திருப்புகழ் 841 நூலினை ஒத்த  (வேதாரணியம்)
Thiruppugazh 841 nUlinaioththa  (vEdhAraNiyam)
Thiruppugazh - 841 nUlinaioththa - vEdhAraNiyamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
     தானன தத்த தனந்த ...... தனதான

......... பாடல் .........

நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும்

நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்
     நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும்

சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள்
     தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச்

சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
     தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ

வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை
     வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே

மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து
     வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன்

மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து
     வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே

மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து
     வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம்
மொய்த்த பதங்கள் இவையாலும்
... நூல் போன்று நுண்ணிய
இடை, தேருக்கு ஒப்பான பெண்குறித்தலம், சிலம்பு அணிந்த பாதங்கள்
இவைகளாலும்,

நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள்
நூல் வல் மலர்ப் பொரு துண்டம் அவையாலும்
... நூல்களால்
திசைகளில் புகழ் பெற்ற தகுதி வாய்ந்த மேரு மலையைப் போன்ற
மார்பகங்கள், தாமரை ஒத்த முகம் அவைகளாலும்,

சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு(ம்) பெண்கள்
தேன் இதழ் பற்றும் ஒர் இன்ப வலை மூழ்கிச் சீலம்
அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை
இழந்து திரிவேனோ
... சேல் மீனை ஒத்திடும் கண்களாலும்
(ஆடவர்களை) அழைக்கின்ற விலைமாதர்களின் தேன் போல் இனிக்கும்
வாயிதழைப் பற்றி அனுபவிக்கின்ற ஒரு இன்ப வலையில் (நான்) மூழ்கி
என்னுடைய ஆசாரங்கள் அனைத்தையும் ஒழியவிட்டு காம லீலைகளில்
அழுந்தியவனாய், தேர்ந்து அடையத் தகும் தவ நிலையை இழந்து
அலைச்சல் உறுவேனோ?

வால இளப் பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை
வாசுகியைப் புனை நம்பர் தரு சேயே
... பால இளம் பிறைச்
சந்திரன், தும்பைப்பூ, கங்கை நதி, கொன்றை, திருநீற்றுப் பச்சை, வாசுகி
என்னும் பாம்பு இவைகளைப் புனைந்த சிவபெருமான் பெற்ற குழந்தையே,

மாவலியைச் சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி
பரப்பி இலங்கை அரசானோன் மேல் முடி பத்தும் அரிந்து
தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன்
மருகோனே
... மகாபலிச் சக்கரவர்த்தி சிறையில் ஒடுங்க ஓர் அடியால்
பேசிய பேச்சின் படி அளவிட்டும், அம்பைச் செலுத்தி இலங்கை அரசான
ராவணனின் பத்துத் தலைகளையும் அரிந்தும் இருபது தோள்களையும்
அரிந்தும் வீரம் மிக்கு நின்ற திருமாலின் மருகனே,

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத
வனத்தில் அமர்ந்த பெருமாளே.
... விரும்பத் தக்கத் திருத்தணி,
திருச்செந்தூர், பெரிய பழனி இம்மூன்று தலங்களிலும் இன்புற்று
இருந்து, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல்
தூரத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1033  pg 2.1034 
 WIKI_urai Song number: 845 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 841 - nUlinai oththa (vEdhAraNiyam)

nUlinai yoththa marungul thErinai yoththa nithampam
     nUpura moyththa pathangaL ...... ivaiyAlum

nURisai petRa pathangoL mEruvai yoththa thanangaL
     nUlvalma larppo ruthuNdam ...... avaiyAlum

sElinai yoththi dukaNka LAluma zhaiththi dupeNkaL
     thEnithazh patRu morinpa ...... valaimUzhkic

ceelama naiththu mozhinthu kAmavi thaththi lazhunthi
     thERutha vaththai yizhanthu ...... thirivEnO

vAlai Lappi Raithumpai yARuka dukkai karanthai
     vAsuki yaippu nainampar ...... tharusEyE

mAvali yaicchi RaimaNda Oradi yotti yaLanthu
     vALipa rappi yilangai ...... yarasAnOn

mElmudi paththu marinthu thOLiru paththu marinthu
     veerami kuththa mukunthan ...... marukOnE

mEvuthi ruththa Nisenthil neeLpazha nikku Lukanthu
     vEthava naththi lamarntha ...... perumALE.

......... Meaning .........

nUlinai oththa marungul thErinai oththa nithampam nUpuram moyththa pathangaL ivaiyAlum: With their slender waist looking like the thread, their genital region looking like the chariot, their feet adorned with anklets,

nURu isai petRa patham koL mEruvai oththa thanangaL nUl val malarp poru thuNdam avaiyAlum: their breasts that look like the worthy Mount MEru celebrated in many texts from all directions, their face like the lotus,

sElinai oththidu kaNkaLAlum azhaiththidu(m) peNkaL thEn ithazh patRum or inpa valai mUzhkic cheelam anaiththum ozhinthu kAma vithaththil azhunthi thERu thavaththai izhanthu thirivEnO: and their eyes like the kayal fish, they solicit the men; sucking their honey-like lips, I sink into their sensuous net and fritter away the dictates of the scriptures; by indulging in erotic acts with them losing the opportunity of attaining the worthy position of penance, why am I being tossed about aimlessly?

vAla iLap piRai thumpai ARu kadukkai karanthai vAsukiyaip punai nampar tharu sEyE: He wears on His matted hair the young crescent moon, the thumbai (leucas) flower, the river Gangai, the kondRai flower (Indian Laburnum), the fresh green holy ash and the serpent VAsuki; and You are the child of that Lord SivA!

mAvaliyaic chiRai maNda Or adi otti aLanthu vALi parappi ilangai arasAnOn mEl mudi paththum arinthu thOL iru paththum arinthu veeram mikuththa mukunthan marukOnE: According to the word given by the Emperor MahAbali, He measured with His foot pushing (MahAbali) into the prison; by wielding His arrow, He severed the ten heads and twenty arms of King RAvaNan of LankA and stood valorously; and You are the nephew of that Lord VishNu!

mEvu thiruththaNi senthil neeL pazhanikkuL ukanthu vEtha vanaththil amarntha perumALE.: Having taken Your seat with relish in the most coveted places like ThiruththaNigai, ThiruchchendhUr and the great town Pazhani, You chose VEthAraNiyam* as Your abode, Oh Great One!


* VEthAraNiyam is located at a distance of 20 miles from ThiruththuRaippUNdi Railway Junction.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 841 nUlinai oththa - vEdhAraNiyam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]