பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாது) திருப்புகழ் உரை 359 பரிவுற அன்பு கொள்ள, வெகுமுக நெட்டாற்றுாடு பலமுகமாய்) ஆயிரமுகமாய்ப் பரந்து செல்லும் நெடிய நீண்ட ஆற்றுாடு) கங்கையாற்றின் இடையே இருந்த (ஒரு ஒப்பற்ற ஒரு படுகையின் இடை நீர் நிலையின் மத்தியிலே, LHCLP - LIGP முதலிய ஜெந்துக்கள் (எட்டா) அணுக முடியாத (பாசடை) - (பசுமை அடை) பசிய இலைகள் படர்ந்துள்ளதும், நறுமணம் கொண்டதும், முள் உள்ள தண்டை உடையதுமான தாமரை மலரில் தங்கி நீ வாழ்கின்ற (சததள அமளியை) நூறு இதழ்களால் அமைந்த படுக்கையை விட்டு, ஆற்று ஏறிய (ஆறு ஏறிய) கங்கை ஆற்றை விட்டு நீங்கிச், (சலநிதி) கடல் வற்றிக் குறுகவும், (ஒட்டாச் குரொடு) - வந்து இது சூரனும், (தமனிய ஃேபோனே சிறந்த ரவுஞ்ச மலையும் தொளைபட்டு நீறாக வென்ற தலைவனே! தழைதரு குழைதரு - நீ கொடுத்த தழையால் குழைவுற்ற (மனங்குழைந்த) (பட்டாள்) பட்டுப்போன்றவளும், பட்டாடை அணியத் தக்கவளும், (சாலவும் அழகிய) - மிகவும் அழகுகொண்ட (கலவி) புணர்ச்சி யின்பத்தில் தெவிட்டா - வெறுப்பிலாத (காதலியு மாகிய) ஆசைத்தலைவியுமாகிய வள்ளியின் (தலைமகனே) நாயகனே! (நிலம்) பூமியில் பாதம் தோயாத தேவர்களின் தம்பிரானே! (விழிவலைபட்டால் தாது நலங்கலாமோ) (வள்ளிக்குத் தழை தந்து மனங் குழைவு உற்ற (பட்டு + ஆள்) பரிசுத்தனே! எனலுமாம்: பட்டாள் என்பது பட்டுப்போன்ற பரிசுத்தமான ஆள் (நம்பி) எனவும் பொருள்படும். பட்டு - ஆள் என்பதற்கு குழை வுற்றுத் தழை தந்து - (மாகதர்போல) வள்ளியைப் புகழ்ந்து நின்ற ஆள் எனவும் பொருள்படும். பட்டுக்கள் என்னும் சொல்லுக்கு இருந்தேத்தும் மாகதர்" எனவும் பொருள் உண்டு - மாகதர் - (அரசன்) புகழ் பாடும் ஒரு சாதியார் (சிலப் அரும்பத 5-48) X தேவர்களின் காஷ் நிலத்தில் தோயாது: தமயந்தி சுயம் வரத்தின் போது தேவர்களும் நளன் உருவோடு வந்திருந்தார்கள். தேவர்களுக்குக் கண் இமைத்தல் இல்லை, கால் பூமியில் தோயாது. மாலை வாடாது. இவ்விலக்கணங்களை அறிந்த தமயந்தி நளனுடைய கண் இமைத்தலைக் கண்டும், கால் பூமியில் தோய்தலைக் கண்டும், மாலை வாடுதலைக் கண்டும் உண்மை நளன் இன்னான் என்று அறிந்து மாலை சூட்டினள் . (தொடர்ச்சி 360ஆம் பக்கம் பார்க்க)