பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1038

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடி) திருப்புகழ் உரை 479 கோடி (குழகர் கோயில்) 846. கரியமேகம் போன்ற கூந்தலைக்கொண்ட மாதர்களின் கொங்கைமேலுள்ள ஆசையிலே நான் நாள்தோறும் அலைச்சல் உறாமலும், நீண்ட (பெரிய) புவியாசை - உலக ஆசை, மண்ணாசை, பொருளாசை - பொருள்களின் மேலுள்ள ஆசை - பொன்னாசை, இவற்றில் மயக்கங்கொண்டு, அலை மிகுந்த கடல் நீரின் நடுவே அலைச்சலுறுகின்ற மீனைப்ப்ோல் உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல், (காலனது நா) காலனது (என்னை விரட்டும்) பேச்சு என்கின்ற பாம்பின் வாயினுள் அகப்பட்ட தேரைபோல, (நான் கலங்க, காயம் மருவு ஆவி விழ - இவ்வுடலில் பொருந்தியுள்ள உயிரானது உடலை விட்டு நீங்கி அவன் கையிற் சிக்கி விழும்படி கால்ன் நெருங்கிவரும் முன்பு, (அல்லது - காலனுடைய நாவாகிய பாம்பின்வாயில் அகப்பட்ட தேரைபோல, (இந்த உடலிலுள்ள உயிரானது அவன் கையில் அகப்பட்டு விழும்படி அந்தக் காலன் எனை அணுகுவதற்கு முன்பாக) அட காசாசை பிடித்த பிசாசே - நி - ஏறித்திரி கரிகள் எங்கே பெரும் பரிகள் எங்கே: தந்தக் கட்டில் எங்கே தங்கத் தொட்டில எங்கே: பவுன் காசும் எங்கே: கொண்ட காத லெங்கே: உத்தியோகம் எங்கே வியாபாரம் எங்கே! துறைத்தனமும் எங்கே அதைக் காட்டு: அரைக்கா சளவாகிலும் தாசருக் கியாத கருe: மிக்க வறுமி - கொண்ட கன்னி யிருக்கத் தாசி தன்னிடைச் சுகித்தசண்டாளா! - என்றும் கருத்திற் சிவநாமத்தைத் துதித்திடாமல் - வின் பொழுதைப் போக்குகின்ற கழுதை எங்கள் கடவுளைத் துதியாத மடையா! வா! எனத்தானே உதையானோ! என்ன செய்குவாய் மனமே - நாளை எமனிடத்தில் - நீ என்ன செய்குவாய் மனமே" (தொடர்ச்சி 480 ஆம் பக்கம் பார்க்க.)