திருப்புகழ் 843 இரத்த முஞ்சி  (திருப்பெருந்துறை)
Thiruppugazh 843 iraththamunji  (thirupperundhuRai)
Thiruppugazh - 843 iraththamunji - thirupperundhuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தந்தன தானன தந்தத்
     தனத்த தந்தன தானன தந்தத்
          தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான

......... பாடல் .........

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
     டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
          டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி

இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
     டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
          டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா

பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
     துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
          பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்

பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
     குலுத்தெ னும்படி கூனிய டங்கிப்
          பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ

தரித்த னந்தன தானன தந்தத்
     திமித்தி மிந்திமி தீதக திந்தத்
          தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம்

தனத்த குந்தகு தானன தந்தக்
     கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
          சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா

சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
     டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
          சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே

செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
     களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
          திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள் தசைப் பசும் குடல் நாடி
புனைந்திட்டு
... ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும்
மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு

இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி இதத்துடன்
புகல் சூது மிகுந்திட்டு
... அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும்,
நீராலும் ஆன வீடாகிய உடலில் நுழைவு பெற்று, அதில் இருந்துகொண்டு
இன்பகரமாகப் பேசும் சூதான மொழிகள் அதிகமாகி,

அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள் தெருட்டவும்
தெளியாது பறந்திட்டிட
... கிளைத்து எழுகின்ற பொருளாசை
என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச் சொன்னாலும் தெளியாமல்
மேலும் மேலும் பறப்பதாயிருக்க,

மாயா பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்தம் உளைப்புடன்
பல வாயுவும் மிஞ்சி
... உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம்,
சுரம், பித்தம் இவைகளின் வேதனைகளோடு பல வகையான வாயுக்களும்
அதிகரித்து,

பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய்ப் பிடித்திடும்
பல நாள் கொடு
... இருக்கின்ற உடல்வலிமையும் சில தினங்களுக்குள்
ஒடுங்கி, தடி மேல் கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல,

மந்திக் குலுத்து எனும்படி கூனி அடங்கிப் பிசக்கு வந்திடு(ம்)
போது பின் அஞ்சிச் சடம் ஆமோ
... குரங்குக் கூட்டத்தவன் என்று
சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள் அடங்கி, மரணம் வந்திடும்
சமயத்தில் பின்பு பயப்படுவதான இந்த உடலால் ஏதேனும் பயன்
உண்டோ?

தரித்த னந்தன தானன தந்தத்
     திமித்தி மிந்திமி தீதக திந்தத்
          தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல்தாளம்
...
(இந்த அடிகளுக்கு ஏற்ப) ஒலிக்கின்ற தாளத்துடன்,

தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூர் உடல்
சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா
...
தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து
(போருக்கு) வந்த சூரனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப்
போவதுடன் கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை எறிந்தவனே,

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து
அமரோர்கள் படிந்துச் சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன்
சரணோனே
... தலை வணக்கத்துடன் கையிலுள்ள மலர்களைப்
பொழிந்து போற்றி செய்யும் தேவர்கள் அவர்களது சிரத்தில் தலையில்
மணக்கின்ற மாலைகளின் நறு மணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை
உடையவனே,

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ...
உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு
வேத உபதேசம் அளித்த பரமகுருவே,

ஞான ப்ரசங்க* திருப் பெருந்துறை மேவிய கந்தப்
பெருமாளே.
... (உன் தந்தை) ஞானச் சொற்பொழிவு செய்த
தலமாகிய திருப்பெருந்துறையில்** விரும்பி வீற்றிருக்கும் கந்தப்
பெருமாளே.


* நான்கு சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அரசனுக்காக
குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவனே குரு மூர்த்தியாக
இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும்
இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றார். அதனால் ஞானப்ரசங்கத்
திருப்பெருந்துறை எனப்பட்டது.


