திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 988 ஆகத்தே தப்பாமல் (காமத்தூர்) Thiruppugazh 988 AgaththEthappAmal (kAmaththUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானத் தானத் தானத் தானத் தானத் தானத் ...... தனதானா ......... பாடல் ......... ஆகத் தேதப் பாமற் சேரிக் கார்கைத் தேறற் ...... கணையாலே ஆலப் பாலைப் போலக் கோலத் தாயக் காயப் ...... பிறையாலே போகத் தேசற் றேதற் பாயற் பூவிற் றீயிற் ...... கருகாதே போதக் காதற் போகத் தாளைப் பூரித் தாரப் ...... புணராயே தோகைக் கேயுற் றேறித் தோயச் சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா சோதிக் காலைப் போதக் கூவத் தூவற் சேவற் ...... கொடியோனே பாகொத் தேசொற் பாகத் தாளைப் பாரித் தார்நற் ...... குமரேசா பாரிற் காமத் தூரிற் சீலப் பாலத் தேவப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே ... உடலிலே வந்து குறி தப்பாமல் தைக்கின்ற (மன்மதனுடைய) கையில் உள்ள கரும்பு வில்லினின்று புறப்படும் மது நிறைந்த மலர்ப் பாணங்களாலும், ஆலப் பாலைப் போலக் கோலத்து ஆயக் காயப் பிறையாலே ... விஷம் கொண்டதாய், பால் போலும் வெண்மையானஅழகு வாய்ந்த வடிவம் உடைய நிலவாலும், போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே ... புணர்ச்சி இன்பத்தில் ஆசைப்பட்டு, தன் படுக்கையில் நெருப்புப்பட்ட பூவைப்போலக் கருகிப் போகாமல், போதக் காதல் போகத் தாளைப் பூரித்து ஆரப் புணராயே ... அவள் பிழைத்துப் போகும்படி, ஆசை வைத்துள்ள இன்பத்துக்கு இடமான (உனது) திருவடியில் (என் மகள்) மகிழ்ச்சி அடைய, நன்கு அவளைச் சேர்ந்து அருள மாட்டாயா? தோகைக்கே உற்று ஏறித் தோயம் சூர் கெட்டு ஓடப் பொரும் வேலா ... (இந்திரனாகிய) மயில் மேல் பொருந்தி ஏறி, கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து ஓடும்படி போர் செய்த வேலனே, சோதிக் காலைப் போதக் கூவு அத் தூவல் சேவல் கொடியோனே ... சூரியன் காலையில் உதிக்கும்படிக் கூவுகின்ற, அந்த இறகு உடைய கோழிக் கொடியை உடையவனே, பாகு ஒத்தே சொல் பாகத்தாளைப் பாரித்து ஆர் நல் குமரேசா ... சர்க்கரைப் பாகுக்கு ஒத்த இனிமையான சொற்களின் பக்குவம் உடைய வள்ளியை விரும்பி உள்ளம் மகிழும் நல்ல குமரேசனே, பாரில் காமத்தூரில் சீலப் பாலத் தேவப் பெருமாளே. ... இந்த உலகத்தில் காமத்தூர் என்னும் தலத்தில் தூய்மை கொண்ட குழந்தையாக அமர்ந்த தெய்வப் பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது. மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1429 pg 2.1430 pg 2.1431 pg 2.1432 WIKI_urai Song number: 992 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 988 - AgaththE thappAmal (kAmaththUr) Akath thEthap pAmaR sErik kArkaith thERaR ...... kaNaiyAlE Alap pAlaip pOlak kOlath thAyak kAyap ...... piRaiyAlE pOkath thEsat REthaR pAyaR pUvit ReeyiR ...... karukAthE pOthak kAthaR pOkath thALaip pUrith thArap ...... puNarAyE thOkaik kEyut RERith thOyac cUrket tOdap ...... porumvElA sOthik kAlaip pOthak kUvath thUvaR cEvaR ...... kodiyOnE pAkoth thEsoR pAkath thALaip pArith thArnaR ...... kumarEsA pAriR kAmath thUriR ceelap pAlath thEvap ...... perumALE. ......... Meaning ......... AkaththE thappAmal sEr ikku Arkai thERal kaNaiyAlE: Because of the flowery arrow, filled with honey, shot by Manmathan (God of Love) from his bow of sugarcane, which arrow never misses to strike the body, Alap pAlaip pOlak kOlaththu Ayak kAyap piRaiyAlE: and because of the poison-filled moon that has a beautiful milk-white complexion, pOkaththu EsatRE than pAyal pUvil theeyil karukAthE: this girl, pining for the pleasure of union with You, should not be left to roast in her own bed like a flower on fire; pOthak kAthal pOkath thALaip pUriththu Arap puNarAyE: letting her live, will You not kindly join her so that she could find solace at Your hallowed feet which is the only source of her happiness? thOkaikkE utRu ERith thOyam cUr kettu Odap porum vElA: Mounting the peacock (IndrA), You fought in the sea chasing away and destroying the demon SUran, Oh valorous One! sOthik kAlaip pOthak kUvu ath thUval sEval kodiyOnE: The rooster crows in the morning letting the sun rise; that rooster, with feathers, adorns Your staff, Oh Lord! pAku oththE sol pAkaththALaip pAriththu Ar nal kumarEsA: She has the maturity to select words of speech, sweet like the molten jaggery; You are delighted with that VaLLi and are in deep love with her, Oh great Lord, KumarA! pAril kAmaththUril seelap pAlath thEvap perumALE.: In this world, You chose KAmaththUr, as Your abode, and took Your seat there as an innocent child, Oh Lord; You are the Great One! |
This song is based on the Nayaka-Nayaki Bhavam, where the poet, assuming the heroine's mother's role, expresses the pang of separation from the hero, Murugan. The God of Love Manmathan, His flowery arrows and the moon are a few of the things that aggravate the agony of separation. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |