திருப்புகழ் 977 முத்தோலை தனை  (திருக்குற்றாலம்)
Thiruppugazh 977 muththOlaithanai  (thirukkutRAlam)
Thiruppugazh - 977 muththOlaithanai - thirukkutRAlamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தான தனத்த தத்தன
     தத்தான தனத்த தத்தன
          தத்தான தனத்த தத்தன ...... தனதான

......... பாடல் .........

முத்தோலை தனைக்கி ழித்தயி
     லைப்போரி கலிச்சி வத்துமு
          கத்தாம ரையிற்செ ருக்கிடும் ...... விழிமானார்

முற்றாதி ளகிப்ப ணைத்தணி
     கச்சார மறுத்த நித்தில
          முத்தார மழுத்து கிர்க்குறி ...... யதனாலே

வித்தார கவித்தி றத்தினர்
     பட்டோலை நிகர்த்தி ணைத்தெழு
          வெற்பான தனத்தில் நித்தலு ...... முழல்வேனோ

மெய்த்தேவர் துதித்தி டத்தரு
     பொற்பார்க மலப்ப தத்தினை
          மெய்ப்பாக வழுத்தி டக்ருபை ...... புரிவாயே

பத்தான முடித்த லைக்குவ
     டிற்றாட வரக்க ருக்கிறை
          பட்டாவி விடச்செ யித்தவன் ...... மருகோனே

பற்பாசன் மிகைச்சி ரத்தைய
     றுத்தாத வனைச்சி னத்துறு
          பற்போக வுடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே

கொத்தார்க தலிப்ப ழக்குலை
     வித்தார வருக்கை யிற்சுளை
          கொத்தோடு திரக்க தித்தெழு ...... கயலாரங்

கொட்டாசு ழியிற்கொ ழித்தெறி
     சிற்றாறு தனிற்க ளித்திடு
          குற்றால ரிடத்தி லுற்றருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்து ஓலை தனைக் கிழித்து அயிலைப் போர் இகலிச்
சிவத்து முகத் தாமரையில் செருக்கிடும் விழி மானார்
...
முத்தால் ஆகிய கம்மலைத் தாக்கி, வேலாயுதத்தைப் போரில்
மாறுபட்டுப் பகைத்து, செந்நிறம் கொண்டு, முகமாகிய தாமரை
மலரில் கர்வித்து நிற்கும் கண்களை உடைய மாதர்களின்

முற்றாது இளகிப் பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த
நித்தில முத்து ஆரம் அழுத்து உகிர்க் குறி அதனாலே
...
முற்றாமல் நெகிழ்ந்து பெருத்துள்ளதாய், அழகிய கச்சு மேலுள்ள
மாலையை அற்றுப் போகும்படி செய்த, நல்ல முத்து மாலை
அழுத்துவதால் உண்டாகும் நகக் குறியைக் கொண்டதும்,

வித்தார கவித் திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து
எழு வெற்பான தனத்தில் நித்தலும் உழல்வேனோ
...
வித்தார* வகையைச் சேர்ந்த கவிகளைப் பாட வல்ல புலவர்களின் ஓலை
நூல்களுக்கு ஒப்பானதாய் இணைந்துள்ளதாய் எழுந்துள்ள மலை
போன்ற மார்பகத்தில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ?

மெய்த் தேவர் துதித்திடத் தரு பொற்பு ஆர் கமலப் பதத்தினை
மெய்ப்பாக வழுத்திட க்ருபை புரிவாயே
... உண்மைத் தேவர்கள்
போற்ற அவர்களுக்கு உதவும் அழகு நிறந்த தாமரைத் திருவடிகளை
நானும் மெய்யான பக்தியுடன் வாழ்த்த அருள் புரிவாயாக.

பத்தான முடித் தலைக் குவடு இற்று ஆட அரக்கருக்கு இறை
பட்டு ஆவி விடச் செயித்தவன் மருகோனே
... பத்துத்
தலைகளான மலைகள் அறுபட்டு அசைந்து விழ, அசுரர்களுக்குத்
தலைவனாகிய ராவணன் (போரில்) அழிந்து உயிர் விடும்படி வெற்றி
கொண்டவனாகிய திருமாலின் மருகனே,

பற்பாசன் மிகைச் சிரத்தை அறுத்து ஆதவனைச் சினத்து
உறு பல் போக உடைத்த தற்பரன் மகிழ்வோனே
... பத்ம
பீடத்தில் இருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவது தலையை
அறுத்துத் தள்ளி, சூரியனைக் கோபித்து பற்கள் உதிரும்படி
(தக்ஷயாகத்தில்) உடைத்தெறிந்த பரம்பொருளாகிய சிவ பெருமான்
மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே,

கொத்து ஆர் கதலிப் பழக் குலை வித்தார வருக்கையின்
சுளை கொத்தோடு உதிரக் கதித்து எழு கயல் ஆரம் கொட்டா
சுழியில் கொழித்து எறி
... கொத்தாயுள்ள வாழைப் பழக் குலைகளும்
விரிந்துள்ள பலாப்பழங்களின் குலைகளும் கொத்தாஉறு பல் போக உடைத்தக அப்படியே
உதிரும்படி குதித்துத் தாவுகின்ற கயல் மீன்கள் முத்துக்களைக் கொட்டி
நீர்ச் சுழிகளில் தள்ளி ஒதுக்கி,

சிற்றாறு தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள்
பெருமாளே.
... சிறிய ஆற்றில் மகிழும் குற்றாலத்துச்** சிவபெருமான்
அருகே வீற்றிருந்து அருளுகின்ற பெருமாளே.


* நால்வகைக் கவிகள் - ஆசு, மதுரம், வித்தாரம், சித்திரம்.


** குற்றாலம் தென்காசிக்கு 5 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1395  pg 2.1396  pg 2.1397  pg 2.1398 
 WIKI_urai Song number: 981 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 977 - muththOlai thanai (thirukkutRAlam)

muththOlai thanaikki zhiththayi
     laippOri kalicchi vaththumu
          kaththAma raiyiRche rukkidum ...... vizhimAnAr

mutRAthi Lakippa NaiththaNi
     kacchAra maRuththa niththila
          muththAra mazhuththu kirkkuRi ...... yathanAlE

viththAra kaviththi Raththinar
     pattOlai nikarththi Naiththezhu
          veRpAna thanaththil niththalu ...... muzhalvEnO

meyththEvar thuthiththi daththaru
     poRpArka malappa thaththinai
          meyppAka vazhuththi dakrupai ...... purivAyE

paththAna mudiththa laikkuva
     ditRAda varakka rukkiRai
          pattAvi vidacche yiththavan ...... marukOnE

paRpAsan mikaicchi raththaiya
     RuththAtha vanaicchi naththuRu
          paRpOka vudaiththa thaRparan ...... makizhvOnE

koththArka thalippa zhakkulai
     viththAra varukkai yiRchuLai
          koththOdu thirakka thiththezhu ...... kayalArang

kottAsu zhiyiRko zhiththeRi
     chitRARu thaniRka Liththidu
          kutRAla ridaththi lutRaruL ...... perumALE.

......... Meaning .........

muththu Olai thanaik kizhiththu ayilaip pOr ikalic chivaththu mukath thAmaraiyil serukkidum vizhi mAnAr: Attacking the ear-studs made of pearl and conquering the spear in the war, the reddish eyes of these women appear prominently and with arrogance on their lotus-like face;

mutRAthu iLakip paNaiththu aNi kacchu Aram aRuththa niththila muththu Aram azhuththu ukirk kuRi athanAlE: (their breasts) appear tender without being hardened and are huge; with their swelling, the chain heaving on their beautiful blouse snaps and breaks; the string of good pearls press on the breasts, making their own impressions, along with the nail-marks;

viththAra kavith thiRaththinar pattu Olai nikarththu iNaiththu ezhu veRpAna thanaththil niththalum uzhalvEnO: their breasts rise like a mountain usually described in the texts written on palm leaves by poets capable of singing poems of viththAram* type; why are my thoughts roaming everyday around their bosom?

meyth thEvar thuthiththidath tharu poRpu Ar kamalap pathaththinai meyppAka vazhuththida krupai purivAyE: Kindly bless me to truly worship Your hallowed and lotus-like feet, lauded by the sincere celestials who are uplifted by those feet!

paththAna mudith thalaik kuvadu yitRu Ada arakkarukku iRai pattu Avi vidac cheyiththavan marukOnE: With his ten mountain-like heads being shaken and severed, the leader of the demons, RAvaNan, was destroyed and his life was shed in the victorious war fought by RAmA (Lord VishNu); and You are His nephew, Oh Lord!

paRpAsan mikaic chiraththai aRuththu Athavanaic chinaththu uRu pal pOka udaiththa thaRparan makizhvOnE: He severed the extra (fifth) head of Brahma, seated on the lotus; He became enraged with the Sun whose teeth were knocked down (in the Sacrifice of Dhakshan); and He is the Supreme Principle, Lord SivA who is elated by You, Oh Lord!

koththu Ar kathalip pazhak kulai viththAra varukkaiyin suLai koththOdu uthirak kathiththu ezhu kayal Aram kottA suzhiyil kozhiththu eRi: Bunches of plantains and widely spread bunches of ripe jack fruits fall down as the kayal fish jump about, while swimming, knocking down the fruits as well as pearls into whirlpools of waterfront

chitRARu thanil kaLiththidu kutRAlar idaththil utRu aruL perumALE.: in the small river in KutRalam**, where Lord SivA is seated with relish; and You are seated near that Lord, showering Your gracious blessings, Oh Great One!


* Four types of Tamil poems .. Asu, Mathuram, ViththAram and Chiththiram.


** KutRalam is located 5 miles from ThenkAsi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 977 muththOlai thanai - thirukkutRAlam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]