திருப்புகழ் 978 வாட்படச் சேனை  (ஆய்க்குடி)
Thiruppugazh 978 vAtpadasEnai  (Ayikkudi)
Thiruppugazh - 978 vAtpadasEnai - AyikkudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
     தாத்தனத் தானதன ...... தனதான

......... பாடல் .........

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
     மாப்புடைத் தாளரசர் ...... பெருவாழ்வும்

மாத்திரைப் போதிலிடு காட்டினிற் போமெனஇல்
     வாழ்க்கைவிட் டேறுமடி ...... யவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
     கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக்

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
     கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ

தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
     சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
     தாழ்க்கவஜ் ராயுதனு ...... மிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
     மாய்க்குடிக் காவலவு ...... ததிமீதே

ஆர்க்குமத் தானவரை வேற் கரத் தால்வரையை
     ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வாட்படச் சேனைபட ஓட்டி ஒட்டாரை ... வாள் வீச்சுப் படுவதால்
சேனைகள் யாவையும் அழியும்படி பகைவர்களை விரட்டியடிக்கும்

இறுமாப்புடைத்து ஆள் அரசர் பெருவாழ்வும் ... செருக்குடன்
அரசாட்சி புரியும் மன்னர்களது பெருவாழ்வும்

மாத்திரைப் போதில் இடு காட்டினிற் போமென ... இறுதியில்
ஒரே கணப்பொழுதில் சுடுகாட்டில் அழிந்து போகக் கடவதுதான் என்ற
நிலையாமையை உணர்ந்து

இல் வாழ்க்கைவிட்டு ஏறும் அடியவர்போல ... இல்லறத்தை
விட்டுக் கரையேறும் உன் அடியார்கள் போல,

கோட்படப் பாதமலர் பார்த்து இளைப்பாற ... ஒரு
குறிக்கோளுடன் வாழவும், உன் திருவடி மலரினைப் பார்த்து யான்
இளைப்பாறவும்,

வினை கோத்தமெய்க் கோலமுடன் ... வினைவசமாகி உழலும் இந்த
உடம்பாகிய உருவத்தை

வெகுரூபக் கோப்புடைத் தாகி ... பலவித அலங்காரங்களைச் செய்து

அல மாப்பினிற் பாரிவரு கூத்து ... துன்பங்களில் சிக்குண்டு வரும்
இந்த வாழ்க்கை என்னும் விளையாட்டு

இனிப் பூரையிட அமையாதோ ... இனிமேல் முடிவு பெறவே
முடியாதோ?

தாட்படக் கோபவிஷ பாப்பினில் ... கால் பட்டாலே கோபத்துடன்
சீறி எழும் விஷப் பாம்பைப் போல

பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவு ... பாலன் மார்க்கண்டேயனிடம்
(யமன்) குறிவைத்துத் தொடரவும்,

நிள் கழல்தாவி ... தமது நீண்ட திருவடியை நீட்டி

சாற்றும் அக் கோரவுரு கூற்று உதைத்தார் ... பாலகனை விடேன்
என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த
பரமசிவனார்

மவுலி தாழ்க்க ... (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக)
தமது முடியைத் தாழ்த்தி வணங்க,

வஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட ... வஜ்ராயுதனாம்
இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க,

சாமபர மேட்டியைக் காவலிடும் ... பொன்னிறமான பிரம்மனை
சிறையிலிட்ட

ஆய்க்குடிக் காவல ... ஆய்க்குடி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
அரசனே,

உததிமீதே ஆர்க்கும் அத் தானவரை ... கடலிலே போர் புரிந்த
அந்தச் சூரன் முதலிய அசுரர்களையும்,

வேற் கரத் தால்வரையை ... திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால்
அந்த கிரெளஞ்சகிரியையும்

ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே. ... பேரொலி உண்டாகும்படி
அழிக்கவல்ல பெருமாளே.


* ஆய்க்குடி தென்காசியிலிருந்து வடகிழக்கே 5 மைலில் உள்ள தலம் - பால்
பாயச நிவேதனம் சிறப்பு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1397  pg 2.1398  pg 2.1399  pg 2.1400 
 WIKI_urai Song number: 982 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 978 - vAtpada sEnai (Aaykkudi)

vAtpada sEnaipada Ottiyot tAraiyiRu
     mAppudaith thALarasar ...... peruvAzhvum

mAththiraip pOdhilidu kAttinil pOmena il
     vAzhkkai vittERum adi ...... yavarpOla

kOtpadap pAdhamalar pArththiLaip pARavinai
     kOththameyk kOlamudan ...... vegurUpa

kOppudaith thAgiyala mAppiniR pArivaru
     kUththinip pUraiyida ...... amaiyAdhO

thAtpadak kObavisha pAppinil bAlanmisai
     sAyththodup pAravuniL ...... kazhalthAvi

sAtrumak gOravuru kUtrudhaith thArmavuli
     thAzhkka vajrAyudhanum ...... imaiyOrum

Atpada sAmapara mEttiyaik kAvalidum
     Aykkudik kAvala ...... udhadhimeedhE

Arkkumath thAnavarai vERkarath thAlvaraiyai
     Arppezhach chAdavala ...... perumALE.

......... Meaning .........

vAtpada sEnaipada Ottiyot tArai: They chase away the armies of the enemies with swords and weapons

yiRumAppudaith thALarasar: and brag proudly about their rule; even those mighty kings

peruvAzhvum mAththiraip pOdhilidu kAttinil pOmena: will have to eventually die in a matter of seconds.

ilvAzhkkai vittERum adi yavarpOla: Aware of this uncertainty, Your devotees get off the ocean of family life; and I want to be like them.

kOtpadap pAdhamalar pArththiLaip pARa: I want to have a purposeful goal in my life which is to rest in peace by simply looking at Your Lotus Feet!

vinai kOththameyk kOlamudan vegurUpa kOppudaith thAgi: My body is wrapped in all the karmas; yet I end up adorning it in several different ways

yala mAppiniR pArivaru: and getting trapped in miseries.

kUththinip pUraiyida amaiyAdhO: Can this game never end?

thAtpadak kObavisha pAppinil: Just like a venomous cobra springs up with anger when rattled by foot,

bAlanmisai sAyththodup pAravu: Yaman (Death-God) went ferociously after the boy, MArkkandEyan;

niL kazhalthAvi sAtrumak gOravuru kUtrudhaith thAr: and, at that time, Lord SivA emerged (from the Lingam) with His long leg and kicked the evil-looking Yaman.

mavuli thAzhkka: That mighty SivA bowed down before You (to listen to Your preaching of VEdAs).

vajrAyudhanum imaiyOrum Atpada: IndrA, who holds the weapon Vajra, and all DEvAs were subdued by You.

sAmapara mEttiyaik kAvalidum: Gold-complexioned BrahmA was imprisoned by You (due to His inability to interpret the VEdAs).

Aykkudik kAvala: You are the ruler and protector of this place, Aaykkudi*.

udhadhimeedhE Arkkumath thAnavarai: The asura armies were making boisterous noise on the seas;

vERkarath thAlvaraiyai Arppezhach chAdavala perumALE.: and You were able to destroy them and the mount, Krounchagiri, with a thunderous sound by throwing the Spear in Your hand, Oh Great One!


* Aaykkudi is 5 miles northeast of ThenkAsi; it is very famous for the special offering of milk porridge.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 978 vAtpada sEnai - Ayikkudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]