திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 844 வரித்த குங்குமம் (திருப்பெருந்துறை) Thiruppugazh 844 variththakungkumam (thirupperundhuRai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தனந் தனதன தனத்தனந் தனதன தனத்தனந் தனதன ...... தனதான ......... பாடல் ......... வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன் மயக்கவந் ததிலறி ...... வழியாத கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர களிப்புடன் களிதரு ...... மடமாதர் கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி களைத்தருந் திருவுள ...... மினியாமோ பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத் திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வரித்த குங்குமம் அணி முலைக் குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட ... சந்தனக் கலவை பூசப்பட்டதும், குங்குமம் அணிந்ததும் ஆகி, தென்னங் குரும்பை ஒத்ததுமான மார்பை உடைய பெண்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு, அதி விதமான வளைக்கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க(ம்) வந்ததில் அறிவு அழியாத கருத்து அழிந்திட ... பலவகையான வளையல் அணிந்துள்ள தமது கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, வந்தவர்கள் உடல் இன்பம் அடையுமாறு காம மயக்கத்தை ஊட்டும் சொற்களால் அறிவு அழிந்து போகாத என் சிந்தனைகளும் அழிவு பெற, இரு கயல் க(ண்)ணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர் கருப் பெரும் கடல் அது கடக்க ... இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் புரள மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இள வயதுள்ள மாதர்களால் ஏற்படுகின்ற பிறவி என்கின்ற கடலைக் கடக்க, உன் திருவடிகளைத் தரும் திரு உள்ளம் இனி ஆமோ ... உன் திருவடிகளைத் தருவதற்கு உன் திருவுள்ளம் இனியேனும் கூடுமோ? பொருப்பு அகம் பொடி பட அரக்கர் தம் பதியோடு புகைப் பரந்த எரி எழ விடும் வேலா ... கிரெளஞ்ச மலையின் உள்ளிடம் பாடிபடவும், அசுரர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த நெருப்பில் பட்டு அழியவும் செலுத்திய வேலனே, புகழ்ப் பெரும் கடவுளர் களித்திடும் படி புவி பொறுத்த மந்தர கிரி கடல் ஊடே திரித்த கொண்டலும் ... புகழ் மிகுந்த தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே (மத்தாகச்) சுழலச் செய்த மேக நிறத் திருமாலும், ஒரு மறுப் பெறும் சது முக திருட்டி எண் க(ண்)ணன் முதல் அடி பேண ... ஒரு குறையைப்* பெற்ற, (தனக்கிருந்த ஐந்து தலைகளில்) நான்கு முகங்களில் மட்டுமே பார்வையைக் கொண்ட எட்டுக் கண்களை உடைய பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே. ... திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய தக்ஷிணா மூர்த்தியாகிய குருபரர்** சங்கரருடன் திருப்பெருந்துறையில்*** அமர்ந்திருக்கும் பெருமாளே. |
* இறைவனிடம் பொய் பேசியதால் பிரமனின் ஐந்து தலைகளுள் ஒரு தலை கிள்ளப்பட்டுள்ள மறு. |
** மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்த சமயம் நாட்டுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவபெருமான் ஞான குருமூர்த்தியாக இருந்து, குருந்த மரத்தடியில் அடியார்களுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுத் தாமும் கவரப்பட்டு, அந்த அடியார்களுடன் இருந்து உபதேசம் பெற்றார். |
*** திருப்பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்திலிருந்து 7 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1043 pg 2.1044 pg 2.1045 pg 2.1046 WIKI_urai Song number: 848 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 844 - variththa kungkumam (thirupperundhuRai) variththakun gumamaNi mulaikkurum paiyarmana makizhcchikoN didAthi ...... vithamAna vaLaikkaran gaLinodu vaLaiththitham padavudan mayakkavan thathilaRi ...... vazhiyAtha karuththazhin thidairu kayaRkaNum puraLthara kaLippudan kaLitharu ...... madamAthar karupperum kadalathu kadakkavun thiruvadi kaLaiththarun thiruvuLa ...... miniyAmO poruppakam podipada arakkartham pathiyodu pukaipparan theriyezha ...... vidumvElA pukazhpperum kadavuLar kaLiththidum padipuvi poRuththaman tharakiri ...... kadalUdE thiriththakoN dalumoru maRuppeRum chathumuka thiruttiyeN kaNanmutha ...... ladipENath thirukkurun thadiyamar kuruthvasan kararodu thirupperun thuRaiyuRai ...... perumALE. ......... Meaning ......... variththa kungumam aNi mulaik kurumpaiyar makizhcchi koNdida: These girls, endowed with bosom like baby coconuts, smeared with sandalwood paste and wearing vermillion, come out in an elating manner; athi vithamAna vaLaikkarangaLinodu vaLaiththu itham pada udan mayakka(m) vanthathil aRivu azhiyAtha karuththu azhinthida: displaying a variety of bangles on their arms they merely hook and pull young men towards them; they shower provocative speech immersing the men in a passionate delusion; their words are capable of destroying my intellect; saving me from destruction by extinguishing my thoughts in these lines, iru kayal ka(N)Num puraL thara kaLippudan kaLi tharu mada mAthar karup perum kadal athu kadakka: and to let me cross the sea of birth caused by these exhilarating young women, with their two rolloing kayal-fish-like eyes, un thiruvadikaLaith tharum thiru uLLam ini AmO: will You kindly consider blessing me and granting Your hallowed feet? poruppu akam podi pada arakkar tham pathiyOdu pukaip parantha eri ezha vidum vElA: The bowels of Mount Krouncha were shattered to pieces, and the demons, along with their towns, were set on a wide fire, mingled with smoke, when You wielded Your spear, Oh Lord! pukazhp perum kadavuLar kaLiththidum padi puvi poRuththa manthara kiri kadal UdE thiriththa koNdalum: He is Lord Vishnu, with complexion of black cloud, who, much to the elation of the famous celestials, churned the milky ocean with the mount Manthara, that holds the earth like a fulcrum; along with Him, oru maRup peRum sathu muka thirutti eN ka(N)Nan muthal adi pENa: the four-faced Lord BrahmA, who has the curse* (of losing one of His five heads), having only eight eyes, and other celestials have all assembled happily to worship Your hallowed feet in thiruk kurunthu adi amar kuruthva sangararodu thirupperundhuRai uRai perumALE.: this place, ThirupperundhuRai**, where You are seated along with the great Master***, Lord Sankara, who sits under the holy kuruntha tree in the form of DhakshiNAmUrthy, Oh Great One! |
* The curse: Once BrahmA lied to Lord SivA who angrily severed one of His original five faces. |
** ThirupperundhuRai is located 7 miles from aRanthAngi railway station. |
*** The great Saivite Saint, MANikka vAsagar, when he was a minister, went to buy horses for the kingdom. While travelling through ThirupperunthuRai, he was attracted by the sight of Lord SivA in the form of DhakshiNAmUrthy preaching to His devotees under the kuruntha tree; he too joined the devotees and benefited by the Lord's preaching. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |