திருப்புகழ் 891 சதங்கை மணி  (பெரும்புலியூர்)
Thiruppugazh 891 sadhangkaimaNi  (perumpuliyUr)
Thiruppugazh - 891 sadhangkaimaNi - perumpuliyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தனன தானத் தனந்தனன தானத்
     தனந்தனன தானத் ...... தனதான

......... பாடல் .........

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
     சரங்களொளி வீசப் ...... புயமீதே

தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
     சரங்கண்மறி காதிற் ...... குழையாட

இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
     றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ

டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
     றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே

சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
     சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே

சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
     சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே

பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
     ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா

பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
     பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சதங்கை மணி வீரச் சிலம்பின் இசை பாட ... கிண்கிணி, ரத்தினம்
அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட,

சரங்கள் ஒளி வீசப் புயம் மீதே தனங்கள் குவடு ஆட ... மணி
வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள்
அசைந்தாட,

படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை
ஆட
... தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய
அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில்
குண்டலங்கள் ஆட,

இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று ... இனிமை
வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும்
சிரிப்புடன் பேசி,

இரம்பை அழகு ஆர் மைக் குழலாரோடு ... ரம்பை போன்ற
அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய
விலைமாதர்களுடன்

இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை ... நெருங்கிப்
பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என்
மீது,

நீ சற்று இரங்கி இரு தாளைத் தருவாயே ... நீ கொஞ்சம் இரக்கம்
கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக.

சிதம்பர குமார கடம்பு தொடை ஆடச் சிறந்த மயில் மேல்
உற்றிடுவோனே
... சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய
குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல்
வீற்றிருப்பவனே,

சிவந்த கழுகு ஆடப் பிணங்கள் மலை சாயச் சினந்து அசுரர்
வேரைக் களைவோனே
... சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள்
மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து,
அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே,

பெதும்பை எழு கோலச் செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட
அபிராமிக்கு ஒரு பாலா
... பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு
தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க
அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே.

பெரும் புனமது ஏகிக் குறம் பெணொடு கூடி பெரும் புலியுர்
வாழ் பொன் பெருமாளே.
... பெரிய வள்ளி மலைத் தினைப்
புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும்
புலியூரில்* வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.


* பெரும்புலியூர் திருவையாற்றுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1173  pg 2.1174 
 WIKI_urai Song number: 895 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 891 - sadhangkai maNi (perumpuliyUr)

sathangaimaNi veerac chilampinisai pAda
     sarangaLoLi veesap ...... puyameethE

thanangaLkuva dAdap padarnthapoRi mAlpoR
     sarangaNmaRi kAthiR ...... kuzhaiyAda

ithangoLmayi lEroth thukanthanakai pEsut
     Rirampaiyazha kArmaik ...... kuzhalArO

dizhainthamaLi yOdut Razhunthumenai neesat
     Rirangiyiru thALaith ...... tharuvAyE

sithamparaku mArak kadamputhodai yAdac
     chiRanthamayil mElut ...... RiduvOnE

sivanthakazhu kAdap piNangaLmalai sAyac
     chinanthasurar vEraik ...... kaLaivOnE

pethumpaiyezhu kOlac cheyankoLsiva kAmip
     prasaNdApi rAmik ...... korupAlA

perumpunama thEkik kuRampeNodu kUdip
     perumpuliyur vAzhpoR ...... perumALE.

......... Meaning .........

sathangai maNi veerac chilampin isai pAda: The triumphant anklets with beads of kiNkiNi and gems are making a musical sound;

sarangaL oLi veesap puyam meethE thanangaL kuvadu Ada: the chains of precious gems radiate light; on the shoulders the mountain-like bosom sway;

padarntha poRi mAl pon saram kaN maRi kAthil kuzhai Ada: the bosom stained with acne-spots is provocative; the ear-studs dangling on the ears, attacked by the beautiful arrow-like eyes, oscillate;

itham koL mayil Er oththu ukantha nakai pEsutRu: these whores looking beautiful like the pleasant peacock delight with speech full of laughter and mirth;

irampai azhaku Ar maik kuzhalArOdu izhainthu amaLiyOdu utRu azhunthum enai: mingling closely with them who are comparable in beauty to the Divine Girl Rambai and who are endowed with dark hair, I have attached myself to their bed and remain firmly entrenched there;

nee satRu irangi iru thALaith tharuvAyE: kindly take a little pity on me and grant me Your hallowed feet!

sithampara kumAra kadampu thodai Adac chiRantha mayil mEl utRiduvOnE: You are the son of Lord SivA of Chidhambaram! Mounting the peacock, You are seated elegantly on it with the swinging kadappa garland, Oh Lord!

sivantha kazhuku Adap piNangaL malai sAyac chinanthu asurar vEraik kaLaivOnE: As the red eagles danced with delight, You piled up, with rage, mounts of corpses (on the battlefield) and annihilated the demons, Oh Lord!

pethumpai ezhu kOlac cheyam koL sivakAmi prasaNda apirAmikku oru pAlA: You are the matchless son of AbhirAmi (the most beautiful one), also known as SivagAmi, who triumphantly exudes youthful beauty of a teenager!

perum punamathu Ekik kuRam peNodu kUdi perum puliyur vAzh pon perumALE.: You went up to the millet-field in the great mountain VaLLimalai and united with VaLLi, the damsel of the KuRavAs, and then came to take Your seat in PerumpuliyUr*, Oh Great One!


* PerumpuliyUr is 3 miles west of ThiruvaiyARu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 891 sadhangkai maNi - perumpuliyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]