** இது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து 8 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1039  pg 2.1040  pg 2.1041  pg 2.1042  pg 2.1043  pg 2.1044 
 WIKI_urai Song number: 847 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 843 - iraththa munji (thirupperundhuRai)

iraththa mumchiyu mULaiye lumput
     tasaippa sungkudal nAdipu nainthit
          tirukku maNchala veedupu kunthit ...... tathilmEvi

ithaththu danpukal cUthumi kunthit
     takaiththi dumporu LAsaiye numput
          terutta vuntheLi yAthupa Ranthit ...... tidamAyA

piraththam vanthadu vAthasu rampith
     thuLaippu danpala vAyuvu minjip
          pelaththai yumchila nALuLo dungith ...... thadimElAyp

pidiththi dumpala nALkodu manthik
     kuluththe numpadi kUniya dangip
          pisakku vanthidu pOthupi nanjic ...... chadamAmO

thariththa nanthana thAnana thanthath
     thimiththi minthimi theethaka thinthath
          thaduttu duNdudu dUdudi miNdit ...... tiyalthALam

thanaththa kunthaku thAnana thanthak
     kothiththu vanthidu cUrudal sinthac
          chalaththu dankiri thULpade Rinthit ...... tidumvElA

siraththu dankara mEdupo zhinthit
     tiraiththu vanthama rOrkaLpa dinthuc
          chiraththi nungkamazh mAlaima NampoR ...... charaNOnE

sekaththi ninguru vAkiya thanthaik
     kaLiththi dumguru njAnapra sangath
          thiruppe runthuRai mEviya kanthap ...... perumALE.

......... Meaning .........

iraththamum seeyum mULai elumpu uL thasaip pasum kudal nAdi punainthittu: Comprising blood, puss, brain, bones, the flesh inside, fresh intestines, veins and arteries,

iRukku maN sala veedu pukunthittu athil mEvi ithaththudan pukal cUthu mikunthittu: the body is strongly made of earth and water; into that house of a body, life enters; treacherous and titillating speech proliferates;

akaiththidum poruL Asai enum puL theruttavum theLiyAthu paRanthittida: avarice for wealth, like a bird, soars; even though others explain its futility clearly, that bird obliviously continues to ascend higher and higher;

mAyA piraththam vanthu adu vAtha suram piththam uLaippudan pala vAyuvum minji: with increasing delusion of worldly matters, many diseases afflict the body, such as rheumatism, fever, biliousness and a host of unabating gastric ailments;

pelaththaiyum sila nALuL odungi thadi mElAyp pidiththidum pala nAL kodu: in a few days the physical strength shrinks, and the hand has to rely on a walking stick; after suffering for many more days like this,

manthik kuluththu enumpadi kUni adangip pisakku vanthidu (m) pOthu pin anjic chadam AmO: the hunch-back makes one bend so much that he is considered to be belonging to the monkey-clan; the energy is completely gone; the body then awaits in fear the arrival of death; is there any use of such a body?

thariththa nanthana thAnana thanthath
     thimiththi minthimi theethaka thinthath
          thaduttu duNdudu dUdudi miNdittu iyalthALam:
(To the sound of these beats),

thanaththa kunthaku thAnana thanthak kothiththu vanthidu cUr udal sinthac chalaththudan kiri thUL pada eRinthittidum vElA: he came seething with rage (to the battlefield) making the sound "thanaththa kunthaku thAnana thanthak"; You wielded the spear, destroying the body of that demon SUran, drying up the sea and smashing the mount Krouncha to pieces, Oh Lord!

siraththudan karam Edu pozhinthittu iraiththu vanthu amarOrkaL padinthuc chiraththinum kamazh mAlai maNam pon saraNOnE: Bowing their heads in worship and offering prayers to You, the celestials shower flowers from their hands and prostrate at Your hallowed feet on which is imparted the fragrance of the garlands decorating their heads, Oh Lord!

sekaththinil guruvAkiya thanthaikku aLiththidum guru: He is the Master of the entire Universe; and to that Lord SivA, Your Father, You preached the VEdic principle, Oh Grand Master!

njAna prasanga* thirup perunthuRai mEviya kanthap perumALE.: Your Father delivered a spiritual speech in this place called Thirup perunthuRai** where You are seated with relish, Oh Great One!


* MANikkavAsakar, one of the four Saivite Stalwarts, went to buy horses for the king. On his way, he heard the spiritual speech delivered by Lord SivA in ThirupperunthuRai to the devotees and was immediately attracted by that speech. He became a devotee of Lord SivA from then on.


** ThirupperunthuRai is located 8 miles from aRanthAngi railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 843 iraththa munji - thirupperundhuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]