திருப்புகழ் 840 சேலை உடுத்து  (வேதாரணியம்)
Thiruppugazh 840 sElaiuduththu  (vEdhAraNiyam)
Thiruppugazh - 840 sElaiuduththu - vEdhAraNiyamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
     தான தனத்தன தந்த ...... தனதான

......... பாடல் .........

சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
     சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத்

தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
     தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார்

மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
     மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ

வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
     மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய்

பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள கன்று ...... கணையாலேழ்

பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
     பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே

வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
     வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே

மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
     வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரிக்
குழல் கிண்டி அளி மூச
... சேலையை உடுத்து ஒயிலாக நடந்தும்,
(கூந்தலிலுள்ள) மாலையை அவிழ்த்து முடிந்தும், குளிர்ந்த, நன்கு
வாரிவிடப்பட்ட கூந்தலை நெருங்கி வண்டுகள் மொய்க்கவும்,

தேனின் இனிக்க மொழிந்து காமுகரைச் சிறை கொண்டு
தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார்
... தேனைப் போல்
இனிக்கும் பேச்சுக்களைப் பேசியும், காமப் பித்து உடையாரை தம் வசப்
படுத்தியும், இங்ஙனம் நாடு முழுமையும் வெற்றி கொள்ளும் கண்களை
உடைய வேசியர்களின்

மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில்
அகப்பட நொந்து திரிவேனோ
... இருண்ட மயக்கத்தில் விழுந்து,
காம நூல்களைப் படித்து வருந்தி மோக மயக்கத்தில் அகப்பட்டு மனம்
நொந்து திரிவேனோ?

வால ரவிக் கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை
தொலைத்திட உன்றன் அருள் தாராய்
... இளஞ் சூரியனுடைய
கிரணங்கள் என்று சொல்லும்படி விளங்கும் உனது திருவடிகள்
என்னுடைய மயக்க அறிவைத் தொலைக்கும்படி உன்னுடைய
திருவருளைத் தந்து அருளுக.

பாலை வனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார
மலைக்குள் அகன்று கணையாலே ஏழ் பார மரத் திரள் மங்க
வாலி உரத்தை இடந்து
... பாலைவனத்தில் நடந்து, கரிய நிறம்
கொண்ட அரக்கி தாடகையை வதைத்து வென்று, பெரிய மலையாகிய
சித்ரகூட பர்வதத்தினின்று நீங்கி அப்பால் சென்று, தன் அம்பு கொண்டு
ஏழு பெரிய மராமரக் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப்
பிளந்து,

பால் வருணத் தலைவன் சொல் வழியாலே வேலை அடைத்து
வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள்
கொண்டல் மருகோனே
... அப்பால் சென்று வருண ராஜன்
சொன்னபடியே கடலில் அணை கட்டி, (அரக்கர்கள் வாழ்ந்திருந்த)
சூழல்களை அழிவு செய்து, இலங்கை அரசாட்சியை விபீஷணருக்குக்
கொடுத்த மேக நிறமுடைய ராமனாகிய திருமாலின் மருகனே,

மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து
வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே.
... விரும்பத்
தக்க திருத்தணிகை, திருச்செந்தூர், பெரிய தலமாகிய பழநி ஆகிய
இந்த மூன்று இடங்களிலும் பொருந்தி, வேதாரணியத்தில்*
வீற்றிருக்கும் பெருமாளே.


* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல்
தூரத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1029  pg 2.1030  pg 2.1031  pg 2.1032 
 WIKI_urai Song number: 844 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 840 - sElai uduththu (vEdhAraNiyam)

chElai yuduththuna danthu mAlai yavizhththumu dinthu
     seetha varikkuzhal kiNdi ...... yaLimUsath

thEni linikkamo zhinthu kAmu karaicchiRai koNdu
     thEsa manaiththaiyum venRa ...... vizhimAnAr

mAlai mayakkilvi zhunthu kAma kalaikkuLu Lainthu
     mAli lakappada nonthu ...... thirivEnO

vAla ravikkira Nanga LAme navutRapa thangaL
     mAyai tholaiththida vunRa ...... naruLthArAy

pAlai vanaththilna danthu neela arakkiyai venRu
     pAra malaikkuLa kanRu ...... kaNaiyAlEzh

pAra maraththiraL manga vAli yuraththaiyi danthu
     pAlva ruNaththalai vanchol ...... vazhiyAlE

vElai yadaiththuva rangaL sAdi yarakkari langai
     veeda NarukkaruL koNdal ...... marukOnE

mEvu thiruththaNi senthil neeLpa zhanikkuLu kanthu
     vEtha vanaththila marntha ...... perumALE.

......... Meaning .........

chElai uduththu nadanthu mAlai avizhththu mudinthu seetha varik kuzhal kiNdi aLi mUsa: Walking gracefully wearing a sari, loosening the garland worn on the hair and reattaching it, the cool, well-combed hair being swarmed by the beetles,

thEnin inikka mozhinthu kAmukaraic chiRai koNdu thEsam anaiththaiyum venRa vizhi mAnAr: speaking words that are sweet like honey, and enticing and holding on to all men obsessed with passion are these whores who possess eyes that could conquer the entire country;

mAlai mayakkil vizhunthu kAma kalaikkuL uLainthu mAlil akappada nonthu thirivEnO: falling into the dark pit of delusion and reading erotic texts, will I go on roaming about miserably, ensnared in the dizzy passion for these whores?

vAla ravik kiraNangaLAm ena utRa pathangaL mAyai tholaiththida unRan aruL thArAy: kindly bless me so that my mind is cleared of delusion by Your hallowed feet that are like the sun's rays at dawn.

pAlai vanaththil nadanthu neela arakkiyai venRu pAra malaikkuL akanRu kaNaiyAlE Ezh pAra marath thiraL manga vAli uraththai idanthu: He walked through the desert and killed the black demoness ThAdakai; He went past the huge mountain ChithrakUdam, and with His arrow destroyed the bunch of seven marAmara trees; He then split the heart of VAli;

pAl varuNath thalaivan chol vazhiyAlE vElai adaiththu varangaL sAdi arakkar ilangai veedaNarukku aruL koNdal marukOnE: further proceeding, He built a bridge across the sea as directed by King VaruNa; He destroyed the entire surroundings (inhabited by the demons) and handed over the throne of LankA to VibheeshaNan; He is Lord RAmA, with the complexion of dark cloud, and You are the nephew of that Lord VishNu!

mEvu thiruththaNi senthil neeL pazhanikkuL ukanthu vEthavanaththil amarntha perumALE.: You are seated with relish in the highly desirable places, namely, ThiruththaNigai, ThiruchchendhUr and the large town, Pazhani; You have an abode also in VEthAraNiyam*, Oh Great One!


* VEthAraNiyam is 20 miles away from ThiruththuRaippUNdi railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 840 sElai uduththu - vEdhAraNiyam


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]