திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 889 முகிலைக் காரை (திருநெய்த்தானம்) Thiruppugazh 889 mugilaikkArai (thiruneyththAnam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன தனனத் தானத் தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... முகிலைக் காரைச் சருவிய குழலது சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ முனையிற் காதிப் பொருகணை யினையிள வடுவைப் பானற் பரிமள நறையிதழ் முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத் துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ் பருகிக் காதற் றுயரற வளநிறை துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச் சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே குழறிக் கூளித் திரளெழ வயிரவர் குவியக் கூடிக் கொடுவர அலகைகள் குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா செகசெச் சேசெச் செகவென முரசொலி திகழச் சூழத் திருநட மிடுபவர் செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே சிகரப் பாரக் கிரியுறை குறமகள் கலசத் தாமத் தனகிரி தழுவிய திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முகிலைக் காரைச் சருவிய குழல் அது சரியத் தாமத் தொடை வகை நெகிழ் தர முளரிப் பூவைப் பனி மதி தனை நிகர் முகம் வேர்வ ... மேகத்தையும் இருளையும் கூடி நின்ற கூந்தலானது சரிந்து விழ, இடை அணியும் பூ மாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும் குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்ற, முனையில் காதிப் பொரு கணையினை இள வடுவைப் பானல் பரிமள நறை இதழ் முகையைப் போலச் சமர் செய்யும் இரு விழி குழை மோத ... நுனியால் வெட்டுதல் போல முட்டுகின்றதும், போருக்கு உற்றதுமான அம்பை, இள மா வடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் நிறைந்த தாமரை மொட்டின் இதழைப் போல் விளங்கி, போர் புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குண்டலங்களை மோத, துகிரைக் கோவைக் கனி தனை நிகர் இதழ் பருகிக் காதல் துயர் அற வள நிறை துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களி கூர ... பவளத்தையும் கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு காம வருத்தம் நீங்க, வளப்பம் நிறைந்த இரண்டு அழகிய தோள்களிலும் என் உள்ளம் உருகி நின்று மகிழ்ச்சி மிகுந்திட, சுடர் முத்து ஆரப் பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை துவளக் கூடி துயில்கினும் உனது அடி மறவேனே ... ஒளி வீசும் முத்து மாலையாகிய ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்தூரி நிறைந்ததும், அழகுள்ளதும் கனம் உள்ளதும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றும் மார்பகங்கள் துவட்சியுறும்படி (பொது மகளிருடன்) கூடித் தூங்கினாலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதியென் முரசொடு குழுமிச் சீறிச் சமர் செய்யும் அசுரர்கள் கள(ம்) மீதே ... (இவ்வாறான ஒலிகளுடன்) பறைகள் ஒன்று கூடிக் கோபத்தோடு முழங்க, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் குழறிக் கூளித் திரள் எழ வயிரவர் குவியக் கூடிக் கொடு வர அலகைகள் குணல் இட்டு ஆடிப் பசி கெட அயில் விடு குமரேசா ... கூச்சலிட்டு பெருங் கழுகுகளின் கூட்டம் கூட, அஷ்ட பைரவர்கள் ஒன்று கூடி வர, பேய்கள் கொக்கரித்து ஆரவாரத்துடன் ஆடி தம் பசியை ஆற்றிக் கொள்ள, வேலைச் செலுத்திய குமரேசனே, செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழச் சூழத் திரு நடம் இடுபவர் செறி கண் காளப் பணி அணி இறையவர் தரு சேயே ... செகசெச் சேசெச் செக என்று பறைகள் இவ்வாறு ஒலியை எழுப்பி முழங்கித் தம்மைச் சூழத் திரு நடனம் செய்பவர், (செவி உணர்ச்சியும்) கூடிய, கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகச் சூடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரப் பாரக் கிரி உறை குற மகள் கலசத் தாமத் தன கிரி தழுவிய திரு நெய்த் தானத்து உறைபவ சுரபதி பெருமாளே. ... சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் குடம் போன்றதும், பூ மாலை அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவனே, திருநெய்த்தானத்தில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் பெருமாளே. |
* திருநெய்த்தானம் திருவையாறுக்கு அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1167 pg 2.1168 pg 2.1169 pg 2.1170 WIKI_urai Song number: 893 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 889 - mugilaik kArai (thiruneyththAnam) mukilaik kAraic charuviya kuzhalathu sariyath thAmath thodaivakai nekizhthara muLarip pUvaip panimathi thanainikar ...... mukamvErva munaiyiR kAthip porukaNai yinaiyiLa vaduvaip pAnaR parimaLa naRaiyithazh mukaiyaip pOlac chamarseyu miruvizhi ...... kuzhaimOthath thukiraik kOvaik kanithanai nikarithazh parukik kAthat RuyaraRa vaLaniRai thuNaipot ROLiR kuzhaivuRa manamathu ...... kaLikUrac chudarmuth thArap paNiyaNi mrukamatha niRaipoR pArath thiLakiya mukizhmulai thuvaLak kUdith thuyilkinu munathadi ...... maRavEnE kukukuk kUkuk kukukuku kukuvena thimithith theethith thimithiyen murasodu kuzhumic cheeRic chamarseyu masurarkaL ...... kaLameethE kuzhaRik kULith thiraLezha vayiravar kuviyak kUdik koduvara alakaikaL kuNalit tAdip pasikeda ayilvidu ...... kumarEsA sekasec chEsec chekavena murasoli thikazhac cUzhath thirunada midupavar cheRikat kALap paNiyaNi yiRaiyavar ...... tharusEyE sikarap pArak kiriyuRai kuRamakaL kalasath thAmath thanakiri thazhuviya thiruneyth thAnath thuRaipava surapathi ...... perumALE. ......... Meaning ......... mukilaik kAraic charuviya kuzhal athu sariyath thAmath thodai vakai nekizh thara muLarip pUvaip pani mathi thanai nikar mukam vErva: Their hair resembling the cloud and the darkness was let loose, sliding down. The garland adorning the hair also slackened off. On their lotus-like and moon-like face, beads of perspiration appeared. munaiyil kAthip poru kaNaiyinai iLa vaduvaip pAnal parimaLa naRai ithazh mukaiyaip pOlac chamar seyyum iru vizhi kuzhai mOtha: Their two combative eyes, ready to collide with their razor-sharp corners, looking like the war-worthy arrow, the tender mango, the black lily and the petal of lotus filled with fragrance and honey, impinged upon the swinging studs on the ears. thukiraik kOvaik kani thanai nikar ithazh parukik kAthal thuyar aRa vaLa niRai thuNai pon thOLil kuzhaivuRa manam athu kaLi kUra: Imbibing the saliva oozing from their red lips looking like coral and the kovvai fruit, I quenched my thirst of passion; and my heart melted for their two beautiful and solid shoulders and was elated. sudar muththu Arap paNi aNi mrukamatha niRai pon pAraththu iLakiya mukizh mulai thuvaLak kUdi thuyilkinum unathu adi maRavEnE: Their curved in, beautiful and heavy breasts are adorned with a bright string of pearls, smeared with a paste of musk and are supple; even though I sleep with these whores crushing their bosom, I shall never forget Your hallowed feet, Oh Lord! kukukuk kUkuk kukukuku kukuvena thimithith theethith thimithiyen murasodu kuzhumic cheeRic chamar seyyum asurarkaL kaLa(m) meethE: All drums joined together and made a roaring noise (to these beats) on the battlefield of the demons; kuzhaRik kULith thiraL ezha vayiravar kuviyak kUdik kodu vara alakaikaL kuNal ittu Adip pasi keda ayil vidu kumarEsA: a large crowd of eagles assembled making a din, the eight bhairavAs came in procession and the devils heckled and joined together in satiating their hunger as You wielded Your spear, Oh Lord KumarA! sekasec chEsec cheka ena murasu oli thikazhac cUzhath thiru nadam idupavar cheRi kaN kALap paNi aNi iRaiyavar tharu sEyE: Against the background sound of the beating of drums to the meter "sekasec chEsec cheka" around Him, He dances the Cosmic Dance; He wears as a jewel the serpent known for its sharp hearing power, keen eye-sight and its poison; and You are the child of that Lord SivA! sikarap pArak kiri uRai kuRa makaL kalasath thAmath thana kiri thazhuviya thiru neyth thAnaththu uRaipava surapathi perumALE.: She is VaLLi, the damsel of the KuRavAs, living in Mount VaLLimalai, known for its tall peaks and huge size; and You hug her mountain-like bosom looking like the pot that wears a garland of flowers! You are seated in ThiruneyththAnam* and are the Lord of the celestials, Oh Great One! |
* ThiruneyththAnam is located near the town, ThiruvaiyARu. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |