திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 976 வேதத்திற் கேள்வி (திருக்குற்றாலம்) Thiruppugazh 976 vEthaththiRkELvi (thirukkutRAlam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன தானத்தத் தானன தானன ...... தனதான ......... பாடல் ......... வேதத்திற் கேள்வி யிலாதது போதத்திற் காண வொணாதது வீசத்திற் றூர மிலாதது ...... கதியாளர் வீதித்துத் தேடரி தானது ஆதித்தற் காய வொணாதது வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம் வாதத்துக் கேயவி யாதது காதத்திற் பூவிய லானது வாசத்திற் பேரொளி யானது ...... மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரம தாகிய வாழ்வைச்சற் காரம தாஇனி ...... யருள்வாயே காதத்திற் காயம தாகும தீதித்தித் தீதிது தீதென காதற்பட் டோதியு மேவிடு ...... கதிகாணார் காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட் டேமதி தீதக லாமற்கெட் டேதடு மாறிட ...... அடுவோனே கோதைப்பித் தாயொரு வேடுவ ரூபைப்பெற் றேவன வேடுவர் கூடத்துக் கேகுடி யாய்வரு ...... முருகோனே கோதிற்பத் தாரொடு மாதவ சீலச்சித் தாதியர் சூழ்தரு கோலக்குற் றாலமு லாவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வேதத்திற் கேள்வி யிலாதது ... வேதங்களினால் ஆராயப் படாதது அது. போதத்திற் காண வொணாதது ... அறிவு கொண்டு காண முடியாதது அது. வீசத்தில் தூர மிலாதது ... ஒரு மாகாணி அளவு கூட (பதினாறில் ஒரு பங்கு அங்குலம்) நம்மிடத்தினின்று தூரம் இல்லாதது அது. கதியாளர் வீதித்துத் தேட அரிதானது ... நற்கதியை வேண்டுவோர் பகுத்தறிவோடு தேட அரிதானது அது. ஆதித்தற் காய வொணாதது ... சூரியனால் சுட்டுப் பொசுக்க இயலாதது அது. வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம் ... காட்டுத்தீயின் கடுமை கொண்ட நெருப்பிலும் வேகாதது அது. வாதத்துக்கே அவியாதது ... கடுங்காற்றினாலும் தன் ஒளி குன்றாதது அது. காதத்திற் பூ இயலானது வாசத்தில் ... காத தூரம் (10 மைல் அளவு) சென்றாலும் நறுமணம் வீசும் மலரின் தன்மையானது அது. பேரொளி யானது ... பெரிய ஜோதியாக விளங்குவது அது. மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரமது ... ஆணவ மதம் ஊறுகின்ற மாயம் பொருந்திய உடலில் அகந்தை என்ற மதநீர் உள்ள தீயவர்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் உள்ளது அது. ஆகிய வாழ்வை ... (இத்தனைச் சிறப்புப் பெற்ற) அத்தகைய பெருவாழ்வை (முக்தி நிலையை) சற் காரமதாஇனி யருள்வாயே ... என்னை ஒரு பொருட்டாக மதித்து இனி அருள்வாயாக. காதத்திற் காயமதாகும் ... கொலைத்தொழிலில் மிகவும் ஈடுபட்ட மதீ தித்தித் தீதிது தீதென ... மதியைத் திருத்தி, இது தீய செயல், இது தீய செயல் என்று காதற்பட் டோதியு மேவிடு கதிகாணார் ... அன்பு மேலிட்டுப் பலமுறை நீ ஓதியும் நற்கதியை அடையும் வழியைக் காணாதவர்களை (அசுரர்களை) காணப்பட் டேகொடு நோய்கொடு வாதைப்பட்டே ... கண்ணெதிரிலேயே தெரியும் பொல்லா நோயால் அவர்கள் வேதனைப்பட்டும் கூட மதி தீதகலாமற்கெட்டேதடுமாறிட அடுவோனே ... கெட்ட புத்தி நீங்காமல் கேடுற்று அந்த அசுரர்கள் தடுமாற, பின்னர் அவர்களை அழிப்போனே, கோதைப்பித்தாய் ஒரு வேடுவ ரூபைப்பெற்றே ... வள்ளி என்ற பெண்மேல் காதல் பித்து மேலிட ஒரு வேடனின் உருவத்தைத் தாங்கி, வன வேடுவர் கூடத்துக்கே குடி யாய்வரு முருகோனே ... காட்டு வேடுவர்களின் வீட்டுக்கே குடியாகவந்த முருகனே, கோதிற்பத்தாரொடு மாதவ சீலச்சித்தாதியர் சூழ்தரு ... குற்றமற்ற பக்தர்களுடன், சிறந்த தவ ஒழுக்கம் வாய்ந்த சித்தர் முதலானோர் வந்து வலம்வரும் கோலக்குற் றாலம் உலாவிய பெருமாளே. ... அழகிய திருக்குற்றாலத் தலத்தில்* உலாவும் பெருமாளே. |
