திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 987 வழக்குச் சொற்பயில் (ஒடுக்கத்துச் செறிவாய்) Thiruppugazh 987 vazhakkuchchoRpayil (odukkaththuch cheRivAi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தத் தத்தன தாத்த தத்தன தனத்தத் தத்தன தாத்த தத்தன தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான ......... பாடல் ......... வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள் வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள் சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள் கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள் கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம் அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய் அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியி லாத்த முற்றவன் அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன் உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில் விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல் உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ் மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர் ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வழக்குச் சொல் பயில்வால் சளப்படு மருத்துப் பச்சிலை தீற்றும் மட்டைகள் ... வழக்காடும் சொற்களில் பயின்றுள்ளதால் வஞ்சனைக்கு இடமான மருந்துகளையும் பச்சிலைகளையும் ஊட்டுகின்ற பயலினிகள். வளைத்துச் சித்தச சாத்திரக் களவு அதனாலே மனத்துக் கற்களை நீற்று உருக்கிகள் ... (ஆண்களைத் தம் பால்) வளைத்து இழுத்து, மன்மதனுடைய காம நூலில் கூறியுள்ள வஞ்சக வழிகளால் (தம்மிடம் வந்தவர்களின்) கல் போன்ற மனத்தையும் பொடிபடுத்தி உருக்க வல்லவர்கள். சுகித்துத் தெட்டிகள் ஊர்த் துதிப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ... சுகத்தை அடைந்து வஞ்சிப்பவர்கள். ஊரில் தம்மைத் துதிப்பவர்களை மயக்கி சூது நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவர்கள். மதியாதே கழுத்தைக் கட்டி அணாப்பி நட்பொடு சிரித்துப் பல் கறை காட்டி ... மதிப்பு வைக்காமலே கழுத்தைக் கட்டி, ஏமாற்றி, நட்பு காட்டிச் சிரித்து, பல்லில் (வெற்றிலை உண்ட) கறையைக் காட்டி, கைப்பொருள் கழற்றிக் கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி கணக்கிட்டுப் பொழுது ஏற்றி வைத்து ... கையில் உண்டான பொருளைப் பிடுங்கி, அது ரத்தினக் கல்லானால் (அதன்) நிறம் முதலியனவற்றையும், (தங்கம் கிடைத்தால்) அதன் மாற்றறிய உரைத்துப் பார்க்க, குற்றம் இவைகளை அறிய உரைகல்லால் உரசி, கணக்குப் பார்த்து, காலம் கடத்தி, ஒரு பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள் ... ஒரு சண்டை இட்டு, குழப்பம் உண்டு பண்ணும் விபசாரிகள். கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ ... இந்த வேசிகளுடன் ஒருங்கே இணைந்து புக்கிருக்கும் பாழான புத்தியை நான் விலக்க மாட்டேனோ? அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி ... நெருப்பு போன்ற கண்ணையும் பொய்யையும் சூதையும் கொண்ட, மடமை நிறைந்த அசுரர்களை நசுக்கிப் பொடியாகும்படி முறித்துத் தள்ளி, அக்கணம் அழித்திட்டுக் குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய் ... அந்தக் கணத்திலேயே அவர்களை அழித்து, குறப் பெண் வள்ளியின் அழகிய மார்பாகிய மலையைத் தழுவுவனே, அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன் ... தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு*1 சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும், அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன் ... கடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது) உழைக் கண் பொன் கொடி மாக் குலக் குயில் விருப்பு உற்று புணர் தோள் க்ருபைக் கடல் ... (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே பிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே, உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே ... உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின் மருகனே, உரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு ... உண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்) செட்டியாக*2 பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை ஆராய்ந்து மதித்து, செறி நால் கவிப்பணர் ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை பெருமாளே. ... நிறைந்த நால்வகைக் கவிகளிலும்*3 வல்ல கவிகளுடன் சேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்*4 என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
(*1) திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்டனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும். ஆழ்வாரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, அவரது கவியின் ஈற்றடியில் வசப்பட்டு, காஞ்சியிலிருந்து வெளியேறியும் மீண்டும் குடியேறியும் செய்ததனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. |
(*2) மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர். - திருவிளையாடல் புராணம். |
(*3) தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்: ஆசு - எதுகை மோனையுடன் கூடியது, மதுரம் - இனிமை வாய்ந்தது, சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது, வித்தாரம் - வர்ணனை மிக்கது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1425 pg 2.1426 pg 2.1427 pg 2.1428 pg 2.1429 pg 2.1430 WIKI_urai Song number: 991 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 987 - vazhakkuch choRpayil (odukkaththuch cheRivAi) vazhakkuc choRpayil vARcha Lappadu maruththup pacchilai theetRu mattaikaL vaLaiththuc chiththasa sAththi rakkaLa ...... vathanAlE manaththuk kaRkaLai neetRu rukkikaL sukiththuth thettika LUrththu thipparai maruttik kuththira vArththai seppikaL ...... mathiyAthE kazhuththaik kattiya NAppi natpodu siriththup paRkaRai kAtti kaipporuL kazhatRik kaRpukar mAtRu raippathu ...... karisANi kaNakkit tuppozhu thEtRi vaiththoru piNakkit tucchilu kAkku pattikaL kalaikkut pukkidu pAzhththa puththiyai ...... yozhiyEnO azhaRkat tappaRai mOtta rakkarai nerukkip pottezha nUkki yakkaNam azhiththit tukkuRa vAtti potRana ...... kirithOyvAy akappat tuththamizh thErththa viththakar samaththuk kattiyi lAththa mutRavan alaikkut katchevi mERpa dukkaiyi ...... luRaimAyan uzhaikkat poRkodi mAkku lakkuyil virupput RuppuNar thOtkru paikkadal uRikkut kaiththala neettu macchuthan ...... marukOnE uraikkac chettiya nAyppan muththamizh mathiththit tuccheRi nARka vippaNar odukkath thuccheRi vAyththa laththuRai ...... perumALE. ......... Meaning ......... vazhakkuc chol payilvAl saLappadu maruththup pacchilai theetRum mattaikaL: Having practised speaking belligerent words, these useless whores feed (their suitors) with treacherous herbs and medicines; vaLaiththuc chiththasa sAththirak kaLavu athanAlE manaththuk kaRkaLai neetRu urukkikaL: they are capable of enticing men towards them, adopting deceitful techniques defined in the erotic text of Manmatha (God of Love); then they cunningly powder their suitors' stone-like hearts and melt them; sukiththuth thettikaL Urth thuthipparai maruttik kuththira vArththai seppikaL: they betray (their suitors) even after deriving pleasure from them; they seduce their admirer in the town and utter words filled with venom; mathiyAthE kazhuththaik katti aNAppi natpodu siriththup pal kaRai kAtti: with utter disdain, they hug their suitors' necks, cheating them, faking a grin of friendliness and showing their teeth stained by chewing of betel leaves; kaipporuL kazhatRik kal pukar mAtRu uraippu athu karisu ANi kaNakkittup pozhuthu EtRi vaiththu: they snatch away the belongings (of their suitors) and if they turn out to be precious gems, they begin to examine their quality and colour, and if it is gold, they hasten to graze it on the touchstone to determine if the gold is pure or defective; they while away their time in all such calculations; oru piNakku ittuc chiluku Akku pattikaL: these whores are cantankerous and trouble making; kalaikkuL pukkidu pAzhththa puththiyai ozhiyEnO: will I not be able to divert my stupid mind away from the thought of entering their homes and rivetting myself to them? azhal kaN thappaRai mOttu arakkarai nerukki pottu ezha nUkki: Those foolish demons with fiery eyes were full of falsehood and treachery; You smashed them into pieces akkaNam azhiththittuk kuRavAtti pon thana kiri thOyvAy: and destroyed them instantaneously; You embraced the beautiful mountain-like bosom of VaLLi, the damsel of the KuRavAs, Oh Lord! akappattuth thamizh thErththa viththakar samaththuk kattiyil Aththam utRavan: He is enchanted with Tamil poets and is captivated*1 by the clever meaning of the last line of their verses; alaikkuL kaN sevi mEl padukkaiyil uRai mAyan: He is the mystic one slumbering on a serpent (AdhisEshan) in the wavy sea; when that Lord VishNu came as a sage, uzhaik kaN pon kodi mAk kulak kuyil viruppu utRu puNar thOL krupaik kadal: He sired a beautiful creeper-like girl (VaLLi) by union with a deer (Lakshmi in disguise); You fell in love with that cuckoo-like VaLLi and hugged her with Your shoulders, Oh Ocean of Compassion! uRikkuL kaiththala neettum acchuthan marukOnE: You are the nephew of Lord KrishNa who immersed His hand into the pot hanging from the ceiling (to steal butter)! uraikkac chettiyanAy pan muththamizh mathiththittuc cheRi nAl kavippaNar: To announce to the world the real meaning of a certain poem, You came (as Rudra Sanman) in the lineage of ChettiyArs*2, evaluated, with reverence, and researched many verses composed by the Sangam poets; odukkaththuc cheRivAythf thalaththu uRai perumALE.: along with several stalwarts who are well-versed in poetry of four different kinds*3, You are seated with relish in this place called odukkaththu seRivAy*4, Oh Great One! |
(*1) Once, the deity in KAnchipuram, Lord VaradarAjar - an aspect of VishNu - decided to leave town and go after the banished devotee, KaNikaNdan, a disciple of the celebrated Tamil poet-cum-devotee, Thirumazhisai AzhvAr; his verse, particularly the cleverly composed last line, was too captivating to the Lord to disobey, and He was named "the obedient Lord". |
(*2) Once, in Madhurai, 49 poet-stalwarts of Tamil Sangam wrote interpretation for the work of Lord SivA. To resolve the dispute among them about whose work was the best, Murugan came to Madhurai as a mute and dumb boy Rudrasanman, born in the lineage of Chettis, and listened to all the interpretations. Only when He heard the works of Nakkeeran, Kapilan and BaraNan, He showed so much awe with tears in His eyes that the poets realised which were the best ones and resolved their dispute - ThiruviLaiyAdal PurANam. |
(*3) The four varieties of Tamil poetry are: Asu (alliteration) Mathuram (sweetness) Chiththiram (artful presentation) and ViththAram (description). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |