திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 842 நீல முகில் ஆன (கோடி .. குழகர் கோயில்) Thiruppugazh 842 neelamugilAna (kOdi-kuzhagar kOyil) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான ......... பாடல் ......... நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன நேயமதி லேதினமு ...... முழலாமல் நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை நீரிலுழல் மீனதென ...... முயலாமற் காலனது நாவரவ வாயிலிடு தேரையென காயமரு வாவிவிழ ...... அணுகாமுன் காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு கால்முருக வேளெனவு ...... மருள்தாராய் சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி தோகைகுற மாதினுட ...... னுறவாடிச் சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர் கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் ... கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய மாதர்களின் மார்பகத்தின் மேலுள்ள ஆசையால் நாள் தோறும் அலைச்சல் உறாமல், நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் ... பெரிய மண்ணாசை, பொருள்கள் மேலுள்ள ஆசை இவற்றில் மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல் நீரில் அலைச்சல் உறுகின்ற மீனைப் போல உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல், காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் ... யமனுடைய (என்னை) விரட்டும் பேச்சு என்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல உடலில் பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக, காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள் தாராய் ... அன்புடன் உன்னை ஓதுகின்ற அடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேள் என்று நான் புகழுமாறு திருவருளைத் தந்தருளுக. சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி தோகை குற மாதினுடன் உறவாடி ... (வள்ளி மலைக் காட்டிலுள்ள) சோலையின் இடையே பரண் மீது நிழலில் நின்று, தினைப் புனத்தைக் காவல் செய்யும் மயில் போல் சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் உறவு கொண்டாடி, சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ ... கள்வன் என்று உன்னைத் தேடி வந்தவர்களான காட்டு வேடர்கள் எல்லாம் மாண்டு விழ, சோதி கதிர் வேல் உருவு(ம்) மயில் வீரா ... மிக்க ஒளி வீசும் வேலைச் செலுத்திய மயில் வீரனே, கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே ... அழகுள்ளதும், வினைகளை அழிப்பதில் நெருப்புப் போன்றதும் ஆகிய திருநீற்றை அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமா தேவியார் பெற்ற குழந்தையே, கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே. ... தந்தத்தை முகத்தில் கொண்ட யானையாகிய கணபதிக்குப் பின்னர் தோன்றிய தம்பியே, குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி* என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. |
* கோடி என்னும் குழகர்கோவில் வேதாரணியத்துக்குத் தெற்கே 5 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1037 pg 2.1038 pg 2.1039 pg 2.1040 WIKI_urai Song number: 846 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 842 - neela mugil Ana (kOdi) neelamuki lAnakuzha lAnamada vArkaLthana nEyamathi lEthinamu ...... muzhalAmal needupuvi yAsaiporu LAsaimaru LAkiyalai neeriluzhal meenathena ...... muyalAmal kAlanathu nAvarava vAyilidu thEraiyena kAyamaru vAvivizha ...... aNukAmun kAthaluda nOthumadi yArkaLuda nAdiyoru kAlmuruga vELenavu ...... maruLthArAy sOlaiparaN meethunizha lAkathinai kAvalpuri thOkaikuRa mAthinuda ...... nuRavAdi sOranena nAdivaru vArkaLvana vEdarvizha sOthikathir vEluruvu ...... mayilveerA kOlavazhal neeRupunai yAthisaru vEsarodu kUdiviLai yAdumumai ...... tharusEyE kOdumuka vAnaipiRa kAnathuNai vAkuzhakar kOdinakar mEvivaLar ...... perumALE. ......... Meaning ......... neela mukil Ana kuzhal Ana madavArkaL thana nEyam athilE thinamum uzhalAmal: I do not wish to roam about daily hankering after the bosom of women with hair like the dark cloud; needu puvi Asai poruL Asai maruL Aki alai neeril uzhal meen athu ena muyalAmal: nor do I wish to exert myself like the wandering fish in the wavy sea in delusory pursuit of desire for a large landed property and material things; kAlanathu nA arava vAyil idu thErai ena kAyam maruvu Avi vizha aNukA mun: the daunting speech of Yaman (the God of Death) will be like the cobra in whose mouth my life shall be a frog-like prey; before my life falls into his hands and before he even comes near me, kAthaludan Othum adiyArkaLudan nAdi oru kAl muruka vEL enavum aruL thArAy: kindly bless me to join the company of Your devotees who praise Your glory with love and to say, along with them, at least once, "Oh Lord MurugA!" sOlai paraN meethu nizhalAka thinai kAval puri thOkai kuRa mAthinudan uRavAdi: She stood under the shadow of the bamboo platform built at a height in the millet-field in VaLLimalai and guarded the crop; she looked like a peacock; You developed a relationship with that kuRavA damsel, VaLLi; sOran ena nAdi varuvArkaL vana vEdar vizha sOthi kathir vEl uruvu(m) mayil veerA: when the hunters from the forest came chasing you thinking that you were a thief, You wielded Your dazzling spear and knocked them all dead, Oh valorous One mounted on the peacock! kOla azhal neeRu punai Athi saruvEsarodu kUdi viLaiyAdum umai tharu sEyE: He is the primordial One wearing the beautiful holy ash (VibUthi) which is powerful as fire, in scorching all the deeds; He is Lord SivA with whom Goddess UmAdEvi plays around; You are Her Son, Oh Lord! kOdu muka Anai piRakAna thuNaivA kuzhakar kOdi nakar mEvi vaLar perumALE.: You are the younger brother of GaNapathi, with an elephant face and a prominent tusk! You have chosen KOdi* as Your abode where Lord SivA has a seat with the name Kuzhakar, Oh Great One! |
* KOdi is also known as KuzhakarkOvil, situated 5 miles south of VedAraNyam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |