பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடுக்கத்துச்செறிவாய்) திருப்புகழ் உரை 869 கணக்குப் பார்த்துக் காலம் கடத்தி வைத்துப் (பொழுது போக்கி)-(அதன் காரணமாக) ஒரு பிணக்கு இட்டு (சண்டையிட்டுச்), சிலகு ஆக்கு குழப்பம் உண்டு பண்ணும் (பட்டிகள்) வியபிசாரிகளின் (கலைக்குள்) புணர்ச்சிக்கு உரிய கரணங்களுள் நுழைகின்ற பாழான புத்தியை விலக்கமாட்டேனோ! (அழல் கண்) நெருப்புப் போன்ற கண்ணையும். (தப்பறை) பொய்யையும் சூதையும் கொண்ட (மோட்டு) மடமை கொண்ட அசுரர்களை (நெருக்கி) நசுக்கி, அவர்கள் (பொட்டெழ) பொடியாம்படி, (நூக்கி) முறித்துத் தள்ளி, அந்த கூடினமே அவர்களை அழித்துப், (பின்னர்) குறப்பெண் வள்ளியின் அழகிய கொங்கை மலையில் (தோய்ந்தவனே) அணைந்தவனே! (தமிழ் தேர்ந்த வித்தகர் அகப்பட்டு (அல்லது - தேர்ந்த வித்தகர் தமிழ் அகப்பட்டு) - தமிழில் வல்ல அறிஞர்களிடத்தே (அகப்பட்டு) வசப்பட்டு - அல்லது சிறந்த அறிவாளிகளின் தமிழிலே வசப்பட்டு, (அப் புலவர்க்ளின்) (சமத்துக் கட்டியில்) சாமர்த்தியமான இறுகிய பொருளில் (ஆத்தம்) இஷடம் கொண்டவன், கடலிலே (ஆதிசேடன் என்னும்) பாம்பின்மேற் படுக்கை கொண்டிருக்கும் (மாயோன்) திருமாலாம் (சி வமுனிவர் க்கு) (868 ஆம் பக்கத் தொடர்ச்சி) வூரை விட்டுப் போ' என அவரை வெருட்ட கணிகண்ணர் ஆழ்வாரிடம் இந் நிகழ்ச்சியைக் கூற - ஆழ்வார் நாமும் உம்முடன் வருவோம் பெருமாளையும் அழைத்துச் செல்வோம்' என்று கூறி. கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி மணிவண்ணா நீகிடக்க வேண்டா - துணிவொன்றிச் செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்' - என்று பாடினர். பெருமாளும் அவர் சொல்லுக் கிணங்க, மூவரும் அவ்வூரை விட்டு விலகப், பல திருக் கோயில்களில் இருந்த பெருமான்களும் ஊரை விட்டு விலகினார்கள்: காஞ்சி இருளடைந்தது. அரசன் நடு நடுங்கிக் கணிகண்ணரிடம் ஓடி வணங்கித் தன் பிழையைப் பொறுத்தருள வேண்டுமெனப் பணிய, அவரும் ஆழ்வாரிடம் இதை விண்ணப்பிக்க ஆழ்வார் (தொடர்ச்சி 870 ஆம் பக்கம் பார்க்க)