திருப்புகழ் 890 விகட சங்கட  (திருப்பழுவூர்)
Thiruppugazh 890 vigadasangkada  (thiruppazhuvUr)
Thiruppugazh - 890 vigadasangkada - thiruppazhuvUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்தன தாத்த தானன
     தனன தந்தன தாத்த தானன
          தனன தந்தன தாத்த தானன ...... தனதான

......... பாடல் .........

விகட சங்கட வார்த்தை பேசிகள்
     அவல மங்கைய ரூத்தை நாறிகள்
          விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம்

விதம்வி தங்களை நோக்கி யாசையி
     லுபரி தங்களை மூட்டி யேதம
          இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர்

சகல மஞ்சன மாட்டி யேமுலை
     படவ ளைந்திசை மூட்டி யேவரு
          சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே

சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
     மலர வுந்தியை வாட்டி யேயிடை
          தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ

திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
     தமையர் தம்பியர் மூத்த தாதையர்
          திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான

செனம டங்கலு மாற்றி யேயுடல்
     தகர அங்கவர் கூட்டை யேநரி
          திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி

அகடு துஞ்சிட மூட்டு பாரத
     முடிய அன்பர்க ளேத்த வேயரி
          யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே

அமர ரந்தணர் போற்ற வேகிரி
     கடல திர்ந்திட நோக்கு மாமயில்
          அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை
நாறிகள்
... பரிகாசமானதும் துன்பம் தரக் கூடியதுமான
வார்த்தைகளைப் பேசுபவர்கள். துன்பத்துக்கு காரணமான
விலைமாதர்கள். அழுக்கு நாற்றம் வீசுபவர்கள்.

விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார் தம் விதம்
விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம
இடு மருந்தோடு சோற்றையே இடு விலை மாதர்
... செல்வப்
பெருக்கு ஒடுங்கி நிலை மாறுவதற்கு வாய்ப்பு இதுதான் என்று,
வருவோர்களுடைய அப்போதைக்கு அப்போது உள்ள நிலைமையைக்
கவனித்து, ஆசை காரணமாக, காம இச்சைகளை எழுப்பி தாங்கள்
இடுகின்ற மருந்தோடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர்களாகிய
விலைமாதர்கள்.

சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை
மூட்டியே வரு சரச இங்கித நே(ர்)த்தியாகிய சுழலாலே சதி
முழங்கிட வாய் பண் ஆனது மலர
... எல்லா வித நீராடல்களையும்
ஆட்டி, மார்பகங்கள் படும்படி குனிந்து, இசை ஞானத்தைக் காட்டி,
அதனால் வருகின்ற காம சேட்டை முதலிய இனிமையான முறைப்பட்ட
சுழற்சியான ஆடலாலே, தாள ஒத்து முழங்க, வாயில் இசைப் பாடல்கள்
பிறக்க,

உந்தியை வாட்டியே இடை தளரவும் க(ண்)ணை ஆட்டும்
வேசியர் உறவாமோ
... வயிற்றை ஒழுங்காக அசைத்து, இடை
தளரவும், கண்களை ஆட்டி அசைக்கும் விலைமாதர்களின் உறவு
நல்லதாகுமோ?

திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த
தாதையர் திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான செனம்
அடங்கலும் மாற்றியே
... சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச்
செய்து*, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும்
மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும்,
துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த
பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும்,
நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து,

உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி திருகி உண்டிட
ஆர்த்த கூளிகள் அடர் பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத
முடிய
... அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள்
திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில்
நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய,

அன்பர்கள் ஏத்தவே அரி அருளும் மைந்தர்கள் வாழ்த்து
மாயவன் மருகோனே
... அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன்
ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும்
திருமாலின் மருகனே,

அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு
மா மயில் அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே.
...
தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச்
செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில்**
எழுந்தருளி இருக்கும் பெருமாளே.


* பாரதப் போரில் 13-ம் நாள் ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய பிள்ளை அபிமன்யுவைக்
கொன்று விட்டான். உடனே அர்ச்சுனன் நாளை சூரியன் அஸ்தமிப்பதற்குள்
ஜயத்ரதனைக் கொல்வேன் இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான்.
சூரியன் அஸ்தமிக்கு முன் கண்ணன் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்தார்.
சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜயத்ரதன் வெளியே வர, அர்ச்சுனன்
பாசுபதாஸ்திரத்தை விட்டு அவனைக் கொன்றான்.


