திருப்புகழ் 1147 ஓலை தரித்த குழை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1147 Olaithariththakuzhai  (common)
Thiruppugazh - 1147 Olaithariththakuzhai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தத்தன தத்த தத்தன
     தானன தத்தன தத்த தத்தன
          தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
     மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற
          லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம்

ஓதிமி குத்தத வத்த வர்க்கிட
     ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி
          யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே

மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
     வாசமு லைக்குள கப்ப டுத்தியில்
          வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர்

மாயம யக்கையொ ழித்து மெத்தென
     வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர
          வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ

வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
     வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
          வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே

வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை
     மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட
          வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக்

காலயி லக்கணை தொட்ட ருட்கன
     மாலமை திக்கரை யிற்ற ரித்துல
          காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன்

காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ
     நானில வித்ததி னைப்பு னத்தொரு
          காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி ... காதோலை அணிந்த
குண்டலத்தைத் தாண்டி அப்புறம் ஓடி,

நிறத்து மதர்த்து நெய்த்த அறல் ஓதி நிழற்குள் அளி
குலத்துடன் ஒன்றி
... ஒளிவிட்டு, செழிப்புற்று, வாசனையான
எண்ணெய் தடவப் பெற்று, கரிய மணல் போன்ற கூந்தலின் நிழலில்
மொய்க்கும் வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி,

ஞானம் ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி
வடுப்படுத்து
... ஞான நூல்களைப் படித்துள்ள பெரிய தவசிகளுக்கு
துன்பத்தையும் இன்பத்தையும் கொடுத்து, தனது அடையாளத்தை
அவர்கள் மனதில் தழும்புபடச் செய்து,

அகி ஊடு விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே ...
பாம்பினிடத்திலுள்ள விஷத்தைத் தங்கும்படி செய்து, கண்களாகிய
அம்பைக் கொண்டு,

மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள்
அகப்படுத்தி
... காம மயக்கத்தை உண்டாக்கி, நல்ல செல்வப் பொருளை
நறு மணம் கொண்ட மார்பகங்களின் சக்தியால் கைப்பற்றிக் கொண்டு,

இல் வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர் ... வீட்டுக்கு
வா என்று அழைத்து முழுவதும் வசப் படுத்திக் கூட்டிச் சென்று உள்ளே
புகுகின்ற விலைமாதர்களின்

மாய மயக்கை ஒழித்து மெத்தென வானவருக்கு அருள் உற்ற
அக்ஷர வாய்மை எனக்கும் இனித்து அளித்து அருள்
தந்திடாதோ
... காம இச்சையை ஒழித்து, பக்குவமாக தேவர்களுக்கு
அருள் செய்த (சரவணபவ என்னும்) ஷடாக்ஷர எழுத்து உண்மையை
எனக்கும் மகிழ்ச்சியுடன் திருவருள் செய்திடக் கூடாதா?

வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொ(ல்)லும்
அக்கணத்தினில்
... கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன்
அடைக்க வேண்டும் என்று சொல்லி, அதைக் கேட்ட அந்த
நொடியிலேயே,

வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே வீச
அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள்
முற்பட
... மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை
நளன் என்னும் வானரத் தச்சன் கைகளால் மேலும் மேலும் வீசி எறிய,
அவைகளை இணைத்து அமைத்து அணையாகக் கட்டி, அரக்கர்கள்
வசமிருந்த இலங்கைப் பகுதியில் முன்பட்டுச் சேர்ந்து,

வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள ...
(அங்கு ராமபிரான்) விபீஷணனுக்கு அருள் புரிந்து, அவனுடைய
அண்ணன்களான கும்பகர்ணனும் ராவணனும் இறந்து ஒழிய,

கால் அயில் அக் கணை தொட்ட அருள் கனமால் அமைதிக்
கரையில் தரித்து உலகு ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல்
தந்த காமன்
... கூர்மையைக் காட்டும் அம்புகளை விடுத்த திருவருள்
வீரம் நிறைந்தவரும், பொறுமைக் கரையில் நிலையாக நின்று உலகை
ஆளும்படி (விபீஷணனுக்குக்) கொடுத்த பெருந்தன்மை
வாய்ந்தவருமாகிய அருட் கடலாகிய திருமால் பெற்ற மன்மதனுடைய

காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ ... உடலை எரித்து ஒழித்த
சிவபெருமான் ஈன்ற வீரனே,

நானில வித்த தினைப் புனத்து ஒரு காதல் மிகுத்து மிக
ப்ரமித்து அருள் தம்பிரானே.
... (வள்ளிமலையின்) பூமியில்
விதைக்கப்பட்டு விளைந்த தினைப்புனத்தில் ஒப்பற்ற ஆசை மிகுந்து,
வெகுவாக மயங்கி வள்ளிக்கு அருள் செய்த தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.356  pg 3.357  pg 3.358  pg 3.359  pg 3.360  pg 3.361 
 WIKI_urai Song number: 1150 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1147 - Olai thariththa (Common)

Olaitha riththaku zhaikku mappuRa
     mOdini Raththuma tharththu neyththaRa
          lOthini zhaRkuLa Likku laththuda ...... nonRinjAnam

Othimi kuththatha vaththa varkkida
     rOkaise luththiva duppa duththaki
          yUduvi daththaiyi ruththi vaiththaka ...... NampinAlE

mAlaima yakkaivi Laiththu naRporuL
     vAsamu laikkuLa kappa duththiyil
          vAvena mutRina daththi yutpuku ...... manthamAthar

mAyama yakkaiyo zhiththu meththena
     vAnava rukkaru LutRa akshara
          vAymaiye nakkumi niththa LiththaruL ...... thanthidAthO

vElaiya daikkaa rikku laththodu
     vENume naccholu makka Naththinil
          vEkamo dappuma laikku laththaina ...... LankaimElE

veesaa vatRinai yoppa mittaNai
     mEviya rakkarpa thikkuL muRpada
          veedaNa nukkaruL vaiththa vatRamai ...... yankaLmALak

kAlayi lakkaNai thotta rutkana
     mAlamai thikkarai yitRa riththula
          kALaa Liththapra puthva rutkadal ...... thanthakAman

kAyamo zhiththavar petRa kotRava
     nAnila viththathi naippu naththoru
          kAthalmi kuththumi kapra miththaruL ...... thambirAnE.

......... Meaning .........

Olai thariththa kuzhaikkum appuRam Odi: Their eyes run along well beyond the swinging ear-studs;

niRaththu matharththu neyththa aRal Othi nizhaRkuL aLi kulaththudan onRi: they resemble the horde of beetles swarming around the bright, lush, fragrant, greasy and blacksand-like hair;

njAnam Othi mikuththa thavaththavarkku idar Okai seluththi vaduppaduththu: even the great sages who have mastered scriptures of knowledge are haunted (by those eyes) giving them pleasure and misery alternately and leaving an indelible scar in their heart;

aki Udu vidaththai iruththi vaiththa kaN ampinAlE: with these arrow-like eyes filled with poison from the cobra,

mAlai mayakkai viLaiththu nal poruL vAsa mulaikkuL akappaduththi: they provoke passion in the mind of their suitors and grab their valuable belongings wielding their powerful and scented bosom;

il vA ena mutRi nadaththi uL pukum antha mAthar: by inviting them to their place, these whores usher them inside their houses and bind them completely;

mAya mayakkai ozhiththu meththena vAnavarukku aruL utRa akshara vAymai enakkum iniththu aLiththu aruL thanthidAthO: Will you not wipe out my passionate desire and kindly grant me with pleasure the truthful principle of the six-lettered ManthrA (saravaNabava), which You aptly preached to the Celestials?

vElai adaikka ari kulaththodu vENum ena so (l)lum akkaNaththinil: The moment it was declared that a bridge had to be built over the sea with the help of the multitude of monkeys,

vEkamodu appu malai kulaththai naLan kai mElE veesa avatRinai oppam ittu aNai mEvi arakkar pathikkuL muRpada: the architect-monkey, naLan, hurriedly kept on casting heaps of mountains that were attached in a series forming the bridge; through that bridge, the army of monkeys advanced to LankA, the region occupied by the demons;

veedaNanukku aruL vaiththu avan thamaiyankaL mALa: there Lord RAmA bestowed His blessings on VibheeshaNan whose older brothers, RAvaNan and KumbakarNan, were destroyed

kAl ayil ak kaNai thotta aruL kanamAl amaithik karaiyil thariththu ulaku ALa aLiththa praputhva aruL kadal thantha kAman: by the sharp arrows wielded by the gracious and valorous Lord RAmA; He stood steadfastly on the serene shore of the ocean of compassion and magnanimously offered the land to be ruled (by VibheeshaNan); that Lord VishNu delivered Manmathan (God of Love) as His son;

kAyam ozhiththavar petRa kotRava: the body of that Manmathan was charred by the fiery eyes of Lord SivA; and You are that SivA's son, Oh valorous One!

nAnila viththa thinaip punaththu oru kAthal mikuththu mika pramiththu aruL thambirAnE.: The millet seeds that were implanted in the field (in VaLLimalai) flourished, and in that field You developed a matchless desire and great passion for VaLLi who was blessed by You, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1147 Olai thariththa kuzhai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]