skin, constituting my vital organs, suffer miserably; is it fair?

patha malar misai kazhal kattAp pAlaka: Your hallowed feet are like flower obviating the need to adorn them with anklets, dear child!

suruthikaL adi thozha ettAth thEsika: In order to prostrate at Your feet, even the scriptures are unable to reach them, Oh Master!

paruku ena vana mulai kittAth thArakai thanthu nALum parivuRa: While the six divine KArthigai women offered their breast-milk every day telling You kindly, "Lo, here is the milk for You to imbibe",

veku muka nettu AtRUdu oru padukaiyinidai: You were in the unique pond (SaravaNa) in the midst of the great river Gangai with a thousand faces

puzhu ettAp pAsadai padarvana parimaLa muL thAL thAmarai thangi vAzhum: comfortably tucked in upon a lotus, with fragrant thorns and a stem, surrounded by green leaves which were beyond the reach of worms;

satha thaLa amaLiyai vittu AtRu ERiya: from that slumber on that lotus-bed consisting of a hundred petals, You got up and departed from River Gangai

sala nithi kuRukida ottAc cUrodu thamaniya kulakiri pottAyth thUL ezha venRa kOvE: only to see that the seas shrank and dried up, and that the demon SUran, a head that refuses to bow before anyone and the famous mount Krouncha were pierced and shattered to pieces, Oh Victorious Leader!

thazhai tharu kuzhai tharu pattAL sAlavum azhakiya kalavi thevittAk kAthali thalai maka: When You offered her the tender sugarcane, her heart simply melted; that VaLLi, with a smooth silky skin, gave You inexhaustible pleasure full of love, Oh Lord!

nilam adi thattAth thEvarkaL thambirAnE.: You are the Lord of the celestials whose feet never touch the ground, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1149 kadhaRiya kalaikodu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]