** திருப்பழுவூர் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1169  pg 2.1170  pg 2.1171  pg 2.1172 
 WIKI_urai Song number: 894 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 890 - vigada sangkada (thiruppazhuvUr)

vikada sangada vArththai pEsikaL
     avala mangaiya rUththai nARikaL
          viriva dangida mAtRum vARena ...... varuvArtham

vithamvi thangaLai nOkki yAsaiyi
     lupari thangaLai mUtti yEthama
          iduma runthodu sOtRai yEyidu ...... vilaimAthar

sakala manjana mAtti yEmulai
     padava Lainthisai mUtti yEvaru
          sarasa ingitha nEththi yAkiya ...... suzhalAlE

sathimu zhangida vAyppa NAnathu
     malara vunthiyai vAtti yEyidai
          thaLara vungaNai yAttum vEsiya ...... ruRavAmO

thikiri koNdiru LAkki yEyiru
     thamaiyar thampiyar mUththa thAthaiyar
          thilaka maintharai yEtRa cUrarai ...... vekuvAna

senama dangalu mAtRi yEyudal
     thakara angavar kUttai yEnari
          thiruki yuNdida Arththa kULika ...... LadarpUmi

akadu thunjida mUttu pAratha
     mudiya anparka LEththa vEyari
          yaruLu maintharkaL vAzhththu mAyavan ...... marukOnE

amara ranthaNar pOtRa vEkiri
     kadala thirnthida nOkku mAmayil
          azhako dumpazhu vUrkkuL mEviya ...... perumALE.

......... Meaning .........

vikada sangada vArththai pEsikaL avala mangaiyar Uththai nARikaL: Their speech is derisive and tormenting; these whores are the root-cause of all troubles; they exude a disgusting odour;

virivu adangida mAtRum vARu ena varuvAr tham vitham vithangaLai nOkki Asaiyil uparithangaLai mUttiyE thama idu marunthOdu sOtRaiyE idu vilai mAthar: checking their diminishing resources, they look for an opportunity to reverse that trend by carefully observing the day-to-day financial situation of their suitors and arouse their passion; then, these whores mix potions of subjugating medicine with the cooked rice and offer it to their suitors;

sakala manjanam AttiyE mulai pada vaLainthu isai mUttiyE varu sarasa ingitha nE(r)ththiyAkiya suzhalAlE sathi muzhangida vAy paN Anathu malara: they give their suitors many varieties of bath making sure that their breasts come in contact with them while bending; dancing rhythmically and provocatively, they show off their musical talent, with songs emanating from their mouth;

unthiyai vAttiyE idai thaLaravum ka(N)Nai Attum vEsiyar uRavAmO: they shake their navel to a regular beat as their waist caves in; they roll their eyes, shifting focus at all times; how could a liaison with such whores be beneficial?

thikiri koNdu iruLAkkiyE iru thamaiyar thampiyar mUththa thAthaiyar thilaka maintharai EtRa cUrarai vekuvAna senam adangalum mAtRiyE: With His disc* He converted the day into night; He arranged for the destruction of two brothers (KarNan and DhuriyOdhanan) along with the other brothers, elders like Bheeshmar and DhroNar, valorous youths like LakshakumAran (son of DhuriyOdhanan), the mighty demons who ventured to fight and all other people belonging to the enemy's side;

udal thakara angu avar kUttaiyE nari thiruki uNdida Arththa kULikaL adar pUmi akadu thunjida mUttu pAratha mudiya: their bodies were shattered to pieces and were chewed and eaten by the jackals; the devils made a din of noise throughout the battlefield whose core ground was totally destroyed; the great war of BhArath started by Him came to an end;

anparkaL EththavE ari aruLum maintharkaL vAzhththu mAyavan marukOnE: all His devotees chanted His name in praise; Yaman (God of Death), VAyu (God of Wind) and Indra who sired the PANdavAs, respectively, Dharman, Bheeman and Arjunan, worshipped Him, namely, Lord VishNu; and You are the nephew of that Lord!

amarar anthaNar pOtRavE kiri kadal athirnthida nOkku mA mayil azhakOdum pazhuvUrkkuL mEviya perumALE.: As the celestials and priests extolled, You took Your seat, mounting gracefully the famous peacock that is capable of jolting the mountains and the sea, in ThiruppazhuvUr**, Oh Great One!


* On the 13th day of the great War of BhArath, Jayathrathan killed Abimanyu, the son of Arjunan. Immediately, Arjunan took a vow that before the sunset of the next day, he would kill Jayathrathan, failing which he would kill himself jumping into the fire. Well before the natural sunset, KrishNa covered up the sun by placing His disc over it. Thinking that the sun had set, Jayathrathan ventured out from his hiding place, and Arjunan killed him by wielding the arrow of Pasupatha.


** ThiruppazhuvUr is near the town, ThiruvaiyARu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 890 vigada sangkada - thiruppazhuvUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]