திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 845 முகர வண்டெழு (திருப்பெருந்துறை) Thiruppugazh 845 mugaravaNdezhu (thirupperundhuRai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... முகர வண்டெழுங் கருமுகி லலையவு முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும் முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு மருவு சங்கநின் றொலிகொடு பதறவு முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச் சிகர கும்பகுங் குமபுள கிததன மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித் திமிர கங்குலின் புதவிடு மவசர நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல் மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன் மடிய வங்குசென் றவனொரு பதுமுடி முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல் மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர் பவள மும்பொரும் பழனமு மழகுற நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முகர வண்டு எழும் கரு முகில் அலையவு(ம்) முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவு(ம்) முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும் முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவு(ம்) ... ஒலி செய்யும் வண்டுகள் எழுந்து மொய்க்கும் கரிய மேகம் போன்ற கூந்தல் அலைச்சல் உறவும், முற்றிய விஷத்தைக் கக்கும் அம்பு போன்ற கண்கள் குவியவும், அரும்பு மலரும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியில் வியர்வை எழவும், அமுதம் ஊறுகின்ற, நறுமணம் தங்கும் செவ்விய பவளம் போன்ற வாயிதழ் தெரியவும், மருவு சங்க(ம்) நின்று ஒலி கொடு பதறவு(ம்) முழுது அன்பு தந்து அமளியின் உதவிய அநுராகச் சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட ... பொருந்திய சங்கு போன்ற கழுத்திலிருந்து வெளிப்படும் (புட்குரல்) ஒலியோடு பதறிடவும், முழு அன்பையும் தந்து படுக்கையில் காட்டிய காமப் பற்றுக்கு இடமானதும், மலை போன்றதும், குடம் போன்றதும், குங்குமம் பூசியதும், புளகிதம் கொண்டதுமான மார்பகங்கள் இரண்டு புயங்களிலும் அழுந்திடவும், நடு இடைவெளி தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவித் திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற ... மத்தியில் வெளியிடம் தெரியாத வண்ணம் ஒருவரை ஒருவர் அணைந்திட, உயிரும் உயிரும் கலந்து பொருந்தக் கூடி, இருண்ட இரவில் கலவி இன்பத்தைத் தந்து உதவிடும் சமயங்களின் ஞாபகம் மனதிலிருந்து ஒழிந்து போகவும், அவர் முகம் அது தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள் புரிவாயே ... (அந்த விலைமாதர்களின்) முகத்தை தரிசனம் செய்ய விரும்பும் ஆசை ஒழிந்து போகவும் இனி எனக்கு அருள் புரிவாயாக. மகர(ம்) நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு வடி கொள் செம் சரம் தொடுபவன் ... மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதும், ஒலிக்கும் கடல் (சமுத்திரராஜன்) கலக்கத்துடன் பயந்து வந்து திருவடியில் தொழுது வணங்கும்படி ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும், இருபது புய வீரன் மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல் மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே ... இருபது புயங்களைக் கொண்ட வீரன் (ராவணன்) இறக்க, இலங்கைக்குப் போய் அவனுடைய ஒரு பத்து தலைகளும் அழிபட முன்பு நெருங்கி போரைச் செய்த, ஒளி பொருந்திய மதில் சூழ்ந்த இலங்கைப் பட்டினம் பொடிபட அருளிய திருமாலின் மருகனே, நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழ் உற விரகு கொண்டு நின்று அழகு உறு மயில் மிசை நினைவின் உந்தி அம் புவி தனை வலம் வரும் இளையோனே ... ஒப்பில்லாத அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்ளவும் சாமர்த்தியத்துடன் ஏறி நின்று அழகு பொருந்திய மயிலில் மனோ வேகத்தைக் காட்டிலும் அதி வேகமாகச் செலுத்தி, அழகிய பூலோகத்தை வலம் வந்த இளையோனே, நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகு உற நிழல் குருந்தமும் செறி துறை வளர் உறு பெருமாளே. ... நிலவொளி போல் வெள்ளொளி வீசும் குளிர்ந்த முத்துக்களும் விளங்கி, ஒளி தரும் பவளமும் கலந்து இலங்கும் வயல்கள் அழகு தர, நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்த திருப் பெருந்துறையில்* விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருப் பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குருந்தமரத்தடியில்தான் மாணிக்கவாசகரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1045 pg 2.1046 pg 2.1047 pg 2.1048 WIKI_urai Song number: 849 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 845 - mugara vaNdezhu (thirupperundhuRai) mukara vaNdezhung karumuki lalaiyavu muthiya nanjumizhn thayilvizhi kuviyavu mukiLa chanthiran porunuthal veyaravu ...... mamuthURum muruku thangusen thukirithazh theriyavu maruvu sanganin Rolikodu pathaRavu muzhuthu manputhan thamaLiyi nuthaviya ...... anurAkac chikara kumpakung kumapuLa kithathana mirupu yamputhain thidanadu vidaiveLi theriya linRiyon Ridavuyi ruyiruda ...... nuRamEvith thimira kangulin puthavidu mavasara ninaivu nenjinin RaRavavar mukamathu therisa nanjeyum parivaRa iniyaruL ...... purivAyE makara ninRatheN diraiporu kanaikadal maRuki yanjivan thadithozhu thidavoru vadikoL senjaran thodupava nirupathu ...... puyaveeran madiya vangusen Ravanoru pathumudi mudiya munpumaN damarporu thamarnizhal mathili langaiyum podipada aruLari ...... marukOnE nikari laNdameN disaikaLu makizhvuRa viraku koNdunin RazhakuRu mayilmisai ninaivi nunthiyam puvithanai valamvaru ...... miLaiyOnE nilava rumputhaN daraLamu miLiroLir pavaLa mumporum pazhanamu mazhakuRa nizhalku runthamunj cheRithuRai vaLarvuRu ...... perumALE. ......... Meaning ......... mukara vaNdu ezhum karu mukil alaiyavu(m) muthiya nanju umizhntha ayil vizhi kuviyavu(m) mukiLa chanthiran poru nuthal veyaravum amuthu URum muruku thangu sem thukir ithazh theriyavu(m): Their hair, dark like the cloud, swarmed around by buzzing beetles, is wavy. Their arrow-like eyes, filled with poison, shrivel. On their forehead that looks like budding crescent moon, beads of perspiration appear. Their fragrant and reddish lips exuding nectar look like red coral. maruvu sanga(m) ninRu oli kodu pathaRavu(m) muzhuthu anpu thanthu amaLiyin uthaviya anurAkac chikara kumpa kunguma puLakitha thanam iru puyam puthainthida: From their conch-like soft neck, quivering sounds (of cooing birds) emanate. Their pot-like and exhilarated breasts, smeared with vermillion and being the source of their total love and passion displayed on the bed, press hard on their suitor's shoulders. nadu idaiveLi theriyal inRi onRida uyir uyirudan uRa mEvith thimira kangul inpu uthavidum avasara ninaivu nenjininRu aRa: They hug each other so tightly that there does not appear to be any gap between them as their two souls merge together in union. In order that such memorable occasions of that coital pleasure during dark nights is erased from my mind, avar mukam athu therisanam seyum parivu aRa ini aruL purivAyE: and to remove my desire of having the vision of those whores, kindly grant me Your grace, Oh Lord! makara(m) ninRa theL thirai poru kanai kadal maRuki anji vanthu adi thozhuthida oru vadi koL sem charam thodupavan: The Lord of the Ocean (SamudrarAjan), residing in the clear and wavy seas where makara fish live, was shaken and terrified and fell at His hallowed feet when He wielded a sharp arrow (at the sea); irupathu puya veeran madiya angu senRu avan oru pathu mudi mudiya munpu maNdu amar poruthu amar nizhal mathil ilangaiyum podipada aruL ari marukOnE: He killed the valorous demon (RAvaNan) who had twenty shoulders; He went to LankA and destroyed his ten heads fighting a war in close quarters; the City of LankA, surrounded by bright fortress walls, was shattered to pieces by that gracious Lord VishNu; and You are His nephew, Oh Lord! nikar il aNdam eN thisaikaLum makizh uRa viraku koNdu ninRu azhaku uRu mayil misai ninaivin unthi am puvi thanai valam varum iLaiyOnE: Elating the people living in matchless worlds in the eight directions, You cleverly mounted the beautiful peacock and drove it at a speed faster than the mind and circum-ambulated this earth, Oh Young One! nilavu arumpu thaN tharaLamum miLir oLir pavaLamum porum pazhanamum azhaku uRa nizhal kurunthamum seRi thuRai vaLar uRu perumALE.: Cool pearls that radiate bright white rays like the moon and dazzling corals abound in the beautiful fields of this place; the shady trees of kuruntha also surround this shrine, Thirup perunthuRai* which is Your abode, Oh Great One! |
* Thirup perunthuRai is near aRanthAngi railway station. Under the kuruntha tree here, Lord SivA took over the famous Saivite poet MANikkavAsakar as His disciple. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |