பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1043

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செகத்தி னின்குரு வாகிய தந்தைக்

  • களித்தி டுங்குருt ஞானப்ர சங்கத் திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் பெருமாளே. (1)

848.பிறவியற தனத்தனந் தனதன தனத்தனந் தனதன தனததனந தனதன தனதான 4 வரித்தகுங் குமமணி Xமுலைக்குரும் பையர்மன மகிழ்ச்சிகொண் டிடஅதி விதமான. வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன் மயக்கவந் ததிலறி வழியாத, கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர கிளிப்புடன் களிதரு மடமாத்ர். கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி களைத்தருந் திருவுள மினியாமோ, பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு புகைப்பரந் தெரியெழ விடும்வேலா.

  • சிவனுக்கு உபதேசகுரு - பாடல் 327. பக்கம் 314 1. ஞான ப்ரசங்கம். மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் சென்றபோது (பாடல் 439-பக்கம் б01) திருப்பெருந்துறையில் சிவனே குருமூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞானோபதேசம் செய்வதைக் கண்டு காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புபோல இழுக்கப்பட்டுத் தாமும் அவ் வடியார்ளுடனிருந்து உபதேசம் பெற்றனர். அதனால் ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை எனப்பட்டது.

"பரிந்து மாணவர்கள் சூழப் பத்தனார் வரவு பார்த்துப் பெருந்துறைக் குருந்த நீழல் இருந்தனன் பெரிய ஆசான்" 'நோக்கினால் பாவகத்தால் நுவலரும் பரிசனத்தால் காக்குமீனுடலடக்கங் கமடமொண் பறவை யென்ன ஆக்கினான் ஆக்கு முன்னர் அடைந்தது பரம ஞானம் வாக்கில்நா மடந்தை சேர்ந்தாள் அகன்றன மலங்கள் முன்றும்" திருவாலவாயுடை - 27-(44-48) (தொடர்ச்சி 485-ஆம் பக்கம் பார்க்க)