பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 357 கருகிய வினை மனதுள் - தாக்காதது - இருண்ட அஞ்ஞான முள்ள வினை - தீச்செயல் எண்ணங்களைக் கொண்ட மனத்தைத் தீண்டாததான (பொருள்) வேதங்கள் எல்லாம் ஒன்றுபட்டு உருகி ஒரு (வட்டாய்) திரண்ட பொருளாய்த் தோய்ந்து (விளங்கும் பொருள்), கசடு அற குற்றங்கள் எல்லாம் நீங்கச் சகலபற்றையும் விட்டொழித்தால் வந்து கூடுகின்ற (அரிய பொருள்) - அத்தகைய பொருளை (நான்) உணராமல் - விதம்விதமான (மதுகரம்) வண்டுகள் (முரல்) ஒலிக்கும் (மொட்டால்) மலர் அரும்பாகிய பானங்களால் (சாடிய) தாக்குகின்ற, (ரதிபதி) ரதியின் கணவனாம் மன்மதன் எனும் பேருடன் வரும் (துட்டாத்மா) துவrட ஆத்மா - துவக்ட புருஷனுடன் (வினைபுரிபவர்) தொழில் புரிபவர்களாகிய (வேசையர்) இடும் - தருகின்ற, முற்றா - முற்றாத இளமை (சால்) நிரம்பி விளங்கும், இரண்டு (புண்டரீக தாமரையின் கஸ்தூரி யணிந்து குவிந்துள்ள மொட்டால் மொட்டுப் போன்ற(கொங்கைகளால்), (கார்முகம்) வில்லைப் போன்ற (துதல்) நெற்றியில் (எழுதிய) திட்டப்பட்டுள்ள சிறிய பொட்டினால், (சாயகம்) அம்பைப் போலக் கூரியதாய், (விரகு உடை) தந்திரம் நிறைந்த கனன் வலையிற் (பட்டால்) படுதலால் - (தாது) (என் உடலில் உள்ள இரதம், இரத்தம், எலும்பு, சுக்கிலம், தசை தோல், மூளை ஆகிய சத்த தாதுக்களும் (நலங்கலாமோ) நொந்து வருந்தலாமோ (வருந்தலாகாது என்றபடி) பாதமலர் மீது வீரக் கழலைக் கட்டா (கட்டுதற்கு அவசிய மில்லாத (பாலக குழந்தையே! (கழல் கட்டாமலே எவற்றையும் வெல்லவல்லவனே - என்றபடி), வேதங்கள் அடிதொழுதும் (உன்னை) எட்ட முடியாத (தேசிக குரு மூர்த்தியே (பருகு என) உண்பாயாக என்று (வனமுலை) அழகிய கொங்கையை (கிட்டா கிட்டி) உன்னை அணுகித் (தாரகை) கார்த்திகை மாதர் அறுவரும் தந்து நாள்தோறும்

  • சுருதியூடு கேளாது". "சுருதி வெகுமுக புராண கோடிகள். தொடர உணர அரிதாய துாரிய பொருளை"

- திருப்புகழ் 1052, 1159