* திருக்குற்றாலம் தென்காசிக்கு மேற்கே 4 மைலில் உள்ளது. நடராஜ மூர்த்தி நடனம் ஆடிய ஐந்து சபைகளில் சித்ர சபை இங்குள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1391 pg 2.1392 pg 2.1393 pg 2.1394 WIKI_urai Song number: 980 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 976 - vEthaththiR kELvi (thirukkutRAlam) vEthaththiR kELvi yilAthathu pOthaththiR kANa voNAthathu veesaththiR RUra milAthathu ...... kathiyALar veethiththuth thEdari thAnathu AthiththaR kAya voNAthathu vEkaththuth theeyil vekAthathu ...... sudarkAnam vAthaththuk kEyavi yAthathu kAthaththiR pUviya lAnathu vAsaththiR pEroLi yAnathu ...... mathamURu mAyaththiR kAya mathAsala theetharkkuth thUrama thAkiya vAzhvaiccaR kArama thAini ...... yaruLvAyE kAthaththiR kAyama thAkuma theethiththith theethithu theethena kAthaRpat tOthiyu mEvidu ...... kathikANAr kANappat tEkodu nOykodu vAthaippat tEmathi theethaka lAmaRket tEthadu mARida ...... aduvOnE kOthaippith thAyoru vEduva rUpaippeR REvana vEduvar kUdaththuk kEkudi yAyvaru ...... murukOnE kOthiRpath thArodu mAdhava ceelacchith thAthiyar chUzhtharu kOlakkuR RAlamu lAviya ...... perumALE. ......... Meaning ......... vEthaththiR kELvi yilAthathu: It is never understood by the Scriptures; pOthaththiR kANa voNAthathu: It cannot be discerned by intellect; veesaththil thUra milAthathu: Its distance from us is not even one-sixteenth of an inch (mAkANi); kathiyALar veethiththuth thEda arithAnathu: Those who seek salvation can never find it through rationalisation; AthiththaR kAya voNAthathu: It cannot be burnt down by the heat of the sun; vEkaththuth theeyil vekAthathu sudarkAnam: It cannot be scorched even by the most devastating fire in the forest; vAthaththukkE aviyAthathu: Its lustre can never be diminished even by fierce wind; kAthaththiR pU iyalAnathu vAsaththil: It has fragrant flowery scent that reaches even a distance of ten miles (KAtham); pEroLi yAnathu: It shines as a great flame; mathamURu mAyaththiR kAya mathAsala theetharkkuth thUramathu: It is beyond the reach of haughty evil ones whose bodies are made up of delusion and arrogance; Akiya vAzhvai: (With all these attributes) It is nothing but a great blissful life in heaven. chaR kArama thA ini yaruLvAyE: Kindly treat me as someone to be cared for and bless me with that life! kAthaththiR kAyama thAku mathee thiththi: Correcting the minds of those (demons) who were bent upon killing others, theethithu theethena kAthaRpat tOthiyumE: You lovingly pointed out to them, again and again, that their act was evil; vidu kathikANAr kANappat tEkodu nOykodu vAthaippattE: yet they would not give up their act, resulting in visible signs of serious diseases from which they suffered; mathi theethakalAmaR kettE thadumARida aduvOnE: and their mind never got rid of the bad thinking, leading them to further deterioration. Thereupon, You killed all those demons! kOthaippith thAyoru vEduva rUpaippeRRE: Because You were madly in love with VaLLi (the belle among the hunters), You took the form of a hunter vana vEduvar kUdaththuk kEkudi yAyvaru murukOnE: and set about living in the dwelling place of those hunters in the forest, Oh MurugA! kOthiRpath thArodu mAdhava ceelacchith thAthiyar chUzhtharu: Around here are several unblemished devotees and virtuous saints, well-known for their penance, living kOlakkuR RAlamu lAviya perumALE.: in this lovely town, KutRAlam*, which is Your abode, Oh Great One! |
* KutRAlam is 4 miles west of ThenkAsi. Here is the famous Chitra Sabhai, one of the five celebrated stages on which Lord NadarAjA danced. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |