திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1148 கடைசி வந்தகன்று (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1148 kadaisivandhagandRu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தந்தனந் தனன தந்தன தனன தந்தனந் தனன தந்தன தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான ......... பாடல் ......... கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர் கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக் கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர் கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும் படைம தன்பெருங் கிளைதி ருந்திய அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப மகர வெங்கருங் கடலொ டுங்கிட நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம் அடியொ டும்பிடுங் கியத டங்கர வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக அவச மும்புனைந் தறமு னைந்தெழு பருவ தஞ்சிறந் தகன தந்தியின் அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர் கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட ... ஓரங்கள் சிவந்து அகலமாய் விளங்கி, பேச்சைப் பேசுவது போல் பேசி, இரண்டு காதுகளையும் வீசித் தாக்கி, பரந்த ரேகைகளைக் கொண்டு விளங்குகின்ற கரிய கண்கள் துறவிகளுடைய மார்பையும் தொளை செய்வது போல் நீண்டு ஓட, கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசிந்து உயிர் கவர இங்கிதம் கெறுவிதம் பெற விளையாடும் ... ஆடை தளர்ந்து கரிய கூந்தல் சரிய மார்பகங்களைச் சுமப்பதாலும், அசைவுற்று இடுப்பு ஒடிந்து, உயிரையே கவரும்படி இனிமையுடனும் செருக்குடனும் காம விளையாட்டுகள் செய்யும் படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம் தனை உணர்ந்து அணி பணி நிதம்ப(ம்) இன்ப சுகமும் தர முதிர் காம பரவசம் தணிந்து ... மன்மதனுடைய பெரிய சுற்றமாகிய படையான மகளிருடைய சுத்தமான சிவந்த இதழின் சுவையை அறிந்து, பாம்பின் படத்தை ஒத்த பெண்குறி இன்ப சுகத்தை தரப் பெறும் முற்றின காம மயக்கம் ஒழிந்து, உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக பதம் அடைந்து இருந்து அருள் பொருந்தும் அது ஒரு நாளே ... உன்னைத் தியானித்து ஒப்பற்ற மெளனம் என்னும் கூட்டில் விளையாடும் (கிளியின்)* பேரின்ப நிலையை அடைந்து அதில் நிலைத்து திருவருளைப் பொருந்தி மகிழ்வதாகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட ... வடக்கே உள்ள பெரிய மலைகள் கலக்குண்டு, பூமியில் உள்ளவர்கள் அன்பு கொண்டு மகிழ்ச்சி உற, வந்து அடைக்கலம் புகுந்த இந்திரன் தன்னுடைய பொன்னுலகை அடையும்படி மிக்கக் கோபம் கொண்டது போல் பொங்கினதும், மகர மீன்களை உள்ளதுமான பெரிய கரிய கடல் அடங்கவும், நிசிசரன் பெரும் குலம் ஓருங்கிற வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம் அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ ... அசுரனாகிய சூரனின் பெரிய சுற்றங்கள் முழுதும் அழிவுபட, பிரமன் நின்று அழுது ஓலமிடும்படி நெருங்கி வந்த மாமரமாகிய சூரனை அடியோடு பிடுங்கி பிளந்தெறிந்த பெருமை வாய்ந்த திருக் கரத்தை உடைய அழகனே, அம் சுரும்பு உற விரும்பிய அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின் அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே. ... அழகிய வண்டுகள் (மலர்களைச்) சேர விரும்பிய (வள்ளிமலைக்) காட்டையும் அடிமை பூண்ட மனத்துடன், (வள்ளியை) வணங்கும்படி காமப்பற்றுள்ள மயக்கத்தைக் கொண்டு, மிகவும் முற்பட்டு எழுகின்றதும், சிறந்த மலை போல, பெருமை பொருந்திய யானை போன்றதும் அமுத மயமான மென்மையுள்ளதுமாகிய (வள்ளியின்) மார்பகங்களைத் தழுவும் பெருமாளே. |
* சுகம் என்பதற்கு கிளி, பேரின்பம் என்ற இரு பொருள் உண்டு. முருகன் அருணகிரிநாதருக்கு இறுதியில் கிளி உருவமும் தந்து, முக்தியும் நல்கினான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.360 pg 3.361 pg 3.362 pg 3.363 WIKI_urai Song number: 1151 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1148 - kadaisi vandhagandRu (common) thanana thanthanan thanana thanthana thanana thanthanan thanana thanthana thanana thanthanan thanana thanthana ...... thanathAna ......... Song ......... kadaisi vanthakan Ruraipu kanRiru kuzhaiyai yunthuran tharipa ranthoLir kariya kaNthuRan thavarni RanthoLai ...... padavOdak kalaine kizhnthirung kuzhalsa rinthida mulaisu manthasain thidaiyo sinthuyir kavara ingithang keRuvi thampeRa ...... viLaiyAdum padaima thanperung kiLaithi runthiya athara kinjukan thanaiyu NarnthaNi paNini thampa-in pasuka munthara ...... muthirkAma parava santhaNin thunaiyu Narnthoru mavuna panjaram payiltha rumsuka pathama dainthirun tharuLpo runthuma ...... thorunALE vadane dumsilam pukaLpu lampida makitha lampaiyang koduma kizhnthida varupu rantharan thanapu rampeRa ...... muthukOpa makara vengarung kadalo dungida nisisa ranperung kulamo rungiRa vanasa ninRazhum padine rungiya ...... vorucUtham adiyo dumpidung kiyatha dangara vadiva anjurum puRavi rumpiya adavi yunthozhum podutho zhumpadi ...... yanurAka avasa mumpunain thaRamu nainthezhu paruva thanjchiRan thakana thanthiyin amutha menkuyang kaLinmu yangiya ...... perumALE. ......... Meaning ......... kadai sivanthu akanRu urai pukanRu iru kuzhaiyaiyum thuranthu ari paranthu oLir kariya kaN thuRanthavar niRam thoLai pada Oda: The eyes (of the whores) are wide with a reddish tinge at the corners; they communicate as though they talk; attacking both the ears while rolling sideways, these black eyes, having widespread and tiny capillaries, are capable of piercing the hearts of even the ascetics who have renounced; kalai nekizhnthu irum kuzhal sarinthida mulai sumanthu asainthu idai osinthu uyir kavara ingitham keRuvitham peRa viLaiyAdum: loosening their attire and hair, these whores, with a heavy bosom and a twirling waist that caves in, play many a sweet and pompous erotic game; padai mathan perum kiLai thirunthiya athara kinjukam thanai uNarnthu aNi paNi nithampa(m) inpa sukamum thara muthir kAma paravasam thaNinthu: these women are the biggest army of the God of Love, Manmathan; after imbibing the tasty saliva oozing from their pure and reddish lips and enjoying the ultimate climax of passion offered by their genitals resembling the hood of the cobra, my delusion is over; unai uNarnthu oru mavuna panjaram payil tharum suka* patham adainthu irunthu aruL porunthum athu oru nALE: thereafter, will I be able to meditate upon You like a parrot playing inside the cage of divine bliss of tranquility, remaining in that state of ecstacy of Your grace? Shall I be fortunate to attain that happiness one of these days, Oh Lord? vada nedum silampukaL pulampida makithalam priyam kodu makizhnthida varu purantharan thana puram peRa muthu kOpa makara vem karum kadal odungida: The huge mountains in the north were shattered; people on the earth were delighted with a feeling of love; Indra, the leader of the celestials, sought refuge and his golden celestial land was redeemed for him; the large sea with makara fish first rose as if it was furious and then subsided; nisisaran perum kulam OrungiRa vanasan ninRu azhumpadi nerungiya oru cUtham adiyodum pidungiya thadam kara vadiva: the large clan of the demon SUran was completely annihilated; when that SUran, coming in the disguise of a mango tree, confronted BrahmA making Him scream in terror, You uprooted that tree (SUran) with Your hallowed hand and split him apart, Oh Handsome One! am surumpu uRa virumpiya adaviyum thozhumpodu thozhumpadi anurAka avasamum punainthu aRa munainthu ezhu paruvatham siRantha kana thanthiyin amutha men kuyangaLil muyangiya perumALE.: Your mind was so overwhelmed to take over the entire forest (of VaLLimalai) which is sought after by beautiful beetles (being enchanted by the flowers); Your passion (for VaLLi) was so much that You were ready to prostate at Her feet; and You went about hugging the soft and nectar-like bosom of VaLLi, that rose prominently like a mountain and looked like a celebrated elephant, Oh Great One! |
* The word suka has two meanings, namely, 1) a parrot and 2) eternal bliss; Sri AruNagirinAthar was ultimately blessed into the body of a parrot and Lord MurugA gave him eternal bliss as well. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |