பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்வாய்) திருப்புகழ் உரை 873 (போகத்து) புணர்ச்சி இன்பத்தில் (ஏசற்றே) ஆசைப்பட்டே (அல்லது) புணர்ச்சி வேண்டி வருத்தமுற்று அதனால் (தன் பாயல்) (தன்) படுக்கையில். (தீயில்) பூவில் நெருப்புப்பட்ட பூப்போலக் கருகிப் போகாமல் (போத) பிழைத்துப் போம்படி (காதல்) ஆசை வைத்துள்ள (போகத் தாளை) இன்பத்துக்கு இடமாம் (உனது) தாளில் திருவடியில் - பூரித்து ஆர (என்மகள்) உள்ளத்து மகிழ்ச்சி நிறைந்து (ஆர) திருப்தி அடைய (அவளைக்) சேர்த்தருள மாட்ட்ாயோ (அல்லது போதக் காதல் போதம்) நல்ல ஞானத்துடன் கொண்ட காதலை __GNIMLILI (போகத்தாளை) - இன்ப அனுபவத்துக்கு உரிய இவளை (என் மகளை) பூரித்து உள்ளம் பூரித்து உள்ள மகிழ்ச்சியுடன் ஆர -நன்கு கூடியருளமாட்டாயோ - நன்கு கூடி யருளுக என்றபடி) தோகைக்கே உற்று ஏறி-(இந்திரனாகிய) மயில் மேற் பொருந்தி ஏறித் தேர்ய்ம்) கடல் நீரில் நின்ற சூரன் அழிந்து போம்படிப் போர் செய்த வேலனே! (சோதி) சூரியனைக் காலையில் (போத) வரும்படி கூவுகின்றதும் அத் (தூவல்) அந்த இறகினை உடையதுமான கோழிக் கொடி கொண்டவனே! (பாகு சர்க்கரைக்கு ஒப்பான இனிமை கொண்ட சொற்களின் (பாகத்தாளை) பக்குவம் உடைய வள்ளியைப் (பாரித்து ஆர் நற் குமரேசா) விரும்பி உள்ளம் பூரித்த நல்ல குமரேசனே! இப் பூமியில் காமத்துார் என்னும் தலத்தில் (சீலம்)து.ாய்மை கொண்ட குழந்தைப் பெருமாளே! தெய்வப் பெருமாளே! (ஆரப் புணராயே) 5. முள்வாய் 993. (உயிர் போகும் சமயத்தில்) (வீட்டிலுள்ள) மாதர்கள், பெற்ற மக்கள், (நான்) இருக்கும் (நாடு) ஊரார், (இனம்) சுற்றத்தினர் (இவர்கள் யாவரும்) கும்புகூடியும், தனித் தனியாகவும், அங்கும் இங்கும் சென்று சென்று. (என்னைப் பற்றிப்) பேச்சுக்கள் பேச.